நீங்கள் மைக்ரோசாப்ட் எக்ஸெல் பயனராக இருந்தால், தவறுதலாக R1C1 என்கிற செல் ரெஃபரென்ஸ் ஸ்டைலுக்கு (குறிப்பு முறை) மாறிவிட்டிருந்தால்
பயன்படுத்தச் சிரமமாக இருக்கும். பல நாட்கள் இந்த முறையைப் பொறுத்துக் கொண்டுவிட்டு இன்று தெரிந்த A1, B2, C3 என்று செல்களைக் குறிக்கும் முறைக்கே திரும்பினேன். இப்போது தான் எளிதாக இருக்கிறது . மாற்றம் எவ்வளவு சிரமம் என்று இது போன்ற சமயங்களில் தான் தெரிகிறது.

விளக்கம்: எக்ஸெல் R1C1 முறையில், A1, B2, C3 போன்ற எழுத்துக்கள் மற்றும் எண்களுக்குப் பதிலாக வரிசை மற்றும் நிரல் எண்களைப் பயன்படுத்தி செல்களைக் குறிப்பிடலாம். இதில், ஒரு செல்லை A1, B2, C3 போன்ற எழுத்துக்களையும் எண்களையும் கொண்டு குறிப்பிடுவதற்குப் பதிலாக, செல்களைக் குறிக்க வரிசை மற்றும் நிரல் எண்களை பயன்படுத்தலாம். உதாரணம்: R1C1 என்பது Row 1, Column 1 (வரிசை 1, நிரல் 1) பழைய முறையில் A1.

அதோடு இந்த முறையில் செல்லுக்கான திசை மாற்றத்தைக் குறிப்பிடலாம். R[2]C[3] என்பது இரண்டு வரி கீழே, மூன்று காலம் வலதில் உள்ள செல். R[-1]C[-1] என்பது முந்தைய வரிசை மற்றும் முந்தைய நிரல். பெரும்பாலும் இந்த எதிர்மறை எண்கள் (முந்தைய) தான் எனக்குக் குழப்பமே.

இந்த முறையில் நன்மையும் இருக்கிறது: R1C1 முறையைப் பயன்படுத்தி பெரிய தரவுத்தொகுப்புகளுடன் பணிபுரிய முடியும். அதற்குத் தான் இது கொண்டுவரப்பட்டது.

கூடுதல் விவரம்: R1C1 முறையை இயக்குவதற்கு: File > Options > Formulas > R1C1 reference style.

Microsoft Excel R1C1 Reference style

Microsoft Excel R1C1 Reference style

#microsoftexcel #exceltips #productivityhacks

Categorized in:

Tagged in: