கடந்த வாரம் (பேஸ்புக்) மெட்டா நிறுவனத்தின் திறந்த வடிவ (பொதுவாகத் திறமூல என்று சொல்லலாம்) லாமா3 (LLAMA3) என்கிற இயற்றறிவு மிகப்பெரிய மொழிமாதிரியை வெளியிட்டுள்ளார்கள். ChatGPT மற்றும் Google Geminiயைப் போல அல்லாமல் இது உங்கள் கணினியிலேயே இயங்கக்கூடியது, யாருக்கும் பணம் எதுவும் கொடுக்கா வேண்டாம், இலவசச் செயற்கை நுண்ணறிவு!

எனது சக்திவாய்ந்த விண்டோஸ் கணினியில்1 நன்றாகவே வேலை செய்கிறது, இதற்காகவே இந்த மாதம் நிறையச் செலவு செய்து எனது கணினியைப் புதுப்பித்தேன்.

தற்போது லாமா-மூன்றுக்கு ஆங்கிலம் மட்டுமே சரியாகத் தெரிந்திருக்கிறது. விரைவில் மெட்டா , மேலும் பல மொழிகளை இதற்கு அவர்களின் பேஸ்புக்கில் இருக்கும் தரவுகளைக் கொண்டு பயிற்றுவிப்பார்கள்2 என்று நம்பலாம். சமீப ஆண்டுகளில் பேஸ்புக்கால் நடக்கும் நன்மையாக அது இருக்கும்.

லாமா-மூன்றைக் கொண்டு நாம் கட்டுரைகளைச் சுருக்கலாம், மாற்றி எழுதலாம், நான் இப்போது சுமாராக எழுதிக் கொண்டிருப்பதை மெருகேற்றலாம், யோசனைகளைச் சொல்லச் சொல்லலாம் என்று பலவற்றைச் செய்ய முடியும், எல்லாம் நம்முடைய தரவுகள் நம் கணினியை விட்டு வெளியில் போகாமலே. இதன் திறமூல வடிவம் எல்லாருக்குமானது அல்ல, அதனால் மெட்டா அவர்களின் பேஸ்புக், வட்ஸ்-ஆப், இன்ஸ்டாக்ராம் போன்ற பயனர் செயலிகளில் இலவசமாகக் கொண்டு வருகிறார்கள் அப்போது எளிதாகப் பயன்படுத்திப் பார்க்கலாம் – தற்போது அமெரிக்க, சிங்கப்பூர், பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் சோதனையில் இருக்கிறது.

கீழேயிருக்கும் படத்தில் நீங்கள் பார்க்கும் ஆங்கிலப் பத்திகள் லாமா-மூன்றால் மாற்றி எழுதப்பட்டவை.

Meta's LLAMA3 7B Model in Action in Open WebUI & OLLAMA

Meta’s LLAMA3 7B Model in Action in Open WebUI & OLLAMA

Reference:

  • *1 Gigabyte B450M motherboard, AMD Ryzen 7 5800X with Gigabyte nVIDIA GeForce RTX 3060 WindForce OC12G GPU.
  • *2 அவர்கள் தங்கள் மாதிரிகளைப் பயிற்றுவிக்க பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் தரவுகளைப் பயன்படுத்துவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு / வதந்தி. இதைப்  பகிரங்கமாக அவர்கள் எங்கேயும் தெரிந்த காரணங்களுக்காக ஒப்புக்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.