-
Gadgets package designers should remember users
Package Designers of Electronic gadgets should remember the customers. Their focus cannot be only on making the box attractive in showroom displays and reducing the package size. Many months ago, I bought a Logitech MX Master 2S on the recommendation of a friend. But the earlier mouse (Anker Ergonomic) I used lasted longer than I thought. Today it stopped working, and I got the unopened Logitech mouse package out of storage. When I opened the package of the Logitech mouse to my horror I couldn’t find the USB Wireless Receiver. I can’t now make a claim to Amazon support for the missing Dongle. Without it, the mouse won’t connect to…
-
செல்பேசிக்கு வரன் பார்க்கவும்!
புது செல்பேசி வாங்க முடிவு செய்துவிட்டீர்கள், ஆனால் எந்தச் செல்பேசியை வாங்குவது..? இன்று சந்தையில் வகை வகையாக, நூற்றுக்கணக்கில் செல்பேசிகள் கிடைக்கின்றன, அதில் நமக்கு ஏற்ற வகையை எப்படித் தேர்வு செய்வது என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கடந்த ஜூலை 13 ஆம் இதழில், புதுச் செல்பேசி வாங்கியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்திருந்தோம், இந்தக் கட்டுரை அதன் முன்பாகம் (Prequel). செல்பேசியைத் தேர்ந்தெடுக்கும் முன் உங்களை நீங்களே இரண்டு கேள்விகள் கேட்டுப் பதில் சொல்ல வேண்டும். முதலாவது, நீங்கள் கொடுக்க விரும்பும் விலை, இது நாற்பதாயிரத்தைத் தாண்டினால் மட்டுமே ஐஃபோன் ஒரு தேர்வாக இருக்கமுடியும், அதற்குக் கீழே என்றால் ஆன்ட்ராய்ட் மட்டுமே கிடைக்கும். அவற்றில் நாம் விரும்பிய நல்ல செல்பேசியைத் தேர்வு செய்யலாம். இரண்டாவது கேள்வி, காமிராவா, பேட்டரியா, திரையா உங்களுக்குச் செல்பேசியில் எது முக்கியம் என்பது. எல்லாமே என்று சொல்லக்கூடாது. எந்த வகைச் செல்பேசியாக இருந்தாலும் இதில் இரண்டுதான் உங்களின் விருப்பத்திற்கு அமையும். அவை எவை என்று முடிவு செய்துவிட்டுத் தேட…
-
Test drive an electric scooter
Driving a car in the city, post-pandemic has become super stressful due to increased traffic and Chennai Corporation’s endless infra projects. I have been planning to buy a two-wheeler for some time for going to nearby places. I was clear that it would only be electric. #AtherEnergy was top in my list and I might opt for leasing the vehicle. Do you own an electric scooter, what’s been your experience? About a decade and a half ago, in 2008 I bought the first generation of (Ultra brand) Electric scooters in India. It was based on the lead acid battery, unlike the current Lithium Ion batteries. Every two years, I had…
-
Chennai Trade Fair 2023
பொதுவாக எல்லா ஆண்டும் சென்னை தீவுத் திடலில் நடக்கும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சிக்கு சென்றுவிடுவேன். பெரியதாகப் பார்க்க அங்கே எதுவும் இருக்காது, அதே கடைகளும், தரம் குறைந்த சிற்றுண்டிகளும், சுவாரஸ்யமில்லாத அரசாங்கத்துறை அரங்குகளும் தான் இருக்கும். நான் போவது, என் அப்பா என்னைச் சிறிய வயதில் இங்கே அழைத்து வந்த நாட்களின் நினைவுகளுக்காக. இன்று 47 வது பொருட்காட்சி 2022-2023க்கு சென்றிருந்தேன். என் கண்ணில் முதலில்பட்டது உணவுக் கடைகள் தான் – பாப்கார்னில் ஆரம்பித்து, பஞ்சுமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பானிபூரி, ஜிகர்தண்டா, உருளை சுருட்டி, காலன் சூப், கார்லி பிலவர் பக்கோடா, டெல்லி அப்பளம் எனப் பல பல சிற்றுண்டிகள். ஆனால் எல்லாவற்றையும் பார்த்துப் படம் எடுத்ததோடு சரி, எதையும் வாங்கி சாப்பிடவில்லை. அங்கே விற்கப்படும் உணவின் தரம், உபயோகப்படுத்தும் நீரின் சுத்தம் எப்படியிருக்கும் என்று பயமாகவிருந்தது. அதனால் ஆரோக்கியம் கருதி எடுத்துச் சென்ற தண்ணீரைப் பருகி, ஓர் ஆவின் பனிக்கூழ் வாங்கி ரசித்துச் சாப்பிட்டுவிட்டு கடைகளை, அரசாங்கத்துறை அரங்குகளைப் பார்த்து (அதைப் பற்றிய…
-
