78000 years old human burial found in Kenya

மனிதர்கள் எப்போது மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் சடங்குகளை, குறிப்பாக ஈமச் சடங்குகளைச் செய்யத் துவங்கினார்கள் என்று கண்டுபிடிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல காலமாக முயன்று வருகிறார்கள். இதைத் தெரிந்துக் கொள்வதால் என்ன பயன்? இந்த வினாவிற்கு விடைத் தெரிந்தால், பரிணாம வளர்ச்சியைப் பற்றிய மற்ற பல புதிர்களுக்கு அது வழிக்காட்டக்கூடும். இறந்தவர்களை (சடலங்களை) அப்படியே விட்டுவிட்டுப் போகாமல் இருப்பவர்கள் குழுவாக/குடும்பமாக வாழ்ந்திருக்கக்கூடும், நாகரிகம் வளர தொடங்க இந்த அமைப்பு ஒரு முக்கிய அடித்தளம். எதற்கு இதையெல்லாம் இங்கே எழுதுகிறேன்? சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மனிதக் குல தொட்டில் என அழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில், கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு மலைக்குகையில் 78,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஓர் இரண்டு (அல்லது முன்று) வயது குழந்தையின் மிச்சங்களைக் கண்டுப்பிடித்துள்ளார்கள். “மோடோடோ” (ஸ்வாஹிலி மொழியில் குழந்தை என்று…

தமிழ்நாட்டில் வரும் தமிழ் வாசகங்கள்

தமிழ்நாட்டில் வரும் விளம்பரங்களில் தங்கிலீஷ் அதிகம் வருகிறது, கேட்டால் மக்களை ஈர்க்கும் வகையில், ஆங்கிலத்தில் (ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு) தான் கவர்ச்சியாக வாசகங்கள் அமைகின்றன என்கிறார்கள். இந்தத் தேர்தலில் இரு பெரியக் கட்சிகளும் தங்களின் (விளம்பரப் பாடல்) வாசகங்களை அழகாக, நினைவில் நிற்கும்படி தான் அமைத்திருந்தார்கள் – அதுவும் தமிழில்! (இதைச் சொல்லும் போது இதில் இருக்கும் முரணை நான் மறக்கவில்லை). நிறுவனங்களும் மற்றவர்களும் சொல்பவற்றை விடப் பிரபலமான கட்சிகளும், தமிழக (ஊராட்சிகள், மத்திய) அரசும் சொல்லும் வாசகங்கள் பட்டிதொட்டித் தொறும், பாமரனையும் சென்றடையும். அவர்கள் தமிழில் சொல்வதால் ஆங்கில மோகம் குறையும், அந்தத் தமிழ் வாசகங்களுக்குக் கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும், அடுத்தவர்கள் அதையே பயன்படுத்தும் போது அந்த வார்த்தைகள் எளிதாக மக்கள் நாவில் மனதில் போய் நிற்கும். இதற்கு சமீப கால உதாரணங்கள் சொல்லலாம் (உங்களுக்குத்…

Advertisements in Tamil for enterprise offerings

கணினியில் தமிழை முதல் தர மொழியாகக் கொண்டு வர வேண்டும் எனப் பலர் முப்பது/நாற்பது வருடங்களாகப் பாடுப்பட்டு வந்துள்ளார்கள். உத்தமத்தின் (INFITT) மூலமாக அவர்களின் அருகில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்னால் முடிந்தச் சிறிய வேலைகளும் (பங்கையும்) செய்துள்ளேன். அந்த பின்னணியில் இந்த விளம்பரம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஏன் என்றால்? உலகத்தின் மிக அதிக மதிப்புக் கொண்ட ஐந்து நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், அவர்களின் (அதிகமாக) பெரு நிறுவனங்களுக்கானப் படைப்பான டீம்ஸ் (Microsoft Teams) சேவையைப் பற்றி தமிழில் ஒரு பெரிய விளம்பரத்தை இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் கொடுத்துள்ளார்கள். இதில் தொழில்நுட்பமான விசயம் புதிதாக இல்லையென்றாலும், இது ஒரு முக்கிய குறியீடு – பெரு நிறுவன அதிகாரிகளிடம் தமிழ் மொழியில் பேசலாம், ஆங்கிலம் மட்டும் உதவாது – தமிழில் பேசினால் வியாபாரம்…

Rajathin Manoratham by Thiru Devan

ராஜத்தின் மனோரதம் – திரு தேவன் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் சொந்த வீடு கட்டுகிறார். அதில் அவர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை ஆசிரியர் திரு தேவன் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். நண்பர் ஸ்ரீ மான் ஜயத்தைப் போல் ஒருவர் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமா அல்லது அவர் ஓர் இடைஞ்சலா என்பது கதையின் முடிவு வரை ஓர் எதிர்பார்ப்பாகவே இருந்தது. வீடு வாங்க தீர்மானிப்பது, இடத்தைத் தேர்ந்தெடுப்பது, காண்ட்ராக்டர் மற்றும் இன்ஜினீயரை ஒப்பந்தம் செய்வது, கிணறு எடுப்பது, காவலரைப் பணியில் அமர்த்துவது, மேஸ்திரியிடம் பேசி விசயங்களைத் தெரிந்து கொள்வது, தச்சரிடம் அலமாரிகளின் விபரங்களைச் சொல்வது, பரணை எங்கெங்கே போடுவது, கொல்லத்துக் காரர்களின் வேலையைச் சரி பார்ப்பது என்று பல பணிகள் நடந்து கடைசியில் ‘ஷண்முக விலாசம்’ என்று பெயர் வைத்துக் குடிபோவது வரை செல்கிறது புத்தகம். வீடு…

Tamil Nadu Elections 2021 – how you feel determines the votes

தமிழ்நாட்டு தேர்தல் எந்தப் பக்கம் போனாலும் ஏப்ரல் 7யில் இருந்து மே 1 வரை தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளும், சமுக வலைத்தளங்களும் நிச்சயம் அமைதியாக இருக்கும். இந்த அமைதி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய வரம். அதை மக்களான நாம் வீணாக்காமல் இருக்க வேண்டும். கொரொனாவும் ஒதுங்கியிருக்க வேண்டும். முன் எப்போதும் இல்லாமல் இந்த முறை, என் நண்பர்கள் வட்டத்தில் யார் எந்தப் பக்கம் என்று, வெளிப்படையாகச் சொல்கிறார்கள். இரண்டு (முன்று) தரப்பிலும் எனக்கு நண்பர்கள் இருப்பது போல் நான் பழகுகிறேன் என நினைக்கிறேன். இப்படி அவர் அவர்களின் சார்பை வெளிப்படையாக சொல்வது, அதற்கு பிரச்சாரம் செய்வது, மாற்றுக் கட்சியினரை வசைப்பாடுவது ஜனநாயகத்திக்கு நல்லதா, தீங்கா, தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம், தேர்தல் என்பது யார் தகுதியானவர்கள் என்று யோசித்து வாக்களிப்பது இல்லை,…