பொதுவாக விண்டோஸ் கணினியில் கோப்புகளை அழித்தால் (டெலீட்), சமர்த்தாக அவை ரீசைக்கிள் பின் (Recycle Bin) என்னும் சிறப்பு கோப்புறையில் (போல்டர்) போய் உட்கார்ந்துவிடும். தவறுதலாக அழித்திருந்தால், அங்கே போய்ச் சுலபமாக மீட்டெடுக்கலாம். ஆனால் இந்த ரீசைக்கிள் பின் வசதி, யு-எஸ்-பி பென்-டிரைவ்களுக்கு, காமிராவில் போடும் மெமரி-கார்ட்களுக்குக் (சிறிய சேமிப்பு அட்டை) கிடையாது. அவற்றில் அழித்தது அழித்தது தான் – போயே போச்சு! நம்மில் பலர், இப்படிச் சில முக்கியமான பதிவுகளை இழந்திருக்கிறோம். இந்தக் கோப்புகளை மீட்டெடுக்கச் சில வழிகளை இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் வந்துள்ள எனது கட்டுரையில் படிக்கலாம்.

இந்த வசதியைப் பற்றி பார்க்கும்முன் விண்டோஸில் ஒரு கோப்பை அழிக்கும் போது என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம். விண்டோஸில் இருக்கும் ஒவ்வொரு டிரைவுக்கும் (C:, D: என்று) அதனுள் மாஸ்டர்-ஃபைல்-டேபிள் (MFT) என்னும் ஓர் அட்டவணை இருக்கும். டிரைவில் இருக்கும் ஒவ்வொரு ஃபைலும் எந்த இடத்தில் எழுதப்பட்டுள்ளது, அதன் பெயர் என்ன, அதன் அளவு என்ன என்று பல விவரங்களும் இந்த மாஸ்டர்-ஃபைல்-டேபிளில் இருக்கும். எந்த கோப்பை நாம் திறந்தாலும், புதியதாக உருவாக்கினாலும், மாற்றம் செய்தாலும், அழித்தாலும் இந்த அட்டவணையைக் கொண்டுதான் விண்டோஸ் அது செய்ய வேண்டிய வேலையைச் செய்யும்.

#madraspaper #recover

Categorized in:

Tagged in:

,