-
ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை நுண்ணறிவு இதிலும் வருகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளச் சென்ற வாரம் அந்த நிறுவனத்தின் வருடாந்திர மென் பொறியாளர்களின் மாநாடான மைக்ரோஃசாப்ட் பில்ட் 2023-ல் என்னென்ன சொல்லப்பட்டன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். இந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே: விண்டோஸ் கோ-பைலட் இன்றைக்குச் செல்பேசியாகட்டும் கணினியாகட்டும்… அவற்றில் இருக்கும் வசதிகள் பல ஆயிரம். என்னென்ன வசதிகள் இருக்கின்றன, அவற்றை எங்கே போய் இயக்குவது, எப்படி பயன்படுத்துவது என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்வது இயலாத செயல். தேடுபொறியில் தேடிக் கண்டு கொண்டாலும் அவற்றைச் சரியாக இயக்குவது கடினம். இந்தக் குறையைக் களைய, ‘மைக்ரோசாப்ட் துணை விமானி’ (கோ-பைலட்) என்னும் சேவையை விண்டோஸில் கொண்டு வருகிறார்கள். இதைக் கொண்டு என்ன செய்யலாம்? கோப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்…
-
Murasu Anjal keyboard is now in Windows 11
Rejoice! Murasu Anjal is now part of Microsoft Windows 11. After decades of waiting, Tamilians the world over can now use out-of-the-box the gold standard for Tamil language input in PC, the one-and-only Murasu Anjal in Windows 11. It is now an operating system feature. No need to install the app separately, just go to language settings, and add the keyboard. Please use it and share your feedback with Microsoft using the Feedback Hub app in Windows 11. It is currently available only for Windows 11, Version 10.0.22621.1344 and above. The Tamil99, the keyboard layout standard prescribed by the Government of Tamil Nadu has been available in Windows 10, from…
-
Windows File Recovery
பொதுவாக விண்டோஸ் கணினியில் கோப்புகளை அழித்தால் (டெலீட்), சமர்த்தாக அவை ரீசைக்கிள் பின் (Recycle Bin) என்னும் சிறப்பு கோப்புறையில் (போல்டர்) போய் உட்கார்ந்துவிடும். தவறுதலாக அழித்திருந்தால், அங்கே போய்ச் சுலபமாக மீட்டெடுக்கலாம். ஆனால் இந்த ரீசைக்கிள் பின் வசதி, யு-எஸ்-பி பென்-டிரைவ்களுக்கு, காமிராவில் போடும் மெமரி-கார்ட்களுக்குக் (சிறிய சேமிப்பு அட்டை) கிடையாது. அவற்றில் அழித்தது அழித்தது தான் – போயே போச்சு! நம்மில் பலர், இப்படிச் சில முக்கியமான பதிவுகளை இழந்திருக்கிறோம். இந்தக் கோப்புகளை மீட்டெடுக்கச் சில வழிகளை இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் வந்துள்ள எனது கட்டுரையில் படிக்கலாம். இந்த வசதியைப் பற்றி பார்க்கும்முன் விண்டோஸில் ஒரு கோப்பை அழிக்கும் போது என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம். விண்டோஸில் இருக்கும் ஒவ்வொரு டிரைவுக்கும் (C:, D: என்று) அதனுள் மாஸ்டர்-ஃபைல்-டேபிள் (MFT) என்னும் ஓர் அட்டவணை இருக்கும். டிரைவில் இருக்கும் ஒவ்வொரு ஃபைலும் எந்த இடத்தில் எழுதப்பட்டுள்ளது, அதன் பெயர் என்ன, அதன் அளவு என்ன என்று பல விவரங்களும் இந்த…
-
ஜன்னல் ரகசியங்கள்
இன்று பெரும்பாலான கணினிகளில் இருக்கும் இயங்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10. அதில் நமக்கு அதிகம் தெரியாமல் பல வசதிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இன்றைய கட்டுரையில் பார்க்கலாம்: செல்பேசியை இணைக்கவும், படம் எடுக்கவும், சிறப்பு விசைகள், மற்றும் பழுது பார்க்கவும். இவையெல்லாம் செய்தும் விண்டோஸ் மக்கர் செய்தால், கணினியில் இருந்து அதை முழுவதுமாக நீக்கிவிட்டு மீண்டும் நிறுவலாம். இதைச் செய்ய விண்டோஸ் அமைப்பில் (செட்டிங்ஸ்) “ரீசெட் மை பிஸி” (Reset my PC) என்னும் வசதியிருக்கிறது. இதைச் செய்வது சுலபம், ஆனால் சிலமணி நேரமாகும். உங்களால் கணினியை அதுவரை பயன்படுத்த முடியாது. நீங்கள் நிறுவியிருந்த எல்லாச் செயலிகளையும் மீண்டும் பதிவிறக்கி நிறுவ வேண்டும். இவற்றில் எதையும் செய்யும் முன்னர், கணினியில் இருக்கும் உங்களுக்குத் தேவையான எல்லா கோப்புகளையும் ஒரு பிரதி எடுத்து மேக கணினிமையிலோ அல்லது எக்ஸ்டர்னல் டிரைவ்வில் (External Hard drive) படி எடுத்து வைக்கவும். #windows10tips #TamilArticle
