Tag

Localization

Browsing

எழுத்துருவில் இன்று உலக அளவில் இருக்கும் தலை சிறந்த வல்லுனர்களில் என் நண்பர் (மலேசியா) திரு முத்து நெடுமாறன் (Muthu Nedumaran) அவர்களும் ஒருவர். அண்மையில் அவர் சென்னைக்கு வந்திருந்த போது நண்பர் திரு ராம்கி (Krishnan Ramasamy)அவர்களுடன் ஒரு சந்திப்பை அவரின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார். திரு நா இளங்கோவன் மற்றும் திரு நானா (Nana Shaam Marina) என்னுடன் அந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள். ஒரு மாலைப் பொழுது இவ்வளவு சுவாரஸ்யமாக, கருத்து உடையதாக இருக்குமா என்று நம்ப முடியவில்லை. அந்த ஓரிரு மணி நேரங்களில் தமிழ் எழுத்துக்கள், எழுத்து வடிவங்கள் ஒவ்வொரு 100 ஆண்டுகளும், எழுதப்படும் பொருட்கள் (கல், உலேகம், ஓலை,…

சில வருடங்கள் முன் வரை தமிழ்த்தாய் வாழ்த்து என்றால், நான் பள்ளியில் கற்ற மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ தான் என்று நினைத்திருந்தேன். மலேசியா தமிழ் இணைய மாநாடு ஒன்றில் வேறு ஒரு பாடலை ஒலிக்கச் செய்தார்கள், அப்போது தான் தெரிந்தது, வேறு பல கவிஞர்களின் பாடல்களும் தமிழ் தாயை வாழ்த்த இருக்கிறது என்று, அந்தந்த அரசால்/நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடல்களும் வேவ்வேறு என்று. தமிழ்நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து: ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ – காணொளியில் குரல்: T.M.S. விக்கீப்பீடியா சொல்கிறது புதுச்சேரியில் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!” என்ற பாடல் அங்கே தமிழ் தாய் வாழ்த்தென்று.…

இன்று வந்த இந்து தமிழ் நாளிதழில் வந்த (கீழேயுள்ள) செய்தியைப் பாருங்கள். இந்த விஷயத்தில் அமெரிக்கர்கள் ரொம்பத் தாமதம் தான் – வீடு மற்றும் கடைகளின் வெளிப்புற சுவற்றில் சிறுநீர் கழிப்பதும் குப்பைகளைக் கொட்டுவதையும் தடுப்பதற்காக, அந்தச் சுவற்றில் கடவுளின் உருவங்களை வரைவது என்பது தமிழர்களின் பண்டைய கண்டுபிடிப்பு! ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1980களில் எங்கள் வீடும் புத்தகக் கடையும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்தது. அப்போது வெளிப்புற சுவற்றின் மேலே கண்ணாடி ஜன்னல் அமைத்து உள்பக்கமாகப்  புத்தகங்களைப் பார்வைக்கு வைத்திருந்தோம். போவோர் வருவோர், அதன் கீழே சிறுநீர் கழிப்பதாக இருந்தது. இதைத் தடுக்க என் தந்தை சுவர் ஓவியரை அழைத்துக் கடவுள் உருவங்களை வரையத்…

On the question of what needs to be done to help Indic languages only speakers to improve their lives and livelihood through mobile (and technology at large) – the views tend to run all over the spectrum. Tech majors (like Amazon, Apple, Google, Microsoft & Facebook) feel they have done enough and to do anything beyond there is no “ask” from the users’ side – who are happy to keep using English (even though their…

இந்த வார துக்ளக் இதழில் வந்துள்ள தலையங்கம் என்னை சிந்திக்க வைத்தது. அது அரசியல் பற்றி அல்ல, கல்வியைப் பற்றி. அந்த ஆசிரியரியின் மீதும், துக்ளக் மீதும் உங்களுக்கு உடன்பாடு இருக்க வேண்டும் என்றில்லை –அரசியல் காரணங்களுக்காக இதை அவர் எழுதியுள்ளார என யோசிப்பதை ஒரு நிமிடம் ஒதுக்கிவிட்டு – இந்த ஒரு கட்டுரையை மட்டும் (பத்திரிக்கையை வாங்கி) முழுமையாகப் படிக்கவும். நான் இங்கே ஒரு பக்கத்தை மட்டும் கொடுத்துள்ளேன். அதில் தாய் மொழி (தமிழ்நாட்டில் தமிழ்) கல்வியின் அவசியம் சொல்லப்படுகிறது, தமிழ்நாட்டில் பெரும்பாலனவர்கள் ஆங்கில கல்வியை மட்டுமே நாடுகிறார்கள் – அதனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் முழுவதுமாக தெரியவில்லை, தமிழும் சரியாக தெரியவில்லை, அவர்களின் சிந்தனை…