-
ஆன்ட்ராய்ட் பதிநான்கு
ஆப்பிள் நிறுவனம் புது ஐ.ஓஎஸ். பதிப்பை வெளியிட்டால், சில நாட்களிலே பலரின் ஐபோனுக்கும் அது கிடைத்துவிடும். ஆனால் கூகுள் புது ஆன்ட்ராய்ட் பதிப்பை வெளியிட்டால் பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும், நம்மை வந்து சேர. பல நேரங்களில் அது நாம் வைத்திருக்கும் செல்பேசிக்கு வராமலே இருக்கும். ஆனாலும் இந்தியாவில் விற்கப்படும் செல்பேசிகளில் தொண்ணூற்றைந்து சதவீதம் ஆன்ட்ராய்ட் என்பதால் அதன் ஒவ்வொரு பதிப்பில் வரும் வசதிகளைப் பயனர்கள் அறிவது அவசியமாகிறது. அப்படி ஆன்ட்ராய்ட் 13 (இது சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது) மற்றும் 14 (இது தற்போது தான் உருவாக்கப்பட்டு வருகிறது) பதிப்புகளில் வரும் வசதிகளை பார்க்கலாம். 1️⃣செயலிகள் தனித்தனி மொழி பேசலாம் 2️⃣பிரதி எடுத்ததை மறந்துவிடு 3️⃣செயலிகளின் இரட்டை வேடம் 4️⃣படங்களை பகுத்தறிந்து பகிரலாம் 5️⃣பருத்துவிட்ட மென்பொருட்களை நீக்கவும் 6️⃣இரண்டு சிம்-கார்டில் சிறந்ததைப் பயன்படுத்தவும் தொடர்ந்து படிக்க மெட்ராஸ் பேப்பர் இதழை வாசிக்கவும்.
-
ஆன்ட்ராய்ட் உதவிக் குறிப்புகள்
ஐஃபோன் என்றால் அதில் ஒரே இயங்குதளம் தான்: அது ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-ஓ-எஸ். இது ஒரு காப்புரிமை பெற்ற படைப்பு. வேறு எவரும் இதை வெளியிட முடியாது . ஆனால் ஆன்ட்ராய்ட் அப்படியில்லை. அது ஒரு திறன்மூலப் படைப்பு. அதனால் ஒவ்வொரு செல்பேசி உற்பத்தியாளரும் மூல ஆன்ட்ராய்ட் மென்பொருளைப் பிரதியெடுத்து அவர்களின் விருப்பத்திற்கு மாற்றி வெளியிட முடியும். அப்படித் தான் செய்கிறார்கள். இதனால்தான் சாம்சங் செல்பேசியினுள், ஒப்போ செல்பேசியினுள், ஒன்பிளஸ் செல்பேசியினுள் எல்லாம் இருப்பது ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான் என்றாலும், ஒவ்வொன்றும் அங்கங்கே மாறுபடுகின்றன. இன்று பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் செல்பேசிகளை இயக்குவது இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான். அதனால் அதிலிருக்கும் அதிகம் அறியப்படாத சில வசதிகளைப் பற்றிய உதவிக் குறிப்புகளை இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். 📲வலம்வரல், 📢அறிவிப்புகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டுங்கள், 🔍கூகுள் உதவியாளர் (Google Assistant), 🕵🏾♀️போனைக் கண்டுபிடிக்கவும் (Find My Device), 🔕தொந்தரவு செய்யாதே (Do Not Disturb), 🪟விட்ஜெட்டுகள் (Widgets), 👩🏾💻நிரலாளர் முறை எச்சரிக்கை! (Developer Mode). #மெட்ராஸ்பேப்பர் #ஆன்ட்ராய்ட்
-
USB-C, its origin and five special features
சென்ற வாரம் இந்தியத் தர நிர்ணய அமைவனம், (ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்குவது இந்த நிறுவனம் தான்) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் விற்கும் அனைத்து செல்பேசிகளுக்கும் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையில் தான் மின்னேற்றம் (சார்ஜிங்) இருத்தல் வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மடிக்கணினிகளிலும் இது கட்டாயமாக்கப்படும். யு.எஸ்.பி-சி ஏன் முக்கியம்? ‘சி’க்குச் சொல்வோம் சியர்ஸ்! இன்று வந்துள்ள மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையில் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையின் தோற்றம், அதன் ஐந்து சிறப்புகளை விளக்கியுள்ளேன். ஒன்று, யு.எஸ்.பி-சி முறையில் தகவலை மட்டுமில்லாமல், சாதனத்தை இயக்கத் தேவையான மின்சாரத்தையும் சேர்த்துக் கடக்கச் செய்ய முடியும். இரண்டு, இந்த முறை செருகிகளை மேலே, கீழே என எப்படி வேண்டுமானாலும் சொருகலாம். முழுக் கட்டுரையும் படிக்க ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுக்கலாமே!
