நேற்றைய இரவு உணவு, மாலை 6 மணிக்குப் பூசனிக்காய் சாற்றில் (சூப்பில்) தொடங்கி தேங்காய்ப் பாலில் கலந்த சாக்லேட் (கொக்கோ) மில்க்கொடு இனிதே முடிந்தது. இரண்டுக்கும் நடுவே சில கட்டி காசே பாலேடு (சீஸ்) மற்றும் பல கரண்டி சிங்கப்பூர் மீ கோரங் நூடுல்ஸ் இருந்திருக்கலாம். இடம்: பம்ப்கின் டேல்ஸ், ஆழ்வார்பேட்டை, சென்னை.

இந்த உணவகத்தில் விலை அதிகம் தான், இருவர் சாப்பிட்டதற்கு ரூபாய் 2400 ஆனது, ஆனால் அங்கே சுழலும், உணவு தரமும், சேவையும் மிக நன்றாக இருக்கும். அதோடு சென்னையில் இங்கே மட்டும் தான் சில வெளிநாட்டு உணவு வகைகள் கிடைக்கும். பிரட் போன்றவற்றை அவர்கள் இங்கேயே செய்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

Tagged in: