• Chennai,  Lounge,  தமிழ்

    குடி குடியைக் கெடுக்கும்

    இது சமூக சீரழிவு. கலாச்சார சீரழிவு என்று சொல்லவில்லை, ஆனால் கண்டிப்பாகச் சமூக சீரழிவு. பெண்கள், ஆண்கள் என்று பாகுபாடு இல்லை, யாராக இருந்தாலும் அவர்களை மறந்து/அல்லது வேண்டும் என்றே குடித்துவிட்டு ரௌடியிசம் பண்ணுவது சமூக சீரழிவு தான். இந்த மாநிலத்தில் குடிக்கவில்லையா, அந்த நாட்டில் குடிக்கவில்லையா என்ற சண்டைக்கு வரவில்லை. இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து எந்த மாதிரியான ஓர் உலகத்தில் வாழுகிறோம் என்று நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்? 22 மார்ச் 2023 இந்து தமிழ் திசை நாளிதழில் வந்த செய்தி “திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே மது போதையில் பேருந்துக்கு அடியில் படுத்து ரகளையில் ஈடுபட்ட பெண்கள். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே வாலாஜா சாலையில் மார்ச் 17-ம் தேதி நள்ளிரவு 6 இளம் பெண்கள் மது போதையில் அந்த வழியாகச் சென்ற நபர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அந்த வழியாக வந்த மாநகர அரசுப் பேருந்தின் முன்படுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அதோடு நின்றுவிடாமல் சரக்கு…

  • Chennai,  தமிழ்

    தவறாக மாட்டிக் கொண்டேன்!

    இன்றைக்குக் காலை மைலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் அருகே ஒரு துக்க நிகழ்விற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. பொதுவாக அந்தப் பகுதிக்கு காரில் செல்லக் கூடாது, நிறுத்த இடம் கிடைக்கவே கிடைக்காது என்பது பிறந்த குழந்தை உட்படச் சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெரியும். அதுவும் இப்போது மெட்ரோ பணிகள் வேறு, கேட்கவே வேண்டாம். காலை எட்டு மணி தானே, கடைகள் திறந்திருக்காது பார்க்கிங் கிடைக்கும் என நினைத்து காரை எடுத்துக் கொண்டு சென்றது என் முதல் தவறு. அங்கே கிழக்கு மாட வீதியில், பாரதிய வித்யா பவன் வாசலில் நிறுத்திவிடலாம் என்பது என் திட்டம். ஆனால் எனக்கு முன்பே பல நூறு வாகனங்கள் எப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்பது தெரியாமல் நான் போய் இடம் கிடைக்காமல் திண்டாடினேன். அதற்குள் என் அன்பு மனைவி “இதற்குத் தான் கார் வேண்டாம் என்று சொன்னேன்” என ஆரம்பிக்க, எனக்குப் பின்னால் வாகனங்கள் வந்து கொண்டேயிருக்க, அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்று நினைத்து கோயிலை காரில் ஒரு சுற்றுச் சுற்றினால்…

  • Chennai,  தமிழ்

    எனக்கு வந்த இந்த வருட காய்ச்சல்

    இரண்டு நாட்களுக்கு முன் ஆரம்பித்தது. முதலில் வறட்டு தொண்டை மற்றும் சோர்வு. நேற்று அது முன்னேறிக் காய்ச்சல், அதீத உடல் வலி, பயங்கரச் சோர்வு என ஆனது. மருத்துவரைப் பார்த்தேன், வழக்கமான மாத்திரைகள் எழுதிக் கொடுத்து நான்கைந்து நாட்களில் சரியாகிவிடும் என்றார். இன்று பரவாயில்லை. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் பரவும் தொற்றுகள், இந்த ஆண்டு மார்ச் வரை தொடர்வது புதிர். நான் புத்திசாலியாகத் தப்பித்துவிட்டேன் என நினைத்தேன் – மெட்ரோ, திரையரங்கு, கல்யாண மண்டபம், பல் பொருள் அங்காடிகள் எனக் கூட்டமான இடங்களில் எப்போதும் N95 மாஸ்க் அணிந்து தான் செல்கிறேன், சனிடைசர் பயன்படுத்துகிறேன், பெருந்தொற்று முடிந்தும் கூட. இருந்தும் இந்த வருட ஃப்ளூ என்னைப் பிடித்துவிட்டது. இரண்டு வாரம் முன்னர் என் பையன் கல்லூரியில் ஆண்டு விழா, அதிலிருந்து அவன் கொண்டு வந்ததாகத் தான் இது இருக்க வேண்டும். அவனுக்குப் போன வாரம் சளி, இருமல், வேறு எதுவும் தொந்தரவு இல்லை. அவனை உடனே தனிமைப் படுத்தியாயிற்று. அவனும் என்னைப் போல முகக்கவசம்…