-
Must have apps, my article in MadrasPaper
“உங்கள் நண்பர் யாரென்று சொல்லுங்கள், உங்களைப் பற்றி நான் சொல்கிறேன்” என்பார்கள். அதையே இன்றைக்கு இப்படிச் சொல்லலாம், “உங்கள் செல்பேசியின் முகப்புப் பக்கத்தைக் (ஹோம் ஸ்கிரீன்) காட்டுங்கள் நீங்கள் யாரென்று சொல்கிறேன்”. இந்த விஷயத்தில் பயனர்கள் இரண்டு வகை. முதல் வகை, அழகாக நகைக்கடை கண்ணாடித் தட்டுகளில் இருப்பது போல தரவிறக்கியுள்ள எல்லா செயலியின் சின்னங்களையும் வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள். அடுத்தவர்கள், இயங்குதளம் அதுவாகவே எங்கே சின்னங்களை நிறுவியதோ அங்கேயே விட்டுவிடுவார்கள். அதிலும் சிலர் கவனத்தில் இல்லாமல் அவர்களின் விருப்பமான செயலிகளின் சின்னங்களை இரண்டு அல்லது மூன்று முறை பல முகப்புப் பக்கங்களிலும் வைத்திருப்பார்கள். நமக்கு அடிக்கடி தேவைப்படும் செயலிகளை மட்டும் நிறுவிக் கொள்வதே எப்போதும் நல்லது. எவையெல்லாம் அப்படி அத்தியாவசிய வளையத்துக்குள் வரும்? இன்றைய இந்தக் கட்டுரையை தொடர்ந்துப் படிக்க, மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா எடுக்கவும்!
-
How to jot down in your mobile, notes and items to remember?
குறிப்புகள் முக்கியம்! நூறு ஆண்டுகள் கடந்தும் கணித மேதை ராமானுஜனின் சில கையெழுத்துக் குறிப்புகளை இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியொரு எழுத்து. இருக்கட்டும். நாமெல்லாம் மேதைகள் இல்லை. இருந்தாலும் அன்றாட வாழ்வில் பல விஷயங்களை, தொலைபேசி எண்களை, முகவரிகளை, தேதிகளைத் தினமும் குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் அவற்றை நாட்குறிப்பு அல்லது காகிதங்களில் எழுதி வைத்திருந்தோம். இப்போது பலரிடம் பேனாவே கிடையாது. பேனாவைப் பயன்படுத்துவதே கூரியரைப் பெற கையெழுத்து போடும் போது மட்டும் தான். மற்றபடி எல்லாவற்றுக்கும் செல்பேசி. செல்பேசியில் எப்படிக் குறிப்புகளை எடுப்பது? எல்லாவற்றையும் வாட்ஸ்-அப்பில் அனுப்ப முடியாது – உங்களுக்கு மட்டுமே தேவையான விஷயங்களை என்ன செய்வது..? சிலர் தங்களுக்குத் தாங்களே மின்-அஞ்சல் அனுப்பிக் கொள்வார்கள். இதெல்லாம் சரியான வழியில்லை. அல்லது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வழி.குறிப்புகளை எழுதி, வகைப்படுத்தி, பாதுகாத்து, தேடுவதைச் சுலபமாக்க சில பிரத்தியேகமான செயலிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றையும் அவற்றின் பயன்பாடுகளையும் பார்க்கலாம்… இன்று மெட்ராஸ் பேப்பரில் (28 செப்டெம்பர் 2022) வந்துள்ள எனதுக் கட்டுரையில் தொடர்ந்துப்…
-
Lesser known features in WhatsApp
ஒரு போட்டி. உங்கள் பர்ஸில் இந்த நொடி எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா..? அன்றாடம் பல முறை பர்ஸை எடுக்கிறோம், ஆனாலும் அந்தளவு கவனிப்பதில்லை. அது போலவே தினம் பத்திலிருந்து, இருபது முறை நாம் அனைவரும் செல்பேசியில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியைப் பயன்படுத்துகிறோம். இருந்தும் அதில் இருக்கும் எல்லா வசதியும், புதிது புதிதாக வந்திருக்கும் வசதிகளும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட அதிகம் தெரியாத வாட்ஸ்-ஆப் வசதிகளை இங்கு பார்க்கலாம். போலிகள் செய்யக்கூடியதைப் பார்க்கும் முன், ஆபத்தான, செய்யக் கூடாததைப் பார்த்து விடுவோம். வாட்ஸ்-ஆப் அனுப்பும் வாசகங்களை வண்ணமயமாக வெவ்வேறு வண்ணங்களில் எழுதலாம், வரிகளின் கீழே கோடிட்டு காட்டலாம், ரகசியமாக செய்திகளை அனுப்பலாம் என்றெல்லாம் பல விளம்பரங்களை பேஸ்புக்கில் அல்லது இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள். இப்படியான வசதிகளைப் பெற அவர்களின் பிரேத்யேக தளங்களுக்கு உங்களை அழைப்பார்கள். கண்டிப்பாக இவை அனைத்தும் போலிகள். நேரத்தை வீணடிக்க வேண்டாம். உருப்படியாக எதையும் இவற்றைப் பயன்படுத்தி செய்ய முடியாது, அதுவும் தமிழ் போன்ற மொழிகளுக்கு…
-
How to secure the contents in your smartphone?
