-
A visit to Madraspaper and a selfie with editor Pa Raghavan
மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் திரு பா ராகவன் அவர்களை அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்த போது. தொழில்நுட்ப விஷயங்களை: செல்பேசியில் நான் பயன்படுத்தும் தமிழ்99 விசைப்பலகை, கூகிள் டிரைவ்யில் இருக்கும் சில தொந்தரவுகளை, வேர்ட்பிரஸ் தரவுகள் சேமிப்பு (பேக்அப்), நான் கேட்கும் பாட்காஸ்ட்கள், பிளெக்ஸ் மீடியா சர்வர், கணினியில் பல நேரம் வேலை செய்ய வசதியான மேஜைகள்/நாற்காலிகள், மைக்ரோசாப்ட் எர்காநாமிக் (ergonomics) விசைப்பலகை; பாம்பே லஸ்ஸியின் (தேவி திரையரங்கம் பின்னால்) சுவை என்று பலவிஷயங்களைப் பேசினோம், ஆசிரியரின் நேரம் கருதி சீக்கிரமே விடைபெற்றேன். வேறு எதைப் பற்றியும், சினிமா உட்பட பேசவில்லை! #madraspaper #நண்பர்கள்சந்திப்பு
-
How to solve the talent crunch, my quote in BBC News Tamil
சில நாட்களுக்கு முன் நண்பர் திரு செல்வ முரளி, பிபிசி இந்தியாவில் தான் எழுதும் ஓர் கட்டுரைக்கு என் பேட்டியைக் கேட்டார். தலைப்பு கணினி துறையில் இன்றைக்கு இருக்கும் ‘வேலைக்கு சரியான ஆட்கள் இல்லை’ என்கிற நிலையைப் பற்றி. “இஞ்ஜினியரிங் படிக்காமலேயே சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆவது எப்படி?” என்றத் தலைப்பில் முழுக் கட்டுரையும் இன்று வெளிவந்தது. திறமையானவர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள், இன்னொரு பக்கம் கல்வித்தரம் குறைவாக இருப்பதால் பல்லாயிரம் பொறியாளர்கள் படித்து வந்தாலும், அவர்களில் பலர் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட முடியாத அளவுக்கு இருக்கிறார்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது? இதுதொடர்பாக சென்னையை சேர்த்த மென்பொருள் ஆலோசகரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கௌரவ மேலாண்மை இயக்குநருமான தி.ந.ச.வெங்கடரங்கன் கூறியதாவது: இனி எதிர்காலம் ‘No Code Low Code’: “கொரோனா காலத்தில் இரண்டு வருடமாக பல தொழில்கள் முடங்கிவிட்டன. ஆகையால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பல்வேறு துறைகளிலும் புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இப்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துவிட்டதால் எல்லா நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டன. ஆகையால், நிறைய…
-
திரு க.சுபாஷிணி அவர்களோடு ஓர் மாலை சந்திப்பு
இன்றைய மாலைப் பொழுது இனிமையாகப் போனது. ஜெர்மானியக் கணினிப் பொறியாளர், தமிழ் மரபு அறக்கட்டளை இயக்குனர், வரலாற்று ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் திரு க. சுபாஷிணி அவர்களை அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டேயிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு நாட்களாக சென்னை புத்தகக் காட்சி 2022யில் எனக்கு வேண்டிய எல்லாப் புத்தகங்களும் வாங்கியாயிற்று என்று நிம்மதியாயிருந்த எனக்கு, சுபாஷிணி மேலும் ஆறேழு புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளார், நாளை போய் அவற்றை வாங்கவேண்டும். இதற்குத் தான் நண்பர்களை அதுவும் புத்தகங்களை எழுதும்/வாசிக்கும் நண்பர்களைப் பார்க்க அவர்களின் இல்லத்திற்குச் சென்றுப் பார்க்கக்கூடாது என்பது – நமக்குச் செலவு (அறிவு வரவு உண்டு தான்!).
