ஐஃபோன் என்றால் அதில் ஒரே இயங்குதளம் தான்: அது ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-ஓ-எஸ். இது ஒரு காப்புரிமை பெற்ற படைப்பு. வேறு எவரும் இதை வெளியிட முடியாது . ஆனால் ஆன்ட்ராய்ட் அப்படியில்லை. அது ஒரு திறன்மூலப் படைப்பு. அதனால் ஒவ்வொரு செல்பேசி உற்பத்தியாளரும் மூல ஆன்ட்ராய்ட் மென்பொருளைப் பிரதியெடுத்து அவர்களின் விருப்பத்திற்கு மாற்றி வெளியிட முடியும். அப்படித் தான் செய்கிறார்கள். இதனால்தான் சாம்சங் செல்பேசியினுள், ஒப்போ செல்பேசியினுள், ஒன்பிளஸ் செல்பேசியினுள் எல்லாம் இருப்பது ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான் என்றாலும், ஒவ்வொன்றும் அங்கங்கே மாறுபடுகின்றன. இன்று பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் செல்பேசிகளை இயக்குவது இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான். அதனால் அதிலிருக்கும் அதிகம் அறியப்படாத சில வசதிகளைப் பற்றிய உதவிக் குறிப்புகளை இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

📲வலம்வரல்,

📢அறிவிப்புகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டுங்கள்,

🔍கூகுள் உதவியாளர் (Google Assistant),

🕵🏾‍♀️போனைக் கண்டுபிடிக்கவும் (Find My Device),

🔕தொந்தரவு செய்யாதே (Do Not Disturb),

🪟விட்ஜெட்டுகள் (Widgets),

👩🏾‍💻நிரலாளர் முறை எச்சரிக்கை! (Developer Mode).

#மெட்ராஸ்பேப்பர் #ஆன்ட்ராய்ட்

Tagged in:

,