உங்களின் செல்பேசி தகவல்களைப் பாதுக்காப்பது எப்படி? இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் எனதுக் கட்டுரை. குறைந்தபட்ச இணையப் பாதுகாப்பறிவு என்பதைப் பற்றி எழுதியுள்ளேன், அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய, எளிய ஐந்து விஷயங்கள். படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களைப் பகிரவும். // பேகசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கு என்று கூகுளில் ஒரு நிமிடம் தேடிப் படியுங்கள். பிறகு இந்தக் கட்டுரைக்கு வாருங்கள். இந்த வழக்கில் உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட தொழில்நுட்பக் குழு, ஐந்து செல்பேசிகளில் மால்வேர் பதுங்கியிருக்கிறது; ஆனால் அவை பயனர்களின் கவனக் குறைவால், குறைந்தபட்ச இணைய பாதுகாப்பறிவுகூட இல்லாததால்தான் நடந்தது எனச் சொல்லியிருக்கிறது. அது என்ன குறைந்தபட்ச இணையப் பாதுகாப்பறிவு? லினக்ஸில் வைரஸ் வராது, ஐபோனில் இருந்து தகவல்களைத் திருட முடியாது என்பதெல்லாம் ஓரளவுக்குதான். உங்களிடம் முக்கியமான தகவல் இருக்கிறது அல்லது நீங்கள் ஒரு பெரிய பிரபலம் என்பதால், உங்களின் கருவியைக் கைதேர்ந்த வல்லுநர் குழு குறி வைத்துவிட்டால் உங்களால் செய்ய கூடியது ஒன்றும் கிடையாது. பயமுறுத்தியது போதும். நம் கருவிகளைப் பாதுகாப்பது…
-
What to do before you change your old smart phone?
சில வாரங்களுக்கு முன் புதிய செல்பேசியை வாங்கியவுடன் செய்ய வேண்டிய அவசியமான டெக்னிகல் சடங்குகளைப் பற்றிப் பார்த்தோம். அது மட்டும் போதுமா? புதியது வந்துவிட்டதால் பழையதை அப்படியே தூக்கிப் போட்டுவிடலாமா? ஒன்று, பழைய செல்பேசியை அப்படியே உள்ளே வைத்துவிடுவோம்; இல்லை கடைக்காரரிடம் ஒரு சில நூறு ரூபாய்களுக்குக் கொடுத்துவிடுவோம். சிலபேர் நண்பர்கள் மூலம் தெரிந்தவர்களுக்கு அல்லது தெரியாதவர்களுக்கு நேரடியாகவும் செகண்ட்ஸில் விற்கிறார்கள். இவற்றில் சில ஆபத்துகள் உள்ளன. ஐ.எம்.இ.ஐ. ரசீது ஒவ்வொரு செல்பேசியிலும், கார் நம்பர் போன்ற முக்கிய அடையாள குறியீடு ஒன்று அதன் நினைவு செல்களில் இருக்கிறது. அதற்கு IMEI எண் என்று பெயர். நீங்களோ இல்லை வேறு யாரோ உங்கள் பழைய செல்பேசியில் புதிய சிம் கார்டு போட்டு, வேறு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தினாலும், இந்த ஐ. எம். இ. ஐ.யை வைத்து அந்த செல்பேசியை முதலில் வாங்கியது நீங்கள்தான் எனக் காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியும். அதை நம்மால் மாற்ற முடியாது; அப்படியே மாற்றினாலும் அது 2017இல் வந்த சட்டப்படி இந்தியாவில்…