-
Five rules for designing app home screens
When designing a mobile app’s main screen, it will be a great service to the users, if the designers remember these top five things. The first is that they are designing the app for the user, the app needs to be user-centric. Second, it needs to enable the users to get to the information they are looking for or do the action they came for, in as few clicks as possible. Third, irrespective of how many navigation elements you provide, the entire surface area can’t be covered, so it is a good idea to provide a search box right at the top. Fourth, research and understand how the user’s “gaze…
-
How to design attractive flyers with Canva?
நவராத்திரிப் பண்டிகை ஆகட்டும், புதுமனைப் புகுவிழாவாகட்டும்… முன்பெல்லாம் அதற்கான அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். பெரும்பாலும் அஞ்சல் அட்டைகள். இன்று நம்மில் பலருக்கு நம் நெருங்கிய நண்பர்கள், சொந்தங்களின் முகவரியே தெரியாது. எல்லாம் செல்பேசித் தொடர்புதான். அவர்களும் வரும் தபாலைப் பிரித்துப் பார்த்து தேதியை நினைவில் வைக்கச் சுணங்கி, “உங்களின் அழைப்பிதழ் கிடைத்தது. இருந்தாலும் அந்தத் தேதியையும், முகவரியையும் வாட்ஸ்-அப்பில் அனுப்பிடுங்களேன், வசதியாக இருக்கும்” என்று கேட்கிறார்கள். கான்வா: வண்ணமயமாகப படத் துண்டு வெளியீடுகளை (ப்லையர்) வடிவமைக்கவே பிரத்தியேகமான ஒரு செயலி இருக்கிறது. கான்வா (Canva) என்று பெயர். இதன் இலவச நிலையைக் கொண்டே பல வகையான துண்டு வெளியீடுகளை நாம் உருவாக்கலாம். காணொளி (வீடியோ) எடிட்டர்: இன்று எல்லோரும் யூ-ட்யூப்பில் தங்களின் பேச்சுக்களை, நிகழ்ச்சிகளை, நாட்டியங்களைப் பதிவேற்ற விரும்புகிறார்கள். எடுத்ததை அப்படியே வெளியிட்டால் நன்றாக இராது. அதை வெட்டி, ஒட்டி, தலைப்பிட்டு, இசையைச் சேர்த்து நேர்த்தியாக செய்ய வேண்டும். அதற்காகவே இருக்கிறது வீடியோ எடிட்டர் என்கிற செயிலிகள். இவற்றைப் பயன்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டும்.…
-
Must have apps, my article in MadrasPaper
“உங்கள் நண்பர் யாரென்று சொல்லுங்கள், உங்களைப் பற்றி நான் சொல்கிறேன்” என்பார்கள். அதையே இன்றைக்கு இப்படிச் சொல்லலாம், “உங்கள் செல்பேசியின் முகப்புப் பக்கத்தைக் (ஹோம் ஸ்கிரீன்) காட்டுங்கள் நீங்கள் யாரென்று சொல்கிறேன்”. இந்த விஷயத்தில் பயனர்கள் இரண்டு வகை. முதல் வகை, அழகாக நகைக்கடை கண்ணாடித் தட்டுகளில் இருப்பது போல தரவிறக்கியுள்ள எல்லா செயலியின் சின்னங்களையும் வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள். அடுத்தவர்கள், இயங்குதளம் அதுவாகவே எங்கே சின்னங்களை நிறுவியதோ அங்கேயே விட்டுவிடுவார்கள். அதிலும் சிலர் கவனத்தில் இல்லாமல் அவர்களின் விருப்பமான செயலிகளின் சின்னங்களை இரண்டு அல்லது மூன்று முறை பல முகப்புப் பக்கங்களிலும் வைத்திருப்பார்கள். நமக்கு அடிக்கடி தேவைப்படும் செயலிகளை மட்டும் நிறுவிக் கொள்வதே எப்போதும் நல்லது. எவையெல்லாம் அப்படி அத்தியாவசிய வளையத்துக்குள் வரும்? இன்றைய இந்தக் கட்டுரையை தொடர்ந்துப் படிக்க, மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா எடுக்கவும்!