-
Windows 11 and Tamil
முகமது-பின்-துக்ளக் சினிமாவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுல்தான் துக்ளக்காக வரும் சோ, அழகாகத் தமிழ் பேசுவார். திடுக்கிட்டு, “உங்களுக்கு எப்படித் தமிழ் தெரியும்..?” என்று கேட்டால், “என் காலத்திலேயே நான் ஓர் தமிழ் மேதாவி என எல்லோருக்கும் தெரியும்” என்று கிண்டலாகச் சொல்லுவார். அதுபோல, மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்கு தளத்தில் தமிழ் தோன்றவும், தமிழில் எழுதவும், தமிழைப் புரிந்து கொள்ளவும் முடியும் என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். உண்மையில் இருப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அதாவது விண்டோஸ் 2000லேயே தமிழ் வசதி வரத் தொடங்கிவிட்டது. விண்டோஸ் 11-ல் இருக்கும் தமிழுக்கான புதி வசதிகளை இங்கே பார்க்கலாம். இவற்றைக் கொண்டு, ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்களும்கூடக் கணினியை எளிதாகப் பயன்படுத்தலாம். 1. தமிழ் காட்சி மொழி 2. தமிழில் எழுதுங்கள் – விசைப்பலகை 3. தமிழில் பேசு 4. தமிழ் பிழை திருத்தி … இன்றைய மெட்ராஸ் பேப்பர் இதழில் என் கட்டுரையின் தொடக்க பத்திகள் மற்றும் பகுதிகளின் தலைப்புகள்.
-
How to select a laptop for your need?
இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் எனதுக் கட்டுரை – புது லேப்டாப்பைத் தேர்வு செய்வது எப்படி?. உங்கள் கருத்துக்களைப் பகிரவும். எது உங்கள் செல்லப் பெட்டி? செல்பேசியின் மூலமாகவே இன்று வங்கிப் பரிமாற்றங்கள் தொடங்கி, ஷாப்பிங், சினிமா பார்ப்பது வரையில் அனைத்தையும் செய்து பழகிவிட்டது. அந்தச் சிறிய திரையைப் பலமணி நேரம் கண்ணும் கையும் வலிக்கப் பயன்படுத்துவது கடினம் என்பதும் நமக்குப் புரிந்துதானிருக்கிறது. இதற்கு நமக்குத் தேவையான மாற்று, ஒரு மடிக்கணினி. உங்களுக்கேற்ற மடிக்கணினியை(லேப்டாப்)த் தேர்வு செய்வதற்கான மூன்று யோசனைகள். தொடர்ந்துப் படிக்க. #madraspaper #windowslaptop #ipad #chromebook
-
Windows Tip: How to add an old printer to Windows 10 or 11
A friend wanted help, he has an old HP Laserjet 1018 printer and was unable to get it recognized on his Windows 10 laptop. The printer is an old model, so after connecting by the USB port, Windows was not showing it automatically. The HP.COM drivers download page was unhelpful, it said there are no drivers and suggested we use the drivers that come with the operating system. In Windows, “Add a Printer” wizard there is an option “Add Manually”. That lists only Generic and Microsoft, there were no other manufacturers including HP listed. I remembered, that starting in Windows 10, Microsoft doesn’t pre-download and list the thousands of printers…
-
Windows Tip: Read encrypted files after hard disk upgrade
Recently a friend called & I could sense from his voice the panic. A few days ago, he got his laptop running Windows 10 back from service. The PC was slow, so he had purchased a hardware upgrade, from a (magnetic) hard drive to an SSD (Solid State Drive) at the official service centre. To go for a new SSD is a cost-effective and effective way to improve the performance of old Windows or Mac computers. Last year, I gave new life to a decade-old Core i3 Laptop by putting in a new 128GB SSD & 8GB RAM on the PC, at a nominal cost of INR 3000 (USD 38)…