-
Punjabi Parmesan by Pallavi Aiyar
Pallavi Aiyar is an award-winning foreign correspondent. Earlier this century she had lived in China for nearly a decade and wrote a wonderful book about the rise of China titled “Smokes and Mirrors” which I thoroughly enjoyed reading. Then she moved with her family to Brussels and lived there for the next four to five years. After Belgium, she lived in Jakarta (Indonesia) for a few years and then in Japan. You cannot find a better author to analyse and provide a candid perspective of a country than Pallavi Aiyar. With her own experience of living in Belgium, the interviews she had conducted, and her role as an UN-accredited journalist,…
-
Lion Comics in Tamil that I enjoyed
நான் அவ்வளவாக லயன் / முத்து காமிக்ஸ் படித்ததில்லை, பள்ளிக் காலங்களில் கூட அவற்றை விரும்பியதாக நினைவில்லை. பெரும்பாலும் அவை ஒரே மாதிரியான கதைகள், அமெரிக்கன் வெஸ்டர்ன், சிகப்பு இந்தியர்கள் பற்றிய கதைகள் தான் இருக்கும் என்பது என் (தவறாக இருக்கலாம்) எண்ணமாக இருந்தது. ஆங்கிலத்தில் நிறைய நிறைய காமிக்ஸ் படித்திருக்கிறேன். தமிழிலும், நிறைய காமிக்ஸ் படித்திருக்கிறேன் அவற்றில் ராணி காமிக்ஸ்ஸில் (மற்றும் தினமணி நாளிதழில்) வெளிவந்த மந்திரவாதி மாண்ட்ரேக் மற்றும் முகமூடி மாயாவி (Phantom) காமிக்ஸ் எனக்கு மிக பிடித்தவை. அதோடு அம்புலிமாமா, கோகுலம் போன்றவையும் எனக்குப் பிடிக்கும். காலங்கள் ஓடியது, ஆங்கிலத்தில் அவ்வப்போது நான் ஆர்ச்சி படக் கதைகள் (காமிக்ஸ்) படிப்பது தொடர்ந்தது. ஆனால், தமிழில் காமிக்ஸ் (ஏன் சிறுவர்களுக்கு என்று எந்த பத்திரிகையுமே) வருவது நின்றேவிட்டது என்ற நிலையில், இந்த வகைப் புத்தகங்களை எல்லோரையும் போல நான் மறந்தே இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் (2018ஆம் ஆண்டு என்று நினைவு), சென்னை புத்தகக் காட்சியில் லயன் / முத்து காமிக்ஸ் அரங்கத்தைப் பார்த்தேன்,…
-
Tribute to a legendary software engineering guru
As a tribute to the ‘legendary’ Frederick P Brooks Jr., who passed away on the 17th of November 2022, I have started re-reading his classic “The Mythical Man-Month”. The book amazes me every time I read it and I keep learning new things. #SoftwareEngineering #projectmanagement
-
The Almanack of Naval Ravikant by Eric Jorgenson
I first heard the name of Naval Ravikant in Tim Ferriss‘s Podcast, where select episodes can be fantastic like the one with the AirBnB Co-Founder Joe Gebbia, or the one with the Ethereum inventor Vitalik Buterin. So, when I saw on social that the foreword for this book is given by Tim Ferriss, I got curious and bought the book “The Almanack of Naval Ravikant” by Eric Jorgenson from the Kindle store. I discovered later that the full book was available for free on their official website, after I read the book I realised why the publishers had chosen the dual pricing model – reading my review below will make…
-
India 1944 to 48 by Thiru Ashokamitran
எதிரிகளோ, திடீர் திருப்பங்களோ இல்லாமல் இயல்பாக நடக்கும் ஒரு குடும்பத்தின் கதையைக் கூட இவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமா என்று வியக்க வைத்த நாவல், எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களின் இந்தியா 1944-48, பக்கங்கள் 215. அவரின் ஒன்றிரண்டு புனைவுகளை நான் படித்திருக்கிறேன், இது ஏனோ என்னை சொக்கிவிட்டது. நடுயிரவு வரைப் படித்துவிட்டு புத்தகத்தை முடித்தபின் தான் உறங்க போனேன், கனவில் சுந்தரமும் மணியும், பார்வதியும், லக்ஷ்மியும், பம்பாய் நகர அடுக்குமாடியும் தான் தெரிந்தது. பம்பாய் 1944, இந்தியா 