எங்கள் வீட்டில் வருடா வருடம் (2019, 2018), விமர்சையாக, இரண்டு அல்லது மூன்று கொலு அடுக்குகளில், பல படிகளாகக் கொலு வைப்போம். கொரோனா சூழ்நிலையால், என் அம்மாவும் அனுமதித்த காரணத்தால், இந்த ஆண்டு எளிதாக வைத்திருக்கிறோம். ஒரு வட்ட சாப்பிடும் மேசையில், மூன்று மரப் படிகளை வைத்து மிகச் சிறிய அளவிலான கொலு. நண்பர்களை, உற்றார், சுற்றத்தார்களை அழைக்கவில்லை. மன்னிக்கவும்! எங்கள் சகோதரிகளையும், என் பெற்றோர்களின் உடன் பிறந்தவர்களையும் அவர்களது குடும்பத்தினர்கள் வந்தால் வரவேற்க எண்ணம். அதுவும் முகக்கவசம் கட்டாயம் எனச் சொல்லத் திட்டம். கடவுளின் அருளில் அடுத்த ஆண்டு உலக மக்கள் ஆரோக்யமாக, பயமின்றி வாழும் சூழ்நிலை திரும்பி வர வேண்டுகிறேன் – அப்போது நல்ல முறையில் கொலு வைத்து விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க எண்ணம்.
I am blessed to have participated in a virtual program where His Holiness Dalai Lama addressed the students from around the world and the members of Dr APJ Abdul Kalam International Foundation on the event of the 89th Birthday celebrations…
சாப்பாடு ஐட்டங்கள் அதிகம் கிடைப்பதால் எனக்குப் பிடித்த பண்டிகைகளில் முதலாவது ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி / கோகுலாஷ்டமி: இரண்டுக்கும் வித்தியாசம் என்ன இங்கே பார்க்கலாம். ஆனால், இந்தக் கிருஷ்ண ஜயந்தி பண்டிகையில், அதுவும் வைணவர்களான (பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வழிபடுபவர்கள்) எங்களுக்கு எல்லா வருஷமும் குழப்பம் தான். எந்தத் தேதியில் கொண்டாடுவது என்று ஒவ்வொரு வீட்டிலிருக்கும்…
நகரத்தில் (சென்னை) பிறந்து, இங்கேயே வளர்ந்து, சொந்த ஊரின் தொடர்புகள் இல்லாமல் இருக்கும் பலரைப் போன்றவன் நான், அதனால் தான் என்னவோ தமிழ் நாட்டில் முழுவதும் இருக்கும் எண்ணற்ற ஊர் தெய்வங்களை, காவல் தெய்வங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஐயனார், மதுரைவீரன், பாடிகார்ட் முனீஸ்வரர் போன்றவர்களை கேள்விப்பட்டதோடு சரி, அதற்கு மேல் தெரிந்ததெல்லாம் தமிழ் சினிமா மூலமாகத் தான், அதுவும் பல சமயங்களில் கதையின் போக்குக்காக இந்தத் தெய்வங்களை மேலோட்டமாகத் தான் காட்டியிருப்பார்கள். என் போன்ற கிராமத்து வாசமே இல்லாதவர்களுக்குப் பல சமயங்களில் இந்தத் தெய்வங்களைப் பார்த்தாலே ஒருவித பயமாகயிருக்கும் – யோசித்துப் பார்த்தால் அந்தப் பிம்பத்திற்குத் தமிழ் சினிமாவும், என் அறியாமையும் தான் காரணமாக தோன்றுகிறது. எங்கள் குடும்பத்தில் வழிபாட்டுக் கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது, பெருமாள் கோயிலுக்குத் தான் அதிகம் செல்வோம், அங்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்று என் தாத்தா லிப்கோ திரு சர்மாவை அவர்கள்…