நம் செல்பேசிகளில் இருக்கும் அதே ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தைக் கார்களில் இருக்கும் பொழுதுபோக்குக் கருவியோடு இணைக்கும் வசதியின் பெயர் தான் ஆன்ட்ராய்ட் ஆட்டோ. எதற்காக இது வேண்டும் என்று பிறகு பார்க்கலாம். இது வேலை செய்ய இரண்டு வசதி இருத்தல் வேண்டும் – ஒன்று, உங்கள் காரில் இருக்கும் பொழுதுபோக்குக் கருவியில் ஆன்ட்ராய்ட் ஆட்டோவுக்குக்கான இடைமுகம் இருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் வரும் பெரும்பாலான கார் பொழுதுபோக்கு கருவிகளில் இது இருக்கிறது. இரண்டாவது உங்கள் செல்பேசியில் ஆன்ட்ராய்ட் 10 அல்லது அதற்கு மேலான பதிப்பு இயங்க வேண்டும். இது இரண்டும் இருந்தால், உங்கள் செல்பேசியை, கார் இசை பெட்டியோடு, யு.எஸ்.பி. (USB) கேபிள் மூலம் இணைக்கலாம் – இது போனை சார்ஜ் செய்யப் பயன்படுத்தும் அதே கேபிள் தான்.

இப்படி இணைப்பதால் உங்கள் செல்பேசியில் இருக்கும் ஆன்ட்ராய்ட் திரையே உங்கள் வாகனத்தில் இருக்கும் பொழுதுபோக்குக் கருவியின் தொடுதிரையில் வந்துவிடும். இதனால் உங்களுக்கு தெரிந்த கூகுள் மாப்ஸ், ஸ்போடிபை (Spotify), அமேசான் மியூசிக் போன்ற செயலிகள் வாகனத்தின் திரையிலும் வேலை செய்யும். வாகனத்தின் இசைக் கருவியில் இருக்கும் மாப்ஸ் செயலிகள் பல நேரம் ஒன்றுக்கும் உதவாத ஒன்று. அதனால் கூகுள் மாப்ஸ் அந்த இடத்தில் வேலை செய்வது வரப் பிரசாதம். அடுத்து, கூகுள் அசிஸ்டண்ட் என்கிற வாய் வார்த்தைகளால் செயலிகளை இயக்கும் வசதியும் வேலை செய்யும். ஆன்ட்ராய்ட் ஆட்டோ வரும்.

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பரைப் பார்க்கவும்.

Categorized in:

Tagged in:

,