1948 என்று இரு குறுநாவல்களாக வெளிவந்ததை, ஒரே நாவலாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுயிருக்கிறார்கள் – ஒன்றாக வாசிப்பது தான் சரியாக தோன்றுகிறது, இரண்டிலும் அதே கதாபாத்திரங்கள் தான், தொடர்ச்சியாகத் தான் வருகிறது. முதல் பகுதியில் தம்பி குரலில் கதைப் போகிறது, அவனது பெயரே நமக்கு இறுதியில் தான் தெரிகிறது. இரண்டாம் பகுதி அண்ணனின் பார்வையிலிருந்து வருகிறது. நாற்பதுகளில் பாலக்காட்டில் இருந்த ஒரு தமிழ் குடும்பம் தனது குடும்ப தலைவனை அவரது சிறு வயதிலேயே இழந்துவிடுகிறது, இரண்டு…
-
Balisamiyin thuppu by Thiru Devan
“பல்லிசாமியின் துப்பு” என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் இதுவும் துப்பறியும் சாம்புவைப் போன்று ஒரு நகைச்சுவைச் சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் என நினைத்தேன். முதல் சில சிறுகதைகளைப் படித்தவுடனேத் தெரிந்துவிட்டது என் கணிப்பு தவறு என்று. தமிழில் வந்த நகைச்சுவைக் கதைகளில் இன்றும் அதிகமாக பேசப்படுவது எழுத்தாளர் தேவன் அவர்களின் “துப்பறியும் சாம்பு“. அதில் ஒரு ஆஃபிஸ் குமாஸ்தாவாய் இருந்தவர் தனது திடீர் அதிர்ஷ்டத்தால், மற்றவர்களால், கண்டுப்பிடிக்க முடியாத பலத் திருட்டுக்களை சுலபமாகத் துப்புத்துலக்கி விடுவார். என் பையன் குழந்தையாக இருந்தப் போது அவனுக்கு இந்தக் கதைகள் மிகப் பிடிக்கும், பல நாட்கள் புதுக் கதைகளை நானே என் கற்பனையில் இட்டுக்கட்டிச் சொல்வேன். ஆனந்த விகடனில் பல ஆண்டுகள் (1942-1957) நிர்வாக ஆசிரியராக இருந்தார் திரு தேவன் அவர்கள். தமது நாற்பத்து நான்கு வயதிலேயே இறைவனடி எய்தினார், சுமார் இருபது ஆண்டுகளிலேயே எப்படி இவ்வளவு கதைப் படைப்புகளை அவரால் எழுத முடிந்தது என்பது ஆச்சரியம் தான். அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடானப் “பல்லிசாமியின் துப்பு” சிறுகதைத் தொகுப்பில் முதலில்…
-
101 Sahabiyat Stories and Dua by Good Word Books
A few years ago, The Hindu Tamil Newspaper published tiny stories from The Holy Quran, I found the stories interesting. Once the series ended, I bought the book “The Greatest Stories from the Quran” which was the source of the stories, the book was well made and printed on glossy paper – and I learned a bit about Islam from the book. Later, I bought another book, titled “101 Sahabiyat Stories and Dua” from the same publisher (Good Word) for Rs 345 (USD 4.5) Today, being the Eid festival, I thought it is befitting to read the book “101 Sahabiyat Stories and Dua”. This too was a hardbound one with…
-
Kadalukku Appaal by Pa.Singaram
கடந்துவிட்ட வேறொரு நூற்றாண்டிற்குச் சென்று அந்தச் சூழலில் வாழ வேண்டுமென்றால் அறிவியலால் காலக் கப்பலேதையும் தரமுடியாது, ஆனால் அதற்கு மாற்றாக அந்தக் காலத்தில் வாழ்ந்த திறமையான எழுத்தாளர்களின் படைப்புகளால் முடியும். அப்படியான ஒரு புதினம் தான் திரு ப.சிங்காரம் அவர்கள் 1950 இல் எழுதிய “கடலுக்கு அப்பால்”. என்ன ஒரு மகத்தான படைப்பு இது! முதல் வரியிலேயே 1945 இல் தமிழர்கள், அதுவும் செட்டிமார்கள் கொடிகட்டிப் பறந்த மலேயா நாட்டின் பினாங்கு நகரத்திற்கு நம்மைப் புலம் பெயர்த்து, அங்கேயே வசிக்க வைக்கிறார் ஆசிரியர். ஆங்கிலேயர்கள் வசம் இருந்து, ஜப்பானியர்களிடம் சென்று, ஆங்கிலேயர்களிடமே திரும்பும் சூழ்நிலையில் (1941-1945) செல்கிறது கதை. பினாங்கு நியூ லைன் வீதியில், போருக்கு முன்பு பினாங்கு தெருவிலும் “லேவாதேவி”, அதாவது வட்டித் தொழில், செய்துக் கொண்டிருக்கும் வானாயீனா என்கிற ஆ.சி.வயி.வயிரமுத்துப் பிள்ளையவர்களின் மார்க்காவில் “அடுத்தாள்” (மேலாள் என்கிற மேனேஜருக்கு கீழே இருக்கும் ஆள், பெட்டியடிப் பையங்களுக்கு மேலே இருப்பவன்) வேலையில் இருக்கும் “செல்லையா” என்பவன் தான் கதையின் நாயகன். கதை ஆரம்பிக்கும் போது…