சிங்கப்பூரில் இருக்கும் பெருமாள் (வைணவ) கோயில்களில் பிரபலமானது சேரங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும், சாங்கி வில்லேஜ் ஸ்ரீ ராமர் ஆலயமும். இவை இரண்டுக்கும் சென்று செவிக்கும் பாக்கியம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது சிங்கப்பூர் பயணத்தில் கிடைத்தது. அந்தப் படங்கள் இங்கே.

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன், சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பான முறையில் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நம்மூரில் இந்து கோயில்கள் என்றாலே அவை அழுக்காக, தூண்கள் தோறும் எண்ணெய் அல்லது விபூதி, குங்குமம் தடவப்பட்டு, தரைகள் ஈரமாக அல்லது வழுக்கலாக இருக்கும், ஆனால் இந்து கோயில்கள் கூடப் படு சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும், பக்தி மீறல் எதுவும் வராது என்பதை முதலில் நான் பார்த்தது சிங்கப்பூரில் தான் – என் வலைத்தளத்தில் சிங்கப்பூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலைப் பற்றி எழுதியதைப் பார்த்தால் சுத்தத்தைப் பற்றி நான் சொல்வருதைப் புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சேரங்கூன் சாலை

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சேரங்கூன் சாலை

உற்சவர் சேவை - ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சேரங்கூன் சாலை

உற்சவர் சேவை – ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சேரங்கூன் சாலை

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சேரங்கூன் சாலை

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சேரங்கூன் சாலை

சாங்கி வில்லேஜ் ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு நான் போவது இது தான் முதல் முறை. இதுவும் ஓரளவு பெரிய கோயில் தான், நிறையச் சன்னதிகள் இருக்கிறது. நான் சென்ற போது, மாலை வேளையில் கல்யாண உற்சவம் நடந்து கொண்டிருந்தது, உலக அமைதிக்காகக் குறிப்பாக நடைபெறும் இரண்டு போர்கள் முடிய வேண்டும் என்று (உண்மையாகச் சொல்கிறேன்) கடவுளை வேண்டிக் கேட்டு, சேவித்து வந்தேன்.

ஸ்ரீ ராமர் ஆலயம், சாங்கி வில்லேஜ்

ஸ்ரீ ராமர் ஆலயம், சாங்கி வில்லேஜ்

கல்யாண உற்சவம், ஸ்ரீ ராமர் ஆலயம்

கல்யாண உற்சவம், ஸ்ரீ ராமர் ஆலயம்

இவை இரண்டைத் தவிர பெருமாள் கோயில் என்று பார்த்தால் அது ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், வாட்டர்லூ மற்றும் இஸ்கான் கோயில்கள்.

#srisrinivasatemple #singapore #singaporetemples #hindutemples

Categorized in:

Tagged in:

,