Category

தமிழ்

Category

எங்கோ படித்த மாதிரி இருக்கு, ஆனால் நினைவில் இல்லை. எம்.ஜி.ஆரின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றான, அழகிய சிம்லாவில் அவர் துள்ளிக்குதித்து ஆடும், பாடும் “புதிய வானம், புதிய பூமி” (அன்பே வா) பாடல். சில ஆண்டுகளுக்கு முன் நான் முதல் முறையாக சிம்லா சென்றப் போது பார்க்க விரும்பியது இந்த “மால் வீதி”யை (Mall Road) தான். இந்தப் பாடலில் புரட்சி தலைவர் கையில் ஒரு சிகப்பு பெட்டியும், கூடவே ஒரு சிறு தடியும் வைத்திருப்பார். பாடல் முழுவதும் இது இரண்டும் அவர் கையிலேயே இருக்கும். சென்னையில் இருந்து விமானத்தில் வந்து இறங்கியிருப்பார், அதனால் பெட்டி சரி, ஆனால் அந்த தடி எதற்கு? யாருக்காவது தெரியுமா? எனக்கு கற்பனைக் காரணங்களை விட நிஜமான காரணத்தை அறிந்துக் கொள்ள விருப்பம். பாடல் முழுக்க அரசியல் நெடி வெளிப்படையாக இருக்கும், அதனால் இந்த தடி செங்கோலை குறிக்கிறதா? அல்லது நடனத்திற்கான ஒரு “நிலைகொள்ளச்…

எனக்கு இசை அறிவு கிடையாது. சபாவிற்கு சென்று கச்சேரியில் உட்காரும் பொறுமையெல்லாம் நிச்சயம் கிடையாது. சீசன் டிக்கேட் கிடைத்தால் நாடகங்களுக்கு செல்வேன், அவ்வளவு தான். ஆனால் இன்று திரு சஞ்சய் சுப்ரமணியனின் “தமிழும் நானும்” இணைய வழி கச்சேரியில், தமிழ் பாடல்கள் என்பதால் அம்மாவுடன் அமர்ந்து வீட்டிலிருக்கும் திரையரங்கில் பார்த்தேன், கேட்டேன். அருமை. மெய் மறந்துப்…

சில வாரங்கள் முன்பு, நண்பர் திரு சுஜாதா தேசிகன் (Desikan Narayanan) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தப் போது, ராயல்டி என்று பேச்சு வந்தது. என் தாத்தா லிப்கோ (LIFCO Publishers Pvt. Ltd.) நிறுவனர் திரு கிருஷ்ணசாமி சர்மா (LIFCO Sarmaji) அவர்களுக்கு திரு ராஜாஜி அவர்களோடு இந்த விசயத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு…

அம்மா வந்தாள் – திரு தி. ஜானகிராமன் இதற்கு முன் நான் எழுத்தாளர் தி. ஜானகிராமன் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரின் ஒன்பது நாவல்களில் எதையுமே படித்ததில்லை. அவரின் “மோகமுள்” புதினம் 1995ஆம் ஆண்டு திரைப்படமாக வந்தப் போது பார்த்துள்ளேன், அப்போதே  அவரின் படைப்புகளைப் படித்திருக்க வேண்டும், தவறவிட்டேன். கடந்த சில வாரங்களாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் நண்பர் திரு மாலன் அவர்கள் தி.ஜாவின் நூற்றாண்டு நினைவாக அவரின் படைப்புகளிலிருந்து பல முத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அதில் கவரப்பட்டு தி.ஜாவின் “அம்மா வந்தாள்” நாவலை கிண்டிலில் வாங்கிப் படித்தேன். இரண்டு நாட்களாக அதில் வந்த கதாப்பாத்திரங்களும், ஊரும் தான் என் நினைவிலும் கனவிலும் வருகிறது, அந்தளவு என்னைப் பாதித்துவிட்டது. கதை ஆரம்பிப்பது சித்தன்குளத்துக் காவேரி கரையில். அந்த முதல் பத்தியிலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறார் தி.ஜா, என்ன உவமைப் பாருங்கள். // சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால்,…

நகரத்தில் (சென்னை) பிறந்து, இங்கேயே வளர்ந்து, சொந்த ஊரின் தொடர்புகள் இல்லாமல் இருக்கும் பலரைப் போன்றவன் நான், அதனால் தான் என்னவோ தமிழ் நாட்டில் முழுவதும் இருக்கும் எண்ணற்ற ஊர் தெய்வங்களை, காவல் தெய்வங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஐயனார், மதுரைவீரன், பாடிகார்ட் முனீஸ்வரர் போன்றவர்களை கேள்விப்பட்டதோடு சரி, அதற்கு மேல் தெரிந்ததெல்லாம் தமிழ்…