Chennai International Book Fair 2023, CIBF2023
நானும் பாத்துட்டேன், நானும் பாத்துட்டேன், நானும் போய் பாத்துட்டேன்! முதல் முறையாகத் தமிழக அரசால் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கும் 46 ஆவது சென்னை புத்தகக் காட்சியோடு அதே வளாகத்தில் (சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்) தனி குளிரூட்டப்பட்ட அரங்கில் இந்த நிகழ்ச்சி சர்வதேசத் தரத்தில் 16 ஜனவரி முதல் 18 ஜனவரி (இன்று) மூன்று நாட்களுக்கு நடத்தப்படுகிறது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் புத்தகத் துறையில் இருப்பவர்கள் சந்தித்துக் கலந்துரையாடி, வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வசதியான ஏற்பாடு இந்தச் சர்வதேசப் புத்தகக் காட்சி. இதில் பல கலந்துரையாடல்களும், கருத்தரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தது. பொது மக்களுக்கானது இல்லை இந்தப் புத்தகக் காட்சி. இதே முறையில் தான் புகழ்பெற்ற ஜெர்மனி பிராங்க்பர்ட் புத்தகக் காட்சி இருக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தும் ஆசை! பொதுமக்களுக்கு அனுமதி உண்டா? இல்லையா? என்று அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அவர்களின் இணையத் தளத்திலும் அதற்கான விவரம் இல்லை. நம் இந்திய மரபே இது உங்களுக்கு இல்லை…
-
46th Chennai Book Fair 2023
எனது நினைவில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் தான் நான் இந்த அளவு குறைவாகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ஜனவரி 7ஆம் தேதி மதியம் ஒரு மணியிலிருந்து 5 மணி வரை அங்கேயிருந்த சுமார் ஆயிரம் அரங்குகளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, நான் வாங்கியது: மூன்று புத்தகங்களும், ஒன்பது முத்து காமிக்ஸும் தான். மொத்தச் செலவு ₹2000க்கு குறைவு. சென்ற ஆண்டு வாங்கிய புத்தகங்களை இன்னும் படிக்காததால், இந்த ஆண்டு இந்த சிக்கனம். மேலும் எனது பார்வையில் இந்த ஆண்டு புதிதாக, எண்ணத்தைக் கவரும் வகையில் எந்த புத்தகங்களும் கண்ணில் படவில்லை. சாதாரணமாகப் புத்தகக் காட்சி திறந்து ஒரு வாரம் கழித்துத் தான் பல புதுப் புத்தகங்களும் வரும். எனக்கு நேரம் இருப்பின், அடுத்த வாரம், ஒருமுறை மீண்டும் செல்லலாம், தெரியவில்லை. தென்னிந்தியாவின் விஷ்ணு ஆலயங்கள் (தமிழ்நாடு), திருமதி சித்ரா மாதவன் Aldous Huxley Brave New World – A graphic novel by Fred Fordham இயந்திரம், மலயாற்றூர் ராமகிருஷ்ணன், தமிழாக்கம் பா…
-
Don’t throw refill pack labels
இது சுக்கு காபியைப் பற்றியோ, அதன் பெயர்க் காரணம் பற்றியோ, இந்த உற்பத்தியாளர் பற்றிய பதிவோவில்லை. நான் என் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்ட யோசனையைப் பற்றியது. அட்டைப் பெட்டியில் வரும் மாவுகளை, டப்பாவில் கொட்டிவைக்கும் போது, இப்படி அட்டையிலிருந்து பெயரையும் பயன்படுத்தும் விவரங்களையும் வெட்டி, ஒட்டி வைத்தால், பயன்படுத்தும் போது என்ன பொருள் என்றும் தெரியும், எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும் விளங்கும். இந்த முந்தைய பதிவில் என் அம்மாவிடம் இருந்து நெகிழி மறுசுழற்சி யோசனையை இங்கே படிக்கலாம்.
-
What is Google TV?
இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டிவிக்கள் ஸ்மார்ட் டிவிக்கள் தான். அப்படி அவை ஸ்மார்ட் என்று அழைக்க அவற்றில் பயனர் இயங்குதளம், மற்றும் இணைய வசதி இருக்க வேண்டும். சோனி, சாம்சங் போன்ற டிவி உற்பத்தியாளர்கள் கொடுத்திருக்கும் வசதிகளை தாண்டி, நமக்கு விருப்பமான செயலிகளை (எப்படிச் செல்பேசியில் செய்கிறோமோ அதுபோல) பதிவிறக்கி நிறுவிக் கொள்ளும் வசதி இருக்க வேண்டும். செயலிகளைக் கொண்டு நெட்பிளிக்ஸ், யூட்யூப், போன்ற பல செயலிகளை டிவியைப் பயன்படுத்தி பெரிய திரையில் பார்க்கலாம். உங்களிடம் ஸ்மார்ட் அல்லாத பழைய டிவி இருந்தால், கவலை வேண்டாம். அதற்கு ஒரு புது அவதாரம் கொடுத்துவிடலாம். அதற்கு ஒரு சிறிய கருவி போதும். நீங்கள் புதிதாக டிவி வாங்குகிறீர்கள் என்றால் ஸ்மார்ட் டிவியா என்று பார்த்து வாங்கலாம். இன்று வெளிவந்த இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா எடுக்கவும்!