• Articles

  மெட்டாவேர்ஸ்: சில குறிப்புகள்

  சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் .ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என்று மாற்றிக்கொண்டதிலிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய துறை மெய்நிகர் உலகம் (மெட்டாவேர்ஸ்) என்பது. விரைவில் இதே துறையினுள் ஆப்பிள் நிறுவனமும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை என்ன, எவ்வளவு தூரம் இவையெல்லாம் நடப்பில் சாத்தியம், இவற்றின் விலை என்ன என்பவற்றைப் பற்றிச் சிறிது பார்ப்போமா? இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள மூன்று முக்கிய தொழில்நுட்பங்களைப் பார்க்கலாம்: மதிப்புயர்த்திய மெய்ம்மை என்னும் ஆக்மென்டட் ரியாலிட்டி, சுருக்கமாக ஏ.ஆர். மெய்ந்நிகர் காட்சி என்னும் விரிச்சுவல் ரியாலிட்டி, சுருக்கமாக வி.ஆர். மெய்நிகர் வெளி என்னும் மெட்டாவேர்ஸ் இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (15 மார்ச் 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

 • Articles

  வித்தை காட்டும் கலை

  கறுப்பு வண்ணத்தில் சாதாரண உடை, தனக்குப் பின்னால் இருக்கும் திரையில் கறுப்பு வண்ணக் காட்சி, அதில் ஒரு சில வார்த்தைகள் வெள்ளை நிறத்தில் அவ்வளவு தான். ஆனால் அரங்கில் இருக்கும் அனைவரும், அதை காணொலியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் அவர் விற்கும் எந்தக் கணினியையும் எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்க இரவு பகலாக வரிசையில் நிற்பார்கள். அந்த மாதிரியான வசீகரப் பேச்சாளர் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், நாமெல்லாம் அவரை மாதிரி கருப்புநிறக் காட்சிகளை மட்டும் வைத்துக் கேட்பவரின் கவனத்தை ஈர்க்க முடியாது. நமக்குத் தேவை ஜொலிக்கும் விளக்கக் காட்சிகள், அதைச் செய்யச் சிறந்த செயலி இன்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில் வரும் மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் தான். தற்போது மைக்ரோசாப்ட் 365 என்கிற சந்தா மூலமாக வருவது நம் அப்பா காலத்து மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் கிடையாது. கடந்த சில ஆண்டுகளில் பல நூறு புது வசதிகள் இதில் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (8…

 • Articles

  பசு மாட்டை போனுக்குள் கட்டி வையுங்கள்!

  சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘லவ் டுடே’ படத்தில் முக்கியமான கதாபாத்திரம் நாயகன், நாயகியின் செல்பேசிகளும் அதனுள் இருக்கிற வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாக்ராம் போன்ற செயலிகளும் தான். இந்த பிரபலமான செயலிகளைத் தாண்டிப் பல இலட்சம் செயலிகள் இருக்கின்றன. அவற்றில் தேர்ந்தெடுத்த ஆறு செயலிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். 1️⃣சமமாகப் பகிர்தல் 2️⃣மகிழ்ச்சியான பசுமாடு 3️⃣கணக்கில் புலி ஆகவும் 4️⃣நமக்கு நாமே 5️⃣சித்திரமும் கைப்பழக்கம் 6️⃣மூளைக்கு வேலை இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (1 மார்ச் 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

 • Articles

  செல்பேசிக்கு வரன் பார்க்கவும்!

  புது செல்பேசி வாங்க முடிவு செய்துவிட்டீர்கள், ஆனால் எந்தச் செல்பேசியை வாங்குவது..? இன்று சந்தையில் வகை வகையாக, நூற்றுக்கணக்கில் செல்பேசிகள் கிடைக்கின்றன, அதில் நமக்கு ஏற்ற வகையை எப்படித் தேர்வு செய்வது என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கடந்த ஜூலை 13 ஆம் இதழில், புதுச் செல்பேசி வாங்கியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்திருந்தோம், இந்தக் கட்டுரை அதன் முன்பாகம் (Prequel). செல்பேசியைத் தேர்ந்தெடுக்கும் முன் உங்களை நீங்களே இரண்டு கேள்விகள் கேட்டுப் பதில் சொல்ல வேண்டும். முதலாவது, நீங்கள் கொடுக்க விரும்பும் விலை, இது நாற்பதாயிரத்தைத் தாண்டினால் மட்டுமே ஐஃபோன் ஒரு தேர்வாக இருக்கமுடியும், அதற்குக் கீழே என்றால் ஆன்ட்ராய்ட் மட்டுமே கிடைக்கும். அவற்றில் நாம் விரும்பிய நல்ல செல்பேசியைத் தேர்வு செய்யலாம். இரண்டாவது கேள்வி, காமிராவா, பேட்டரியா, திரையா உங்களுக்குச் செல்பேசியில் எது முக்கியம் என்பது. எல்லாமே என்று சொல்லக்கூடாது. எந்த வகைச் செல்பேசியாக இருந்தாலும் இதில் இரண்டுதான் உங்களின் விருப்பத்திற்கு அமையும். அவை எவை என்று முடிவு செய்துவிட்டுத் தேட…

