Tag

Reading

Browsing

நல்லவனுக்கு மட்டும்தான் வாழ்க்கை திருவிழாவாகிறது – ரால்ப் வால்டோ எமர்சன். ஊரெல்லாம், சமூக வலைத்தளங்களில், செய்திகளில் “கொரோனா, கொரோனா” என்ற அச்சப் படுத்திக் கொண்டிருக்கும் போது – உலகத்தின் மீதும், மக்களின் மீதும், நம்பிக்கையை, நமக்கு கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்தும் வகையில் நடந்தது இந்த நிகழ்ச்சி. என்ன நிகழ்ச்சி என்று கேட்கிறீர்களா? திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின் புதிய பயணக்கட்டுரைத் தொகுப்பான “சிந்தை கவரும் திருவிழாக்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா தான் அது. புத்தகங்களைப் படிப்பது குறைந்திருக்கும் இன்றைய காலத்தில், புத்தகங்களை வாங்குவது என்பதே அரிதாகவிட்டது, ஒரு புத்தகத்தை விற்பனைக்கு எடுத்துச் சென்று சாதிப்பது மிகப் கடினமான ஒன்று, அப்படிப்பட்ட சூழலில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் பார்வையாளர்கள் வருவதே மிகவும் அரிது – இதையெல்லாம் முறியடிக்கும் விதத்தில் இருந்தது நேற்றைய (14 மார்ச் 2020) மாலையில் நடந்த புத்தக வெளியீட்டு…

ஏனோ தெரியவில்லை, முன்பு என்றைக்கும் இல்லாமல், போன மாதம் திடீர் எனக் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து, மூன்று கவிதைகளும் எழுதிவிட்டேன். எனது முதல் கவிதை(கள்) முயற்சி, கீழே: பொருள் புரியும்படி எழுதியிருக்கிறேனா? தங்கள் கருத்தைக் கீழே எழுதினால், மகிழ்வேன்; திருத்திக்கொள்ள(வும்) உதவும். நன்றி!

For decades I have been a zero-email guy, while that has become a habit, I could never finish the bookmarks I save for “Reading Later” in the browser/Pocket or have an empty “Watch Later” in #YouTube. Last week, I managed to have an empty #Pocket reading list. Feels great!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் “யானை டாக்டர்” என்ற ஒரு சிறுகதையை நேற்றுப் படித்தேன். 35 பக்கங்களுக்கு மேல் போகும் இந்தக் கதை, 2011இல் அவரது வலைப்பதிவில் எழுதப்பட்டது. முழுவதும் அங்கேயே கிடைக்கிறது. என் பையன் பல மாதங்களுக்கு முன் படித்துவிட்டு எனக்கு லிங்க் அனுப்பிருந்தான், நேற்று தான் படித்தேன், ரசித்தேன். டாப்ஸ்லிப்பில் இருக்கும் யானைகளைக் குணப்படுத்தும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பற்றி, அவரை அருகிலிருந்து பார்க்கும் வனத்துறைக்குப் புதிதாக வந்த ஒரு இளம் அதிகாரியின் பார்வையில் எழுதப்பட்டது. ஆவணப்படம் போன்ற ஒரு கதை. சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை. யானைகளைப் பற்றியும் காட்டைப் பற்றியும் சில விசயங்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது. படித்துப் பாருங்கள், பிடிக்கும் என நினைத்துப் பகிர்கிறேன். Chapter 1, Chapter 2 and Chapter 3. //காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல், மே தவிர…

Chennai Book Fair is an annual pilgrimage for me: 2019, 2018, 2017, 2016, 2015, 2014, 2013, 2010. For those who are not in Chennai and will miss out on the annual Chennai Book Fair, I would like to share this photoblog with nearly a hundred photos that I shot for your benefit. Hope you all get a feel of a virtual tour of the fair, since it is about books, I have focused on the book titles readable and not the shops and surroundings :-) [Disclaimer: By no means this coverage is comprehensive or the photos are my endorsement/liking. I have…