
Met with Tamil writer Mr Pa Raghavan
இன்றைய மாலைப் பொழுது இனிமையாகக் கழிந்தது. பிரபல எழுத்தாளர், என் நண்பர்களின் நண்பர், எனது பேஸ்புக் நண்பர், திரு பா ராகவன் இன்று என் வீட்டிற்கு வந்திருந்தார், சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். முன் ஆண்டுகளில் நேரில் ஒன்றிரண்டு முறைப் பார்த்திருக்கிறேன், அதிகம் பேசியதில்லை.
எழுத்தாளர் என்பதால் என்னவோ, அவர் எதைப் பற்றி விவரித்தாலும் அது கேட்கச் சுவையாக இருந்தது. நேரம் போவதே தெரியவில்லை. அது அவரின் நேர மேலாண்மையாகட்டும், ஒரே சமயம் ஆறு தொடர்களுக்கு வசனம் எழுதியதாகட்டும், வீட்டு வாசலில் பால் டப்பாவில் ஸ்கிரிப்ட் தாள்களைப் போட்டு வைப்பதாகட்டும், அவரின் பேலியோ உணவு முறையாகட்டும், அவர் மனைவியைப் பெண் பார்க்க எங்கள் வீட்டின் அடுத்தவீட்டிற்குப் பல ஆண்டுகள் முன்பு வந்ததாகட்டும், படத் தளங்களுக்கு அவர் போனதேயில்லை என்பதாகட்டும் இப்படி உரையாடல் போய்க் கொண்டேயிருந்தது.
வருகைக்கு மிக்க நன்றி திரு Pa Raghavan.

பேசும் போது, லிப்கோ அகராதியைப் படித்துப் படித்தேக் கிழித்ததைப் பற்றிச் சொல்லி, அந்த பிரதி எங்கேப் போனது தெரியவில்லை, தன் தந்தைத் தனக்குக் கொடுத்த அந்த பிரதிக் கிடைத்தால் தன் மகளுக்குக் கொடுக்க ஆசை என்றுச் சொன்னார். உடன் என் அண்ணனிடம் (அவர் தான் இப்போது லிப்கோவை நடத்துகிறார்) சொல்லி திரு ராகவனுக்கு ஒரு பெரிய லிப்கோ அகராதியை அனுப்பச் செய்தேன். இன்று (வியாழன், 29 ஜூலை 2021) பிரதி கிடைத்ததும், தன் மகிழ்ச்சியைத் தொலைப்பேசியில் என்னை அழைத்துப் பகிர்ந்துக் கொண்டார், அவரின் வலைப்பக்கங்களிலும் எழுதியுள்ளார். அவர் எழுத்தில் படித்தது, அதோடு அவரின் முப்பது வருடப் பழைய பிரதியும் கிடைத்துவிட்டது என்று, அதன் படத்தையும் பகிர்ந்தது, எனக்கு மிகுந்த மன நிறைவாக இருந்தது. நன்றி.

நீங்கள் லிப்கோ அகராதிகளை வாங்க விரும்பினால், தொடர்பு எண்கள் இங்கே.