 • Articles,  Technology,  தமிழ்

  ஆன்ட்ராய்ட் உதவிக் குறிப்புகள்

  ஐஃபோன் என்றால் அதில் ஒரே இயங்குதளம் தான்: அது ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-ஓ-எஸ். இது ஒரு காப்புரிமை பெற்ற படைப்பு. வேறு எவரும் இதை வெளியிட முடியாது . ஆனால் ஆன்ட்ராய்ட் அப்படியில்லை. அது ஒரு திறன்மூலப் படைப்பு. அதனால் ஒவ்வொரு செல்பேசி உற்பத்தியாளரும் மூல ஆன்ட்ராய்ட் மென்பொருளைப் பிரதியெடுத்து அவர்களின் விருப்பத்திற்கு மாற்றி வெளியிட முடியும். அப்படித் தான் செய்கிறார்கள். இதனால்தான் சாம்சங் செல்பேசியினுள், ஒப்போ செல்பேசியினுள், ஒன்பிளஸ் செல்பேசியினுள் எல்லாம் இருப்பது ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான் என்றாலும், ஒவ்வொன்றும் அங்கங்கே மாறுபடுகின்றன. இன்று பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் செல்பேசிகளை இயக்குவது இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான். அதனால் அதிலிருக்கும் அதிகம் அறியப்படாத சில வசதிகளைப் பற்றிய உதவிக் குறிப்புகளை இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். 📲வலம்வரல், 📢அறிவிப்புகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டுங்கள், 🔍கூகுள் உதவியாளர் (Google Assistant), 🕵🏾‍♀️போனைக் கண்டுபிடிக்கவும் (Find My Device), 🔕தொந்தரவு செய்யாதே (Do Not Disturb), 🪟விட்ஜெட்டுகள் (Widgets), 👩🏾‍💻நிரலாளர் முறை எச்சரிக்கை! (Developer Mode). #மெட்ராஸ்பேப்பர் #ஆன்ட்ராய்ட்

 • Articles,  தமிழ்

  சொல்லும் செயலும் – மெட்ராஸ் பேப்பர்

  அன்றாடம் அலுவலகத்தில் பயன்படுத்தும் செயலிகளில் முதலிடம் பிடிப்பது மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸ்சேல் என்கிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளாகத் தான் இருக்கும். ஒரு கணிப்புப்படி எண்பது சதவிகித பயனர், மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளில் இருக்கும் வெறும் இருபது சதவிகித வசதிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்; அப்படியென்றால் மீதமிருக்கும் எண்பது சதவிகித வசதிகள் என்ன, அவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்கிற கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை பதில் சொல்லும். முன்வடிவமைத்த படிவங்கள் மாற்றங்களை அடையாளம் காணுங்கள் கருத்துகள் பொருளட்டவணை வெள்ளைத் தாள் மொழிபெயர்ப்பு பேசியே எழுதவும் செல்பேசி இணைப்பு ஓவியக் காட்சிகள், மனிதர்கள் இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (8 பிப்ரவரி 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

 • Articles,  தமிழ்

  கூகுள் தரும் கூடுதல் வசதிகள்

  நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில இலவசச் செயலிகளை நாம் அறிந்து கொண்டால் தினந்தோறும் நம் கணினி/செல்பேசிப் பயன்பாடு எளிதாகும். 1.கூகுள் காண்டாக்ட்ஸ் நம்மில் பலருக்கு இது நடந்திருக்கும். தெரிந்தவரை அழைப்போம், எதிர்முனையில் அவர் “யார் நீங்கள்?” என்பார். நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லி ஏன் நீங்கள் கொஞ்சம் நாட்களாக என்னை அழைக்கவில்லை என்று கேட்டால், “என் பழைய போன் கெட்டுப் போய்விட்டது. அதில் இருந்த முகவரிகள், எண்கள் எல்லாம் அதோடு அழிந்து போய்விட்டது. அதனால் தான் உங்கள் எண் எனக்குத் தெரியவில்லை, மன்னிக்கவும்” என்பார். செல்பேசியை மாற்றினால் அதில் வைத்திருக்கும் எண்கள் தொலைந்து போகவேண்டுமா? அப்படியாகாமல் இருக்க என்ன செய்ய? இருக்கிறது கூகிள் காண்டாக்ட்ஸ் (Google Contacts). கூகுள் காலண்டர் கூகுள் ஃபார்ம்ஸ் கூகுள் டிராவல் கூகுள் ஆர்ட்ஸ் மற்றும் கல்ச்சர் இன்று மெட்ராஸ் பேப்பரில் (1 பிப்ரவரி 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.…

 • Articles,  Gadgets,  தமிழ்

  காப்பி அடிக்க முடியாத நோட்ஸ்!

  தற்போது ஐபோனின் பாதி விலையில் தரமான, உயர்ரக ஆன்ட்ராய்ட் செல்பேசிகள் சாம்சங், கூகிள் நிறுவனங்களிடமிருந்து வருகின்றன. இவை ஐபோனோடு நேருக்கு நேர் நிற்கக் கூடியவை. இவற்றைப் பார்க்கும் உங்களுக்கு, பல வருடங்களாக ஐபோன் பயனராக இருந்தாலும், உங்களின் அடுத்த செல்பேசி ஐபோனாக இல்லாமல் சாம்சங் போனாக இருக்கலாமே என்று தோன்றும். ஆனால், உங்களின் ஐபோனில் பலநூறு முகவரிகள், குறிப்புகள், படங்கள், குறுஞ்செய்திகள், தரவுகள் இருக்கும், பொதுவாக இவற்றை ஐபோன் அல்லாத வேறு போனுக்குக் கொண்டு செல்ல முடியாது, இதனால் நீங்கள் தயங்கிக் கொண்டிருந்தால் இன்று வந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் அதற்கு விடை இருக்கலாம். ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுத்து இதையும் மற்றும் பல தரமான கட்டுரைகளையும் மெட்ராஸ் பேப்பரில் படிக்கலாமே!