• Restaurant Review,  Travel Review,  தமிழ்

    நான் மட்டும் சைவம்!

    போன வாரம் மதுரையில் கீழடி அருங்காட்சியகம் சென்றுவிட்டு மதியச் சாப்பாட்டுக்கு எங்கே போவது என்று பேசியதில் நான்கில் மூன்று பேர் அசைவம் என்பதால் அம்மா மெஸ் என்று முடிவு செய்யப்பட்டது. நான் எவ்வளவு போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வா, அங்கே உனக்குச் சாதம், ரசம், மோர் கிடைக்கும் அது போதும் வா எனக் கல்லூரி நண்பர்கள் என்பதால் கண்டிப்பாகச் சொல்லி, ஓர் அடியும் கிடைத்ததால் போனேன். எனக்கு அசைவ உணவகங்களில் சாப்பிடுவது ஒன்றும் பிரச்சனை இல்லை, அங்கே ரசம் கார சாரமாகப் பூண்டு தூக்கலாக இருக்கும், எனக்குப் பிடிக்கும். பக்கத்து இலையில் சிலந்திமீன் (ஆக்டோபஸ்) சாப்பிடும் நண்பர்களோடு தென் கொரியா எல்லாம் போன ஆள் நான். பிரச்சனை என்னவென்றால் வெறும் சாதம், ரசம், மோர் அன்றைய என் பசிக்கு போறாது. இருந்தும் வேறு வழியில்லாமல் போனேன். பக்கத்து, எதிர் இலைகளில் கோழி பிரியாணி, காடை, கௌதாரி, நெத்திலி எனப் பல வகைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். எனக்கு வெறும் சோறு, நல்ல வேளை அதோடு…

  • Chennai,  தமிழ்

    தவறாக மாட்டிக் கொண்டேன்!

    இன்றைக்குக் காலை மைலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் அருகே ஒரு துக்க நிகழ்விற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. பொதுவாக அந்தப் பகுதிக்கு காரில் செல்லக் கூடாது, நிறுத்த இடம் கிடைக்கவே கிடைக்காது என்பது பிறந்த குழந்தை உட்படச் சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெரியும். அதுவும் இப்போது மெட்ரோ பணிகள் வேறு, கேட்கவே வேண்டாம். காலை எட்டு மணி தானே, கடைகள் திறந்திருக்காது பார்க்கிங் கிடைக்கும் என நினைத்து காரை எடுத்துக் கொண்டு சென்றது என் முதல் தவறு. அங்கே கிழக்கு மாட வீதியில், பாரதிய வித்யா பவன் வாசலில் நிறுத்திவிடலாம் என்பது என் திட்டம். ஆனால் எனக்கு முன்பே பல நூறு வாகனங்கள் எப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்பது தெரியாமல் நான் போய் இடம் கிடைக்காமல் திண்டாடினேன். அதற்குள் என் அன்பு மனைவி “இதற்குத் தான் கார் வேண்டாம் என்று சொன்னேன்” என ஆரம்பிக்க, எனக்குப் பின்னால் வாகனங்கள் வந்து கொண்டேயிருக்க, அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்று நினைத்து கோயிலை காரில் ஒரு சுற்றுச் சுற்றினால்…

  • லயன் காமிக்ஸ் - மேக் & ஜாக், கதவைத் தட்டும் கேடி/கோடி!
    Book Review,  தமிழ்

    Lion Comics in Tamil that I enjoyed

    நான் அவ்வளவாக லயன் / முத்து காமிக்ஸ் படித்ததில்லை, பள்ளிக் காலங்களில் கூட அவற்றை விரும்பியதாக நினைவில்லை. பெரும்பாலும் அவை ஒரே மாதிரியான கதைகள், அமெரிக்கன் வெஸ்டர்ன், சிகப்பு இந்தியர்கள் பற்றிய கதைகள் தான் இருக்கும் என்பது என் (தவறாக இருக்கலாம்) எண்ணமாக இருந்தது. ஆங்கிலத்தில் நிறைய நிறைய காமிக்ஸ் படித்திருக்கிறேன். தமிழிலும், நிறைய காமிக்ஸ் படித்திருக்கிறேன் அவற்றில் ராணி காமிக்ஸ்ஸில் (மற்றும் தினமணி நாளிதழில்) வெளிவந்த மந்திரவாதி மாண்ட்ரேக் மற்றும் முகமூடி மாயாவி (Phantom) காமிக்ஸ் எனக்கு மிக பிடித்தவை. அதோடு அம்புலிமாமா, கோகுலம் போன்றவையும் எனக்குப் பிடிக்கும். காலங்கள் ஓடியது, ஆங்கிலத்தில் அவ்வப்போது நான் ஆர்ச்சி படக் கதைகள் (காமிக்ஸ்) படிப்பது தொடர்ந்தது. ஆனால், தமிழில் காமிக்ஸ் (ஏன் சிறுவர்களுக்கு என்று எந்த பத்திரிகையுமே) வருவது நின்றேவிட்டது என்ற நிலையில், இந்த வகைப் புத்தகங்களை எல்லோரையும் போல நான் மறந்தே இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் (2018ஆம் ஆண்டு என்று நினைவு), சென்னை புத்தகக் காட்சியில் லயன் / முத்து காமிக்ஸ் அரங்கத்தைப் பார்த்தேன்,…

