உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை நுண்ணறிவு இதிலும் வருகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளச் சென்ற வாரம் அந்த நிறுவனத்தின் வருடாந்திர மென் பொறியாளர்களின் மாநாடான மைக்ரோஃசாப்ட் பில்ட் 2023-ல் என்னென்ன சொல்லப்பட்டன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

இந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே:

விண்டோஸ் கோ-பைலட்
இன்றைக்குச் செல்பேசியாகட்டும் கணினியாகட்டும்… அவற்றில் இருக்கும் வசதிகள் பல ஆயிரம். என்னென்ன வசதிகள் இருக்கின்றன, அவற்றை எங்கே போய் இயக்குவது, எப்படி பயன்படுத்துவது என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்வது இயலாத செயல். தேடுபொறியில் தேடிக் கண்டு கொண்டாலும் அவற்றைச் சரியாக இயக்குவது கடினம். இந்தக் குறையைக் களைய, ‘மைக்ரோசாப்ட் துணை விமானி’ (கோ-பைலட்) என்னும் சேவையை விண்டோஸில் கொண்டு வருகிறார்கள். இதைக் கொண்டு என்ன செய்யலாம்?

கோப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்
ஒரு சமயத்தில் இருநூறு பக்கங்கள் கொண்ட ஒரு பி.டி.எஃப். கோப்பு வருகிறது. அதை உடனடியாகப் படித்து, அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இருக்கவே இருக்கிறது விண்டோஸ் கோ-பைலட்! வந்த கோப்பை அதனிடம் தந்து சுருக்கத்தைக் கொடுக்கவும் என்றால், நொடியில் அழகான சுருக்கம் கிடைத்து விடும். இதைப் பல வகையான கோப்புகளுக்குச் செய்யலாம். கோப்பில் இருக்கும் முக்கியப் பகுதிகளைச் சொல்லவும், வேறு மொழியில் மொழி பெயர்க்கவும், இளைஞர்கள் பேசும் மொழியில் மாற்றி எழுதவும் என்று பலவிதமாகக் கேட்கலாம், விடை உடனடியாக வரும்.

பாடல்களைக் கேட்கலாம்
எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை நான் கேட்காத வெளிநாட்டுக் காதல் பாட்டு வேண்டும் என்று விண்டோஸ் கோ-பைலட்டைக் கேட்டால் அது ஸ்போட்டிபை செயலியோடு பேசி அத்தகைய பாடல்களை ஒலிக்கச் செய்யும்.

 

Tagged in:

,