-
Listening to Chef Damu
Listening in person to Chef Damu (Chef Dr K Damodaran) about his life journey was fascinating. Apart from the arduous work and his aspiration, I learned from his autobiography it was his ability to continuously upgrade his skills, reinvent himself that has been the reason for his success. It was a great inspiration. He had started his career as a trainee in Taj Mumbai, working the deep-freeze room, suffering cuts and bleeding, then after years of hard work became a chef; then he made a switch to be a vice-principal in a hotel management college, then promoted as a principal in another college, working hard to get his name in…
-
Met with Tamil writer Mr Pa Raghavan
இன்றைய மாலைப் பொழுது இனிமையாகக் கழிந்தது. பிரபல எழுத்தாளர், என் நண்பர்களின் நண்பர், எனது பேஸ்புக் நண்பர், திரு பா ராகவன் இன்று என் வீட்டிற்கு வந்திருந்தார், சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். முன் ஆண்டுகளில் நேரில் ஒன்றிரண்டு முறைப் பார்த்திருக்கிறேன், அதிகம் பேசியதில்லை. எழுத்தாளர் என்பதால் என்னவோ, அவர் எதைப் பற்றி விவரித்தாலும் அது கேட்கச் சுவையாக இருந்தது. நேரம் போவதே தெரியவில்லை. அது அவரின் நேர மேலாண்மையாகட்டும், ஒரே சமயம் ஆறு தொடர்களுக்கு வசனம் எழுதியதாகட்டும், வீட்டு வாசலில் பால் டப்பாவில் ஸ்கிரிப்ட் தாள்களைப் போட்டு வைப்பதாகட்டும், அவரின் பேலியோ உணவு முறையாகட்டும், அவர் மனைவியைப் பெண் பார்க்க எங்கள் வீட்டின் அடுத்தவீட்டிற்குப் பல ஆண்டுகள் முன்பு வந்ததாகட்டும், படத் தளங்களுக்கு அவர் போனதேயில்லை என்பதாகட்டும் இப்படி உரையாடல் போய்க் கொண்டேயிருந்தது. வருகைக்கு மிக்க நன்றி திரு Pa Raghavan. பேசும் போது, லிப்கோ அகராதியைப் படித்துப் படித்தேக் கிழித்ததைப் பற்றிச் சொல்லி, அந்த பிரதி எங்கேப் போனது தெரியவில்லை, தன்…
-
Low Code and No Code – A Podcast discussion with a friend
It was fun speaking in this podcast on #lowcode & #nocode. Check it out. My friend and former Microsoftie Mr Kumaran Anandan and friends host a weekly podcast on #SoftwareArchitecture. In a recent episode I was invited to discuss about why I believe the low-code no-code platforms are (a large part of) the future of software development. A few points I mentioned in the talk (from the notes from Kumaran): Low/No Code has 15% YoY growth on IT spend. A casual search in Indian job sites show over 28,000 jobs postings for Power Apps We need to empower the employee, A Low-Code platform is a great way for…
-
My grandfather LIFCO Sarmaji and Sri Rajaji
சில வாரங்கள் முன்பு, நண்பர் திரு சுஜாதா தேசிகன் (Desikan Narayanan) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தப் போது, ராயல்டி என்று பேச்சு வந்தது. என் தாத்தா லிப்கோ (LIFCO Publishers Pvt. Ltd.) நிறுவனர் திரு கிருஷ்ணசாமி சர்மா (LIFCO Sarmaji) அவர்களுக்கு திரு ராஜாஜி அவர்களோடு இந்த விசயத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது, அதை திரு தேசிகனிடம் பகிர்ந்துக் கொண்டேன். சில தினங்களுக்குப் பின் மீண்டும் என்னைத் தொடர்புக் கொண்டு, நான் கூறியவற்றை கல்கி வாரயிதழில் தனது கடைசிப் பக்கம் கட்டுரையில் எழுதலாமா? எனக் கேட்டார். கரும்பு தின்னக் கூலியா, தாராளமாக என்றேன். திரு ராஜாஜியும் சரி, என் தாத்தாவும் சரி, மிக உயர்ந்த மனிதர்கள், அவர்களைப் பற்றி வழக்கில் பேசலாம், ஆனால் தவறாக ஏதாவது என்னால் அச்சில் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், என் தாத்தாவின் அந்தரங்கச் செயலாளராகப் பல வருடங்கள் பணிபுரிந்த எங்கள் குடும்ப நண்பர் (திருவஹீந்தரபுரம், கடலூர்) திரு வேணுகோபால் (Venugopal Desikan) அவர்களைத் தொலைப்பேசியில் அழைத்துச்…
-
Sinthai Kavarntha Thiruvizhakkal
நல்லவனுக்கு மட்டும்தான் வாழ்க்கை திருவிழாவாகிறது – ரால்ப் வால்டோ எமர்சன். ஊரெல்லாம், சமூக வலைத்தளங்களில், செய்திகளில் “கொரோனா, கொரோனா” என்ற அச்சப் படுத்திக் கொண்டிருக்கும் போது – உலகத்தின் மீதும், மக்களின் மீதும், நம்பிக்கையை, நமக்கு கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்தும் வகையில் நடந்தது இந்த நிகழ்ச்சி. என்ன நிகழ்ச்சி என்று கேட்கிறீர்களா? திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின் புதிய பயணக்கட்டுரைத் தொகுப்பான “சிந்தை கவரும் திருவிழாக்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா தான் அது. புத்தகங்களைப் படிப்பது குறைந்திருக்கும் இன்றைய காலத்தில், புத்தகங்களை வாங்குவது என்பதே அரிதாகவிட்டது, ஒரு புத்தகத்தை விற்பனைக்கு எடுத்துச் சென்று சாதிப்பது மிகப் கடினமான ஒன்று, அப்படிப்பட்ட சூழலில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் பார்வையாளர்கள் வருவதே மிகவும் அரிது – இதையெல்லாம் முறியடிக்கும் விதத்தில் இருந்தது நேற்றைய (14 மார்ச் 2020) மாலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா. ரம்மியமான மாலைப் பொழுதில், சென்னை கோட்டூர்புரத்தில், மாளிகை போன்ற ஒரு வீட்டின்…