-
How to jot down in your mobile, notes and items to remember?
குறிப்புகள் முக்கியம்! நூறு ஆண்டுகள் கடந்தும் கணித மேதை ராமானுஜனின் சில கையெழுத்துக் குறிப்புகளை இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியொரு எழுத்து. இருக்கட்டும். நாமெல்லாம் மேதைகள் இல்லை. இருந்தாலும் அன்றாட வாழ்வில் பல விஷயங்களை, தொலைபேசி எண்களை, முகவரிகளை, தேதிகளைத் தினமும் குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் அவற்றை நாட்குறிப்பு அல்லது காகிதங்களில் எழுதி வைத்திருந்தோம். இப்போது பலரிடம் பேனாவே கிடையாது. பேனாவைப் பயன்படுத்துவதே கூரியரைப் பெற கையெழுத்து போடும் போது மட்டும் தான். மற்றபடி எல்லாவற்றுக்கும் செல்பேசி. செல்பேசியில் எப்படிக் குறிப்புகளை எடுப்பது? எல்லாவற்றையும் வாட்ஸ்-அப்பில் அனுப்ப முடியாது – உங்களுக்கு மட்டுமே தேவையான விஷயங்களை என்ன செய்வது..? சிலர் தங்களுக்குத் தாங்களே மின்-அஞ்சல் அனுப்பிக் கொள்வார்கள். இதெல்லாம் சரியான வழியில்லை. அல்லது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வழி.குறிப்புகளை எழுதி, வகைப்படுத்தி, பாதுகாத்து, தேடுவதைச் சுலபமாக்க சில பிரத்தியேகமான செயலிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றையும் அவற்றின் பயன்பாடுகளையும் பார்க்கலாம்… இன்று மெட்ராஸ் பேப்பரில் (28 செப்டெம்பர் 2022) வந்துள்ள எனதுக் கட்டுரையில் தொடர்ந்துப்…
-
Lesser known features in WhatsApp
ஒரு போட்டி. உங்கள் பர்ஸில் இந்த நொடி எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா..? அன்றாடம் பல முறை பர்ஸை எடுக்கிறோம், ஆனாலும் அந்தளவு கவனிப்பதில்லை. அது போலவே தினம் பத்திலிருந்து, இருபது முறை நாம் அனைவரும் செல்பேசியில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியைப் பயன்படுத்துகிறோம். இருந்தும் அதில் இருக்கும் எல்லா வசதியும், புதிது புதிதாக வந்திருக்கும் வசதிகளும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட அதிகம் தெரியாத வாட்ஸ்-ஆப் வசதிகளை இங்கு பார்க்கலாம். போலிகள் செய்யக்கூடியதைப் பார்க்கும் முன், ஆபத்தான, செய்யக் கூடாததைப் பார்த்து விடுவோம். வாட்ஸ்-ஆப் அனுப்பும் வாசகங்களை வண்ணமயமாக வெவ்வேறு வண்ணங்களில் எழுதலாம், வரிகளின் கீழே கோடிட்டு காட்டலாம், ரகசியமாக செய்திகளை அனுப்பலாம் என்றெல்லாம் பல விளம்பரங்களை பேஸ்புக்கில் அல்லது இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள். இப்படியான வசதிகளைப் பெற அவர்களின் பிரேத்யேக தளங்களுக்கு உங்களை அழைப்பார்கள். கண்டிப்பாக இவை அனைத்தும் போலிகள். நேரத்தை வீணடிக்க வேண்டாம். உருப்படியாக எதையும் இவற்றைப் பயன்படுத்தி செய்ய முடியாது, அதுவும் தமிழ் போன்ற மொழிகளுக்கு…
-
Ten things not to learn from Big Tech on customer support
TEN things every #SaaS founder should NOT be learning from the #BigTech & other popular apps. The bigger firms have great tech stacks and scale, but their DNA was never created for supporting individual consumers – they may have a good heart, but their size makes it impossible for them to care for a single consumer. #saasboomi #not_to_be_learned 1️⃣ Don’t publish contact details, no phone numbers & definitely no email. 2️⃣ Have support forums answered by the community. Give them stars (save $$$). No usable Search, better a broken one. The genuinely interested can use Quora and Reddit, with no liability to the product owners for the accuracy of the…
-
How to get your grandma’s cookbook preserved digitally?