  • Chennai,  தமிழ்

    Maskless and nonstop eating

    ஒருவரால் இவ்வளவு சாப்பிட முடியமா? தற்போது அதிகமாகப் பேசப்படும், “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தை இன்று ஜாஸ் சினிமாஸில் பார்த்தேன் [படத்தின் விமர்சனம் அடுத்த பதிவில்]. எனக்கு வலதில் இருந்த முப்பது வயது இளைஞர், அவரை ‘அன்பு’ என்று அழைக்கலாம், எனக்கு முன்பே வந்திருந்தார். அன்பை தாண்டிப் போய் அமர்ந்தேன். நான் எப்போதும் போல், என்-95 மாஸ்க் அணிந்திருந்தேன். அன்பு மாஸ்க் எதுவும் அணியவில்லை, போடச் சொல்லி வேண்டலாம் என்று சொல்ல முற்பட்டேன், அப்போது குனிந்து பாப்கான் பொட்டலத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். சரி, சாப்பிடுபவர் மாஸ்க் போட முடியாது, சாப்பிடுபவரை நிறுத்த சொல்வது (தமிழர்) பண்பாடு இல்லை என்று தயங்கி மௌனமானேன், இன்னும் ஓர் ஐந்து நிமிடத்தில் முடித்துவிடுவார் என்று நினைத்தேன். ஒரு மணி நேரமாகியும் அவர் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார், நடுநடுவில் கோக் பானம் வேறு, அதைச் சத்தம் போட்டு வேறு உறிஞ்சினார், பெரிய பெரிய கொட்டாவி, ஏப்பம் வேறு, எல்லாம் நிர்வாணமான வாயை வைத்து. எனக்கா என்னைச் சுற்றி வைரஸ் வைரஸா சுற்றுவதுப்…

  • TV Show Review

    Decoupled (TV Series)

    Decoupled on Netflix is not your typical “Indian” show. It tries to follow the American comedy-drama shows template of featuring light-touch humour, with a bit of British style satirical comedy thrown in. I enjoy this mixture, as a result, I liked the show and I will give it a Raw, but it may not appeal to you. Also remember, the characters freely utter a lot of profanity and openly discuss sex, a rarity for Indian living rooms – I didn’t find the occurrences out-of-place in the episodes, and I was able to smile at most of them. The show is based on a one-line story of a rich couple with…

  • Lounge

    Good harmless humour is universal and timeless

    Good, Harmless Humour that is fun, based on everyday life is universal & works across culture, language & media. I noticed this Archie Comics story “The Right Type” having the same theme as Actor Vadivelu comedy clip in the Tamil movie Vathiyar (வாத்தியார்) 2006. In the comic, a famous artist selects Reggie over Archie saying “I’m Sorry, But you’re not the type“. Veronica too says “Yes, Archie, Take my word for it, you’re not the type!“. In the film, Singamuthu character says at Vadivelu “நீ அதுக்கு சரிவர மாட்டே!” (You will not suit for that) #Archie #Comics #Humour #TamilCinema #Comedy #Vadivelu

  • Brilliantovaya ruka (1969)
    Movie Review

    The Diamond Arm (1969)

    The Diamond Arm (1969) aka Brilliantovaya ruka (1969), is a Russian Comedy film that had a homespun feeling yet was jocular and entertaining. A good way to spend a evening watching this film. The film is made available for free by Russian Centre of Science & Culture, New Delhi on YouTube. A hardworking simpleton named Semyon,  in Soviet Russia, is sent by his loving wife on a luxury cruise ride to Istanbul. On his return, an incompetent gang of smugglers, mistake him for their accomplish and cast his arm with diamonds and jewelry.  What happens next, did they recover their loot or did Semyon get into trouble? I grew up in an India…

  • Flashback,  Lounge

    Humour in Uniforms

    My interactions with the people in the (Indian) Army were during my School Days in NCC (National Cadet Corps) – mainly during the 13 Days Sivaji Trail trek in 1988 that happened around the hills of Pune, and, the annual NCC Camp and a visit many years later to the Officers Academy, at the NDA near St. Thomas Mount, Chennai. In those (limited) interactions, the officers and Jawans came out (obviously) as straight-jacket disciplinarians, or at that age that’s what I had observed. Later when I read “Humour in Uniforms” in Reader’s Digest India, comedy works like Beetle Bailey and watched TV shows like the MAS*H (TV series) I got…