-
A real-world example of A/B testing!
What to price a bespoke suit, should it be Rs 6000 or make it tempting at Rs 5999? Rather than debate endlessly in meeting rooms or hire a consultant, this tailor in Chennai seems to have implemented the acclaimed split testing. Based on the price the walking customer(s) asks he will know which billboard is effective – he will also know which size, portrait or landscape works. Smart guy! #billboardadvertising #chennai #bespoketailoring #pricingstrategy #abtesting
-
Sri Sakthi Santhiyamman temple in Chennai Domestic Airport
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மெட்ராஸ் விமானநிலையத்தில், அதாவது சென்னை ஏர்போர்ட்டில் இருந்து பல ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறேன், சமீபத்தில் ஏர்போர்ட் வளாகத்தில் திறந்துள்ள பி. வி. ஆர். திரையரங்கில் சில படங்களையும் போய் பார்த்துவிட்டேன். இருந்தும் அங்கே வளாகத்தினுள் இருக்கும் புகழ்பெற்ற ஓர் அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததில்லை. இன்று தான் அதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ சக்தி சந்தியம்மன் ஆலயம் என்ற இந்தக் கோயிலில் அம்மன் சன்னிதியோடு திரு ஐயப்பன், திரு கணபதி, திரு சிவன், நவக்கிரகம் என்று சில துணை சன்னிதிகளும் இருக்கிறது. நல்ல முறையில், சுத்தமாக பராமரிக்கப்படுவது போலத் தோன்றுகிறது. அடுத்த முறை, வாய்ப்பு இருப்பின் அவசரப்படாமல், சீக்கிரம் புறப்பட்டு சென்று அம்மனைத் தரிசிக்கவும். இந்தியாவில் இருக்கும் வேறு எந்த விமான நிலையத்திலும் வளாகத்தினுள் கோயில் எதுவும் கிடையாது என்று சில ஆண்டுகளுக்கு முன் நாளிதழில் படித்த நினைவு. அந்த இடத்தில் விமானநிலையம் கட்டப்பட இடம் கையகப்படுத்திய போது, அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் வேண்டிக்கொண்டதால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்படும்…
-
சென்னையில் கட்டுமானங்கள் பெருகி வருகிறது!
கரோனாவுக்குப் பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லாச் சுற்றுலாத் தலங்களுக்கும், விமானங்களிலும் பயணம் செய்கிறார்கள். சுற்றுலாவுக்கு அடுத்ததாக அதி வேகமாகப் பல இடங்களிலும் வேலை நடைபெறுவது என்றால் அது கட்டிடத்துறை போலிருக்கிறது. சென்னையில் திரும்பிய இடமெல்லாம் பழைய வீடுகளை இடித்து புது அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது, தென் சென்னையில் அப்படிக் கட்டப்படுவது எல்லாமே ஆடம்பரக் குடியிருப்புகள் தான், சில அதி சொகுசு குடியிருப்புகள் (Super Luxury). பெருந்தொற்று காலத்தில் இந்தக் கட்டுமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கலாம், அதனால் ஒரே சமயத்தில் பல இடங்களிலும் வேலை நடப்பது போல் தோன்றுகின்றது. நான் இருக்கும் தெருவில் சென்ற இரண்டு வருடமாக அடுத்த வீட்டில் கட்டிட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சென்ற வாரம் தான் ஓர் அளவுக்கு முடிந்தது. அதற்குள், எதிர் வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டத் தொடங்கிவிட்டார்கள். நேற்றிலிருந்து எங்கள் வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் ஒரு வீடும் இடிக்கப்படத் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தொடர்ந்து…
-
Finding the metro station at Chennai Domestic Airport
I was looking for the metro station at Chennai Domestic Airport, but I couldn’t find any signs. I thought they forgot to put them up. I asked the staff for help, and they pointed to the floor. There they were, the signs, right under my nose. It seems Chennai Metro knows its audience too well. They know we’re all glued to our phones, so they put the signs where we can see them. Genius or madness? You decide. 😂 Do you like it?
