
ஜன்னல் ரகசியங்கள்
இன்று பெரும்பாலான கணினிகளில் இருக்கும் இயங்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10. அதில் நமக்கு அதிகம் தெரியாமல் பல வசதிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இன்றைய கட்டுரையில் பார்க்கலாம்: செல்பேசியை இணைக்கவும், படம் எடுக்கவும், சிறப்பு விசைகள், மற்றும் பழுது பார்க்கவும்.
இவையெல்லாம் செய்தும் விண்டோஸ் மக்கர் செய்தால், கணினியில் இருந்து அதை முழுவதுமாக நீக்கிவிட்டு மீண்டும் நிறுவலாம். இதைச் செய்ய விண்டோஸ் அமைப்பில் (செட்டிங்ஸ்) “ரீசெட் மை பிஸி” (Reset my PC) என்னும் வசதியிருக்கிறது. இதைச் செய்வது சுலபம், ஆனால் சிலமணி நேரமாகும். உங்களால் கணினியை அதுவரை பயன்படுத்த முடியாது. நீங்கள் நிறுவியிருந்த எல்லாச் செயலிகளையும் மீண்டும் பதிவிறக்கி நிறுவ வேண்டும்.
இவற்றில் எதையும் செய்யும் முன்னர், கணினியில் இருக்கும் உங்களுக்குத் தேவையான எல்லா கோப்புகளையும் ஒரு பிரதி எடுத்து மேக கணினிமையிலோ அல்லது எக்ஸ்டர்னல் டிரைவ்வில் (External Hard drive) படி எடுத்து வைக்கவும்.
#windows10tips #TamilArticle

