-
ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை நுண்ணறிவு இதிலும் வருகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளச் சென்ற வாரம் அந்த நிறுவனத்தின் வருடாந்திர மென் பொறியாளர்களின் மாநாடான மைக்ரோஃசாப்ட் பில்ட் 2023-ல் என்னென்ன சொல்லப்பட்டன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். இந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே: விண்டோஸ் கோ-பைலட் இன்றைக்குச் செல்பேசியாகட்டும் கணினியாகட்டும்… அவற்றில் இருக்கும் வசதிகள் பல ஆயிரம். என்னென்ன வசதிகள் இருக்கின்றன, அவற்றை எங்கே போய் இயக்குவது, எப்படி பயன்படுத்துவது என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்வது இயலாத செயல். தேடுபொறியில் தேடிக் கண்டு கொண்டாலும் அவற்றைச் சரியாக இயக்குவது கடினம். இந்தக் குறையைக் களைய, ‘மைக்ரோசாப்ட் துணை விமானி’ (கோ-பைலட்) என்னும் சேவையை விண்டோஸில் கொண்டு வருகிறார்கள். இதைக் கொண்டு என்ன செய்யலாம்? கோப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்…
-
எங்கெங்கு காணினும் ஆப்புகளடா!
உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு செயலிகளைத்தான் மொத்த உலகமும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. உண்மையில் பல லட்சக்கணக்கான செயலிகள் அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்கின்றன. நாம் பயன்படுத்தத் தவறும், ஆனால் முக்கியமான சில செயலிகளை இங்கே பார்ப்போம். எழுதுவதற்கு – ஸ்கரிவேனர் (Scrivener), ஐ.ஏ. ரைட்டர் (iA Writer) புத்திசாலியாகவும்! – ப்ரெய்ன்-ஸ்பார்க் (BrainSparker), மைன்டு-முப்பு (mindmup.com) ஆரோக்கியமாக இருக்கவும் – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செவன்-மினிட்-வொர்க்அவுட் (Johnson & Johnson 7 Minute Workout)
-
கூகுள் ஐ.ஓ. 2023
கூகுள் ஜீபூம்பா: கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை செய்ததிலிருந்து கூகுள் கொஞ்சம் அரண்டு போயிருக்கிறது. இந்தப் போட்டியை அது எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று அனைவரும் அந்த நிறுவனத்தின் வருடாந்திர மென்பொறியாளர்களின் மாநாடான கூகுள் ஐ.ஓ.வைக் கவனித்தார்கள். அப்படி அந்த மாநாட்டில் என்ன புதுமைகள் வெளிவந்தன என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
-
Gamified Software usability session
Last week, I had a blast hosting a gamified session for a group of techies! We played Red vs Blue style games to spot software usability and quality issues, and it was so much fun! I strongly believe that software usability should not be an afterthought or left solely to UX designers or testers. It’s essential that all stakeholders in a software team are aware of it and actively practice it. It cannot be enforced by a process alone; it must be ingrained in the culture. And what better way to encourage a culture of software usability than by gamifying it?😉
-
சிறு வியாபாரிகளும் கலக்கலாம்!
இன்று சிறு கூட்டல் செய்யக்கூடச் செல்பேசியோ கணினியோ தேவை. எழுதி ரசீது கொடுப்பதெல்லாம் காலாவதியான விஷயம். கணினி வேலை செய்யவில்லை என்றால் சின்னக் கடையில் கூட, பெட்டிக் கடையைத் தவிர, எந்தப் பொருளையும் வாங்க முடியாது. ஆனால் இப்படியான சிறு, குறு நிறுவனங்களும், ஏன்… தனி ஒருவர் செய்யும் வியாபாரங்களும் கூடச் சில எளிய செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் நேரத்தை மிச்சப்படுத்தி, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கலாம். இவற்றில் பலவும் இலவசமாகக் கிடைக்கின்றன. ஜோகோ இன்வாய்ஸ், மைக்ரோசாப்ட் புக்கிங் மற்றும் ஃபிரெஷ் வொர்க்ஸ் சி. ஆர். எம். இவற்றைப் பற்றிய இன்றைய மெட்ராஸ் பேப்பரில் ஒரு குறு அறிமுகம். சந்தா எடுக்கவும், படிக்கவும், கருத்துக்களைப் பகிரவும். நன்றி!
-
Wikiconference India 2023 – A Panel Discussion
Happy to have participated in a panel discussion in Wikipedia WikiConference 2023 that is happening in Hyderabad. I met a lot of interesting and energetic volunteers and community members. I spoke about enterprises and open sources, community contribution in Indic languages, the need for open source to evolve in the time of LLM and AI, create awareness with the CIO, CEO communities on what it takes to contribute to open source, the maturity of #indic language computing, need to do fast releases in opensource projects, train community contributors in skills beyond coding and more.
-
கூகுள் ஷீட்ஸ் விரிதாள்கள்
கணக்குகள் போட, பல்வேறு மூலத்தரவுகளை விரைவாகப் பகுத்துப் பார்க்க, எந்த வகை அட்டவணைகளையும் எளிதாகச் செய்ய என அலுவலகங்களில் தினமும் பலநூறு முறை பயன்படுத்தப்படும் மென்பொருள் விரிதாள்கள் (ஸ்ப்ரெட் ஷீட்ஸ்). இதில் பிரபலமானது மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் அதைப் போன்ற கூகுள் ஷீட்ஸ். இந்த இரு நிறுவனங்களும் பல புதிய வசதிகளைக் கடந்த ஆண்டுகளில் கொண்டு வந்திருக்கிறார்கள், அவற்றில் கூகுள் ஷீட்ஸில் சமீபத்தில் வெளிவந்துள்ள சிலவற்றை இந்த வார மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் காணலாம். தேதிகள் ஸ்மார்ட் சிப்ஸ் பீப்பிள் ஸ்மார்ட் சிப்ஸ் பிளேஸ் ஸ்மார்ட் சிப்ஸ் ஸ்மார்ட் ஃபில் மைக்ரோசாப்ட் எக்ஸெல் எங்கேயும் எப்போதும் காணொலி நேர வரைபடம் பெயரிடப்பட்ட செயலாற்றிகள்
-
A letter typed on a typerwriter!
OMG! Just received a letter typed on a typewriter! It’s been ages since I last saw one! Opening it took me back to a totally different era! Fun fact: I first started using a typewriter almost 35 years ago in my dad’s publishing company and I even taught myself how to type using the three-finger (2 + 1) method!😂 I even imagined myself as a famous author and typed away for days on end a story! 📝 But guess what? I don’t even remember the story now! Do you have any memories of using a typewriter? Share them in the comments! 💬