Category

Interviews

Category

சிறிய உதாரணம், நிறுவனங்களுக்கான மென்பொருள், குறுஞ்செயலி விசயமாக 1000 இந்திய தலைமை செயல் அதிகாரியை நம்மால் (எப்படியும்) சந்தித்துவிட முடியும். ஆனால் ஒரு 10 லட்சம் பேரை சென்றடைய வேண்டுமெனில் நம்மால் செய்யமுடியுமா? எனவே B2C துறையில் நாம் மிகுந்த அனுபவத்தினை பெறவேண்டும். இன்று நண்பர் திரு செல்வ முரளி என்னைத் தொடர்பு கொண்டு பத்திரிகை.காம் இணையத்தளத்திற்காக ஒரு பேட்டி எடுத்தார், அதில் அவர் என்னைக் கேட்ட கேள்வி “சமீபத்தில் பிரபலமாக இருக்கும் டிக்-டாக் போன்ற செயலிகள் எதுவும் ஏன் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை?”, அதற்கு அந்தக் கட்டுரையில் நான் கூறிய பதில் கீழே: //தொழில்நுட்ப முனைவு எல்லாமே பி2பி (B2B – ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்திற்கு) நிறுவனங்கள் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் இணைந்து  தொழில் துறைக்குத் தேவையானவற்றை உருவாக்குகிறார்கள், ஆனால் உண்மையில் தேவை, B2C எனப்படும் நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்பதில் தான் இருக்கிறது. நம்முடைய மென்பொருள், குறுஞ்செயலி…

விவசாயிகளுக்கு பயந்தரும் பல செய்திகளை தர ஒரு செல்பேசி செயலியையும், வலைத்தளத்தையும் – விவசாயம் என்ற பெயரில் நண்பர் செல்வ முரளி, சிறப்பாக நடத்தி வருகிறார். இதில் வருமானம் அதிகம் இல்லையென்றாலும் ஒர் தன்னார்வ முயற்சியாக, அவரின் ஆர்வத்தில் நடத்துகிறார். இவரின் “விவசாயம்” குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் 2015 ஆண்டிற்கான ‘முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது’…

எனது நண்பர் திரு அண்ணா கண்ணன் அவர்கள் நடக்கவிருக்கும் 9ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் பற்றி என்னிடம் சமீபத்தில் பேட்டிக் கண்டார். பல விசாயங்களைப் பற்றிப் பேசினோம். அதைப் படிக்க “வல்லமை” தளத்திற்கு செல்லவும் (PDF copy is here). நாங்கள் பேசிய சில தலைப்புகள்: உத்தமம் இது வரை நடத்திய 8 மாநாடுகளின்…

கலைஞர் தொலைக்காட்சியில் எனது பேட்டி இந்த வாரம் திங்கட்கிழமை அன்று கலைஞர் டிவியில் காலை எட்டு மணிக்கு எனதுப் பேட்டி ஒளிபரப்பானது. போன வெள்ளியன்று விஜிபி கடற்கரை தங்கும் விடுதியில் திரு. ரமேஷ் பிரபா அவர்கள் கேள்விக் கேட்க நான் பதிலளித்தேன். கீழேயுள்ள இந்த ஒளிப்பதிவைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லவும். திரு. ரமேஷ் பிரபா அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்த நண்பர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு என் நன்றி. இந்தப் பேட்டியில் நான் என்னப் பேசினேன் என்று நான் இங்கே எழுதுவதை விட நண்பர் மறைமலை இலக்குவனார் எனக்கு அனுப்பிள்ள ஒரு மின்-அஞ்சலில் மிக அழகாக  சொல்லியுள்ளார். ஆகவே அதன் சுருக்கத்தை இங்கே கொடுத்துள்ளேன். “இணையத்தில் தமிழ் பெற்றுள்ள ஏற்றம், எழுத்துருவைச் சீரமைப்பதில் ஏற்பட்ட பல்வேறு கருத்துக்குழுக்கள், இன்று யூனிக்கோடு எவ்வகையில் உதவுகிறது என்பது குறித்த விவரம்,விசைப்பலகை என்றால் என்ன, விசைப்பலகைகள் மாறுபட்டு அமைந்தது ஏன், ஆங்கிலத்தில் விசைப்பலகையின் ஒருசீர்மை,…

In the corridors of Mix ’08, Scott Hanselman (PM, Microsoft and Ex-Regional Director) got hold of me & my fellow Regional Director (Delhi) Vinod Unny for an Interview. The topic was on “Outsourcing” and how it affects both sides of…