இன்றைய (20 ஜூலை 2022) மெட்ராஸ் பேப்பர் இதழில் “பாட்டிகளுக்கு ஜீன்ஸ் மாட்டுங்கள்!” என்கிற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்திருக்கிறது. இதற்கு முன் வந்தக் கட்டுரை “செல்போனுக்குக் கல்யாணம் செய்து வைப்பது எப்படி?“. நண்பர்கள் கட்டுரையைப் படித்து விட்டு தங்களது கருத்துக்களைப் பகிரவும். நன்றி. முழுக் கட்டுரையும், இதழில் உள்ள மற்ற பல நல்ல கட்டுரைகளையும் படிக்க சந்தா தேவை, தமிழ் பத்திரிகை உலகில் தரமான எழுத்தியல் வளர உங்கள் சந்தாவும், ஆதரவும் பயனாகவிருக்கும். முதல் சில பத்திகள் கீழே: நண்பர் ஒருவரது தாத்தா, ஐம்பதுகளில் வெளியான ஒரு தமிழ் மாத இதழின் பதிப்பாளராக இருந்திருக்கிறார். இப்போது அவரது தாத்தாவும் இல்லை; அந்தப் பத்திரிகையும் இல்லை. நண்பர் தன் சொந்த ஆர்வத்தில் அந்தப் பத்திரிகையின் சில பழைய பிரதிகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். படித்துப் பார்த்தபோது மிகவும் வியப்பாக இருந்தது. அந்தப் பத்திரிகை நின்றிருக்கக் கூடாது என்று தோன்றியது. கதைகளும் கட்டுரைகளும் அவ்வளவு நன்றாக இருந்தன. நண்பருக்கும் அந்த வருத்தம் இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? ஒன்று…
-
How to read a handwritten grocery bill in Tamil?
புத்தகப் பக்கங்களில் இருக்கும் தமிழ் எழுத்துக்களைக் கண்டுக் கொள்வது (Tamil OCR) கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கனவாகவே பல தமிழ் இணைய மாநாடுகளில் பேசப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளில் நல்வாய்ப்பாக இயந்திரக் கற்றல் பல பல மடங்கு வளர்ந்ததால் இந்தக் கனவு இன்று பெருமளவு சாத்தியமாகி விட்டது. இன்றைக்கு வீட்டில் இருந்த ஒரு மளிகைக்கடை ரசீதை ஐ.போனில், கூகுள் போட்டோ செயலியில் இருக்கும் கூகுள் லென்ஸ் வசதியைப் பயன்படுத்தி வருடிப் பார்த்தேன். எழுதிய மளிகைக் கடை அண்ணாச்சிக்குக் கூடக் கையெழுத்து புரியுமா என்று தெரியாத ரசீதிலிருந்து, ஆச்சரியமாக கூகுள் லென்ஸ் (பல) வார்த்தைகளைச் சரியாக கண்டறிந்து கொடுத்துள்ளது. இணைப்பில் இருக்கும் படங்களைக் காணவும். In the past, I have written about using Python and Google Cloud Vision to recognize Tamil text in your own applications and getting Tamil text from printed books using the open-source Tesseract app. #tamilocr #GoogleLens #GooglePhotos…