-
75th Anniversary of Indian Independence – Azadi Ka Amrit Mahotsav
Today marks the 75th year of India’s Independence from the colonial rulers. Hon’ble Prime Minister Sri Narendra Modi has called for every citizen to celebrate the event as Azadi Ka Amrit Mahotsav. He terms the Azadi Ka Amrit Mahotsav to mean elixir of energy of independence; elixir of inspirations of the warriors of freedom struggle; elixir of new ideas and pledges; and elixir of Aatmanirbharta [Source: amritmahotsav.nic.in]. Happy to have the national flag of India affectionately called the Tricolour (seen in the picture above) in front of my house. Thanks to the volunteers of the Arulmigu Vinayagar Temple next to the auto stand in my street, who distributed the tri-colour…
-
Sri Rama Navami 2022
Sri Rama Navami: Hindu festival to celebrate God Sri Sita Ram’s birthday. ஸ்ரீ ராம நவமி 2022 வாழ்த்துக்கள். இன்று எங்கள் வீட்டுப் பூஜையில் வைத்த உணவுகள்: 🍽️ பானகம் 🍽️ நீர் மோர் 🍽️ பருப்பு நெய் சாதம் 🍽️ கோஸ்மல்லி (கேரட் பருப்பு உசிலி) அல்லது வடைப்பருப்பு (இதில் வடை எதுவும் கிடையாது) இதிலிருந்து நான் தெரிந்துக் கொண்டது, ஸ்ரீ கிருஷ்ணா ஜயந்தியை விட ஸ்ரீ ராம நவமி உணவு வகையில் எளிமையானது.
-
New Year 2022 and Calendars
I am not into celebrating the new year, so they are generally muted affairs that involves sharing personal wishes with friends and family. Still, seeing new calendars hung on the wall in the new year does make you happy and hopeful. Read my posts on 2015 new year and 2006 new year. My mom & calendars: Though I am not a fan of hanging more than one calendar in the house, my mom adores them. For her, it is a ritual to keep collecting/buying daily sheets and monthly calendars from the first week of December, shortlisting the ones, then mapping the calendars to individual rooms (and sometimes multiple calendars to…
-
Tamil magazine special issues for Diwali
பல வருடங்களுக்கு பிறகு தீபாவளி மலர்கள் வாங்கினேன். ஒரு காலத்தில் இவை இல்லாமல் தீபாவளியே இருக்காது, உறவினர்கள் நண்பர்களிடம் இரவல் கொடுத்து, இரவல் வாங்கிப்படிக்கப்படும். இதில் வரும் விளம்பரங்கள் அதிக நாள் பேசப்படும். மலர்களோடு ஒரு பெட்டிக்கடையே இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இன்று இளைத்து கலையிழந்து காணப்படுகிறது.
-
Sri Saraswathi Pooja 2021
பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் அவதிப்படும் உழைப்பாளிகளுக்கும், வசதியில்லாத படிக்க முடியாமல் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த ஆயுதப் பூஜை, சரஸ்வதி பூஜை தினத்திலிருந்து விடிவு பிறக்கும், நல்ல காலம் வர வேண்டும் என்ற பிரார்த்தனையோடு எங்கள் வீட்டில் பண்டிகையை எளிமையாக கொண்டாடுகிறோம். In India, especially in the state of Tamil Nadu, everyone celebrates the Hindu festival for Goddess Saraswathi (the God of Education and Learning) as the festival of Tools (in Tamil called as Ayudha Poojai). On this day, in offices and factories around the state, production is stopped by evening, all the main hand-tools used in the place including (select) computers are stacked in front of pictures of Hindu Gods and Goddess – students keep their schoolbooks – this is followed by holy hymns…
-
Navarathri Golu 2021
Today marks the beginning of Navarathri (Nine Days) festivals in Tamil Nadu, it is called Dasara in many other parts of India. During Navarathri the dolls and idols of Gods and Goddesses are kept exquisitely decorated in what is called in Tamil as Golu (கொலு). Last year, due to the horrible pandemic we had a small display (2020. You can view the display we had in our earlier years here: 2020, 2019, 2018, 2016, 2015, 2014, 2007 & 2004. This year we went for doing a little better, still scaled down, and started the work of bringing down the wooden planks, clothes, the dolls and the paraphilias two weeks back:…
-
Curtain raiser to Navarathri Golu 2021
இரண்டு ஆண்டுகளாக நீண்ட நித்திரையிலிருந்து எங்கள் வீட்டில் இருக்கும் பொம்மைகள் இந்த வருட நவராத்திரி விழாவிற்காக வெளியில் வந்திருக்கிறன. வீட்டுப் பரணிலிருந்து, எல்லா அட்டைப் பெட்டிகளையும் கீழிறக்கி, பிரித்து, ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து, வகைப்படுத்தி வைக்கும் வேலை இன்றிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இதற்குப் பிறகு கொலுப் படிக் கட்டி, அதற்குமேல் துணி போட்டு, அலங்காரம் செய்து பொம்மைகளை அடுக்க வேண்டும். எல்லாவற்றையும் செய்ய ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் ஆகும் என்பது என் அம்மா மற்றும் மனைவியின் அனுபவக் கணிப்பு. என் வேலை வேடிக்கைப் பார்ப்பது! கொரோனா சூழ்நிலையில், பண்டிகையை இணையவழியில் தான் கொண்டாட வேண்டும் போலிருக்கிறது. போன வருடம் மிகச் சிறிய அளவிலான கொலு தான் வைத்தோம். இறைவன் அருளில் அடுத்த வருடத்திற்குள் பெருந்தொற்று உலகத்தை விட்டு முற்றிலும் போய், எல்லோரும் நலமாக வாழப் பிரார்த்திக்கிறேன்.
-
Navarathri Golu 2020
எங்கள் வீட்டில் வருடா வருடம் (2019, 2018), விமர்சையாக, இரண்டு அல்லது மூன்று கொலு அடுக்குகளில், பல படிகளாகக் கொலு வைப்போம். கொரோனா சூழ்நிலையால், என் அம்மாவும் அனுமதித்த காரணத்தால், இந்த ஆண்டு எளிதாக வைத்திருக்கிறோம். ஒரு வட்ட சாப்பிடும் மேசையில், மூன்று மரப் படிகளை வைத்து மிகச் சிறிய அளவிலான கொலு. நண்பர்களை, உற்றார், சுற்றத்தார்களை அழைக்கவில்லை. மன்னிக்கவும்! எங்கள் சகோதரிகளையும், என் பெற்றோர்களின் உடன் பிறந்தவர்களையும் அவர்களது குடும்பத்தினர்கள் வந்தால் வரவேற்க எண்ணம். அதுவும் முகக்கவசம் கட்டாயம் எனச் சொல்லத் திட்டம். கடவுளின் அருளில் அடுத்த ஆண்டு உலக மக்கள் ஆரோக்யமாக, பயமின்றி வாழும் சூழ்நிலை திரும்பி வர வேண்டுகிறேன் – அப்போது நல்ல முறையில் கொலு வைத்து விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க எண்ணம்.