  • Gadgets,  தமிழ்

    தொந்தரவு அழைப்புகளிலிருந்து காப்பாற்றும் ஐபோன் வசதி

    வாரத்தில் முதல் வேலை நாள், திங்கள் கிழமை காலையில் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம் என்றால், வங்கி காரர்கள் கடன் வேண்டுமா என்ற தொந்தரவு அழைப்புகள் தான் வருகிறது. ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அழைப்பு பாருங்கள். இத்தனைக்கும் என் செல்பேசி எண்ணை நான் அவ்வளவாக வெளியில் கொடுப்பதில்லை. ஸ்வீகி, அமேசான், பி. வி. ஆர். சினிமா போன்ற செயலிகளுக்கு, ரிலையன்ஸ், மளிகைக் கடைகளுக்கு என்று தனியாக ஓர் எண் வைத்துள்ளேன், அந்தச் செல்பேசியைத் தேவை என்கிற போது மட்டுமே ஒலி எழுப்பும் நிலையில் வைத்திருப்பேன். இருந்தும் என் முதன்மை செல்பேசி எண்ணுக்கு இவ்வளவு அழைப்புகள். நல்ல வேலை, ஐபோனில் இருக்கும் இந்த ஒரு வசதி என்னைக் காப்பாற்றுகிறது. தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுத்துவிடவும் என்கிற இந்த செட்டிங் தான் அது. இதை இயக்க, ஐபோனின் ஃபோன் அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும். இந்த எளிய வசதி ஒரு வரப் பிரசாதம்! பின் குறிப்பு: இதனால் சில சமயம் தெரியாத ஆனால் வேண்டிய அழைப்புகள் வந்தால், அதைத்…

  • Articles,  Technology,  தமிழ்

    ஆன்ட்ராய்ட் உதவிக் குறிப்புகள்

    ஐஃபோன் என்றால் அதில் ஒரே இயங்குதளம் தான்: அது ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-ஓ-எஸ். இது ஒரு காப்புரிமை பெற்ற படைப்பு. வேறு எவரும் இதை வெளியிட முடியாது . ஆனால் ஆன்ட்ராய்ட் அப்படியில்லை. அது ஒரு திறன்மூலப் படைப்பு. அதனால் ஒவ்வொரு செல்பேசி உற்பத்தியாளரும் மூல ஆன்ட்ராய்ட் மென்பொருளைப் பிரதியெடுத்து அவர்களின் விருப்பத்திற்கு மாற்றி வெளியிட முடியும். அப்படித் தான் செய்கிறார்கள். இதனால்தான் சாம்சங் செல்பேசியினுள், ஒப்போ செல்பேசியினுள், ஒன்பிளஸ் செல்பேசியினுள் எல்லாம் இருப்பது ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான் என்றாலும், ஒவ்வொன்றும் அங்கங்கே மாறுபடுகின்றன. இன்று பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் செல்பேசிகளை இயக்குவது இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான். அதனால் அதிலிருக்கும் அதிகம் அறியப்படாத சில வசதிகளைப் பற்றிய உதவிக் குறிப்புகளை இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். 📲வலம்வரல், 📢அறிவிப்புகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டுங்கள், 🔍கூகுள் உதவியாளர் (Google Assistant), 🕵🏾‍♀️போனைக் கண்டுபிடிக்கவும் (Find My Device), 🔕தொந்தரவு செய்யாதே (Do Not Disturb), 🪟விட்ஜெட்டுகள் (Widgets), 👩🏾‍💻நிரலாளர் முறை எச்சரிக்கை! (Developer Mode). #மெட்ராஸ்பேப்பர் #ஆன்ட்ராய்ட்

