குறிப்புகள் முக்கியம்! நூறு ஆண்டுகள் கடந்தும் கணித மேதை ராமானுஜனின் சில கையெழுத்துக் குறிப்புகளை இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியொரு எழுத்து. இருக்கட்டும். நாமெல்லாம் மேதைகள் இல்லை. இருந்தாலும் அன்றாட வாழ்வில் பல விஷயங்களை, தொலைபேசி எண்களை, முகவரிகளை, தேதிகளைத் தினமும் குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் அவற்றை நாட்குறிப்பு அல்லது காகிதங்களில் எழுதி வைத்திருந்தோம். இப்போது பலரிடம் பேனாவே கிடையாது. பேனாவைப் பயன்படுத்துவதே கூரியரைப் பெற கையெழுத்து போடும் போது மட்டும் தான். மற்றபடி எல்லாவற்றுக்கும் செல்பேசி.

செல்பேசியில் எப்படிக் குறிப்புகளை எடுப்பது? எல்லாவற்றையும் வாட்ஸ்-அப்பில் அனுப்ப முடியாது – உங்களுக்கு மட்டுமே தேவையான விஷயங்களை என்ன செய்வது..? சிலர் தங்களுக்குத் தாங்களே மின்-அஞ்சல் அனுப்பிக் கொள்வார்கள். இதெல்லாம் சரியான வழியில்லை. அல்லது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வழி.குறிப்புகளை எழுதி, வகைப்படுத்தி, பாதுகாத்து, தேடுவதைச் சுலபமாக்க சில பிரத்தியேகமான செயலிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றையும் அவற்றின் பயன்பாடுகளையும் பார்க்கலாம்…

இன்று மெட்ராஸ் பேப்பரில் (28 செப்டெம்பர் 2022) வந்துள்ள எனதுக் கட்டுரையில் தொடர்ந்துப் படிக்கலாம்.

Categorized in:

Tagged in:

,