-
குடி குடியைக் கெடுக்கும்
இது சமூக சீரழிவு. கலாச்சார சீரழிவு என்று சொல்லவில்லை, ஆனால் கண்டிப்பாகச் சமூக சீரழிவு. பெண்கள், ஆண்கள் என்று பாகுபாடு இல்லை, யாராக இருந்தாலும் அவர்களை மறந்து/அல்லது வேண்டும் என்றே குடித்துவிட்டு ரௌடியிசம் பண்ணுவது சமூக சீரழிவு தான். இந்த மாநிலத்தில் குடிக்கவில்லையா, அந்த நாட்டில் குடிக்கவில்லையா என்ற சண்டைக்கு வரவில்லை. இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து எந்த மாதிரியான ஓர் உலகத்தில் வாழுகிறோம் என்று நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்? 22 மார்ச் 2023 இந்து தமிழ் திசை நாளிதழில் வந்த செய்தி “திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே மது போதையில் பேருந்துக்கு அடியில் படுத்து ரகளையில் ஈடுபட்ட பெண்கள். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே வாலாஜா சாலையில் மார்ச் 17-ம் தேதி நள்ளிரவு 6 இளம் பெண்கள் மது போதையில் அந்த வழியாகச் சென்ற நபர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அந்த வழியாக வந்த மாநகர அரசுப் பேருந்தின் முன்படுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அதோடு நின்றுவிடாமல் சரக்கு…
-
தவறாக மாட்டிக் கொண்டேன்!
இன்றைக்குக் காலை மைலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் அருகே ஒரு துக்க நிகழ்விற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. பொதுவாக அந்தப் பகுதிக்கு காரில் செல்லக் கூடாது, நிறுத்த இடம் கிடைக்கவே கிடைக்காது என்பது பிறந்த குழந்தை உட்படச் சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெரியும். அதுவும் இப்போது மெட்ரோ பணிகள் வேறு, கேட்கவே வேண்டாம். காலை எட்டு மணி தானே, கடைகள் திறந்திருக்காது பார்க்கிங் கிடைக்கும் என நினைத்து காரை எடுத்துக் கொண்டு சென்றது என் முதல் தவறு. அங்கே கிழக்கு மாட வீதியில், பாரதிய வித்யா பவன் வாசலில் நிறுத்திவிடலாம் என்பது என் திட்டம். ஆனால் எனக்கு முன்பே பல நூறு வாகனங்கள் எப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்பது தெரியாமல் நான் போய் இடம் கிடைக்காமல் திண்டாடினேன். அதற்குள் என் அன்பு மனைவி “இதற்குத் தான் கார் வேண்டாம் என்று சொன்னேன்” என ஆரம்பிக்க, எனக்குப் பின்னால் வாகனங்கள் வந்து கொண்டேயிருக்க, அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்று நினைத்து கோயிலை காரில் ஒரு சுற்றுச் சுற்றினால்…
-
எனக்கு வந்த இந்த வருட காய்ச்சல்
இரண்டு நாட்களுக்கு முன் ஆரம்பித்தது. முதலில் வறட்டு தொண்டை மற்றும் சோர்வு. நேற்று அது முன்னேறிக் காய்ச்சல், அதீத உடல் வலி, பயங்கரச் சோர்வு என ஆனது. மருத்துவரைப் பார்த்தேன், வழக்கமான மாத்திரைகள் எழுதிக் கொடுத்து நான்கைந்து நாட்களில் சரியாகிவிடும் என்றார். இன்று பரவாயில்லை. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் பரவும் தொற்றுகள், இந்த ஆண்டு மார்ச் வரை தொடர்வது புதிர். நான் புத்திசாலியாகத் தப்பித்துவிட்டேன் என நினைத்தேன் – மெட்ரோ, திரையரங்கு, கல்யாண மண்டபம், பல் பொருள் அங்காடிகள் எனக் கூட்டமான இடங்களில் எப்போதும் N95 மாஸ்க் அணிந்து தான் செல்கிறேன், சனிடைசர் பயன்படுத்துகிறேன், பெருந்தொற்று முடிந்தும் கூட. இருந்தும் இந்த வருட ஃப்ளூ என்னைப் பிடித்துவிட்டது. இரண்டு வாரம் முன்னர் என் பையன் கல்லூரியில் ஆண்டு விழா, அதிலிருந்து அவன் கொண்டு வந்ததாகத் தான் இது இருக்க வேண்டும். அவனுக்குப் போன வாரம் சளி, இருமல், வேறு எதுவும் தொந்தரவு இல்லை. அவனை உடனே தனிமைப் படுத்தியாயிற்று. அவனும் என்னைப் போல முகக்கவசம்…
-
Test drive an electric scooter
Driving a car in the city, post-pandemic has become super stressful due to increased traffic and Chennai Corporation’s endless infra projects. I have been planning to buy a two-wheeler for some time for going to nearby places. I was clear that it would only be electric. #AtherEnergy was top in my list and I might opt for leasing the vehicle. Do you own an electric scooter, what’s been your experience? About a decade and a half ago, in 2008 I bought the first generation of (Ultra brand) Electric scooters in India. It was based on the lead acid battery, unlike the current Lithium Ion batteries. Every two years, I had…