  • Chennai,  Events,  தமிழ்

    Chennai Trade Fair 2023

    பொதுவாக எல்லா ஆண்டும் சென்னை தீவுத் திடலில் நடக்கும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சிக்கு சென்றுவிடுவேன். பெரியதாகப் பார்க்க அங்கே எதுவும் இருக்காது, அதே கடைகளும், தரம் குறைந்த சிற்றுண்டிகளும், சுவாரஸ்யமில்லாத அரசாங்கத்துறை அரங்குகளும் தான் இருக்கும். நான் போவது, என் அப்பா என்னைச் சிறிய வயதில் இங்கே அழைத்து வந்த நாட்களின் நினைவுகளுக்காக. இன்று 47 வது பொருட்காட்சி 2022-2023க்கு சென்றிருந்தேன். என் கண்ணில் முதலில்பட்டது உணவுக் கடைகள் தான் – பாப்கார்னில் ஆரம்பித்து, பஞ்சுமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பானிபூரி, ஜிகர்தண்டா, உருளை சுருட்டி, காலன் சூப், கார்லி பிலவர் பக்கோடா, டெல்லி அப்பளம் எனப் பல பல சிற்றுண்டிகள். ஆனால் எல்லாவற்றையும் பார்த்துப் படம் எடுத்ததோடு சரி, எதையும் வாங்கி சாப்பிடவில்லை. அங்கே விற்கப்படும் உணவின் தரம், உபயோகப்படுத்தும் நீரின் சுத்தம் எப்படியிருக்கும் என்று பயமாகவிருந்தது. அதனால் ஆரோக்கியம் கருதி எடுத்துச் சென்ற தண்ணீரைப் பருகி, ஓர் ஆவின் பனிக்கூழ் வாங்கி ரசித்துச் சாப்பிட்டுவிட்டு கடைகளை, அரசாங்கத்துறை அரங்குகளைப் பார்த்து (அதைப் பற்றிய…

  • Articles,  தமிழ்

    சொல்லும் செயலும் – மெட்ராஸ் பேப்பர்

    அன்றாடம் அலுவலகத்தில் பயன்படுத்தும் செயலிகளில் முதலிடம் பிடிப்பது மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸ்சேல் என்கிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளாகத் தான் இருக்கும். ஒரு கணிப்புப்படி எண்பது சதவிகித பயனர், மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளில் இருக்கும் வெறும் இருபது சதவிகித வசதிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்; அப்படியென்றால் மீதமிருக்கும் எண்பது சதவிகித வசதிகள் என்ன, அவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்கிற கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை பதில் சொல்லும். முன்வடிவமைத்த படிவங்கள் மாற்றங்களை அடையாளம் காணுங்கள் கருத்துகள் பொருளட்டவணை வெள்ளைத் தாள் மொழிபெயர்ப்பு பேசியே எழுதவும் செல்பேசி இணைப்பு ஓவியக் காட்சிகள், மனிதர்கள் இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (8 பிப்ரவரி 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

  • Chennai,  Faith,  தமிழ்

    Sri Gangadeeswarar Temple, Purasaiwakkam, Chennai

    சென்னை புரசைவாக்கம் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு கங்காதரேசுவார் திருக்கோயிலுக்குச் சென்று இன்று ஞாயிறு காலை அமைதியாகத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த பகுதியில் இவ்வளவு பெரிய கோயில் இருப்பது வெளியில் இருந்து தெரியவில்லை. மூலவர் திருநாமம்: ஸ்ரீ கங்காதரேசுவார், தாயார்: ஸ்ரீ பங்கஜாம்பாள்.