ஒரு போட்டி. உங்கள் பர்ஸில் இந்த நொடி எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா..? அன்றாடம் பல முறை பர்ஸை எடுக்கிறோம், ஆனாலும் அந்தளவு கவனிப்பதில்லை. அது போலவே தினம் பத்திலிருந்து, இருபது முறை நாம் அனைவரும் செல்பேசியில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியைப் பயன்படுத்துகிறோம். இருந்தும் அதில் இருக்கும் எல்லா வசதியும், புதிது புதிதாக வந்திருக்கும் வசதிகளும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட அதிகம் தெரியாத வாட்ஸ்-ஆப் வசதிகளை இங்கு பார்க்கலாம்.

போலிகள்

செய்யக்கூடியதைப் பார்க்கும் முன், ஆபத்தான, செய்யக் கூடாததைப் பார்த்து விடுவோம். வாட்ஸ்-ஆப் அனுப்பும் வாசகங்களை வண்ணமயமாக வெவ்வேறு வண்ணங்களில் எழுதலாம், வரிகளின் கீழே கோடிட்டு காட்டலாம், ரகசியமாக செய்திகளை அனுப்பலாம் என்றெல்லாம் பல விளம்பரங்களை பேஸ்புக்கில் அல்லது இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள். இப்படியான வசதிகளைப் பெற அவர்களின் பிரேத்யேக தளங்களுக்கு உங்களை அழைப்பார்கள். கண்டிப்பாக இவை அனைத்தும் போலிகள். நேரத்தை வீணடிக்க வேண்டாம். உருப்படியாக எதையும் இவற்றைப் பயன்படுத்தி செய்ய முடியாது, அதுவும் தமிழ் போன்ற மொழிகளுக்கு இவர்களின் வித்தைகள் வேலை செய்யாது.
அதே போல எங்களின் செயலிகள், கூகிள் பிளே ஸ்டோரில் கிடையாது, அந்தளவு அபூர்வமானது என்று கதை கட்டி, அதை நிறுவ எங்களின் தளத்திலிருந்து ஏ.பி.கே (APK) கோப்பாக இறக்கி நிறுவிக் கொள்ளவும் என்று படித்தால், இன்னும் உஷாராக இருக்கவும். விஷமிகளால் நடத்தப்படும் இவை உங்களின் செல்பேசியில் நச்சை விதைத்துவிடும், ஜாக்கிரதை. சந்தேகம் இருப்பின் கூகிளில் அந்தச் செயலியின் பெயரைத் தேடவும், நம்பிக்கையான தளங்களில் அவை விமர்சிக்கப்பட்டிருந்தால் மட்டும் பயன்படுத்தவும்.

தொடர்ந்து படிக்க: இன்றைக்கு வெளிவந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரை. படித்துப் பார்த்து கருத்தைப் பகிரவும்.

Categorized in:

Tagged in:

,