நம்மூரில் மட்டும் தான் பெற்றோர் பார்த்துச் செய்யும் கல்யாணங்கள் என்று நினைத்தால், அது தவறு. கல்யாணத் தரகர்களும், பாரத் மேட்ரிமோனி போன்றவையும், நாளிதழ் வரன் விளம்பரங்களும் மற்ற கலாசாரங்களிலும் இருக்கிறது. வெளிநாடுகள் எல்லாவற்றிலும் அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களில் வருவது மாதிரியே திருமணங்கள் முடிவு செய்யப்படுவதில்லை.

நிற்க. எதற்கு இதைப் பற்றி இன்று பேசுகிறேன்?

Courtesy: Twitter @Kligman & @nickgraynews

Courtesy: Twitter @Kligman and @nickgraynews

இன்றைக்குப் பார்த்த இந்த ட்வீட்டி என்னை இந்தத் தலைப்பில் செல்ல வைத்தது. ட்வீட்டில் (இஸ்ரேல் நாட்டு) வைதீகமான யூதர்கள் மத்தியில் திருமணங்கள் எப்படி நடக்கிறதென்று என்று ஒருவரி இருந்தது. அதில், இதற்காகவே ஷாட்சன் (shadchan) என்கிற இடைத் தரகர்கள் (இவர்களை அப்படிச் சொல்லலாமா என்று தெரியவில்லை, ஆனால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்) இரு வீட்டார் மற்றும் அவர்களின் குலம்/சமூகம் பார்த்துச் செய்யும் கல்யாணங்களின் வசதிக்காகவே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இஸ்ரேல் இன்று யாராலும் (அமெரிக்க உட்பட) அசைக்க முடியாத நாடு, அங்கேயும் இந்தப் பழக்கம் தொடர்வது ஆச்சரியம் .

இந்த விஷயத்தை மேலும் படிக்க தெரிந்து கொண்டது: இஸ்ரேலில் யூத, முஸ்லீம் மற்றும் ட்ரூஸ் சமூகங்களின் நம்பிக்கைகளின் கீழ் திருமணங்களை மட்டுமே அங்கீகரிக்கிறது. ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள திருமணங்கள் அவர்களின் சொந்த மத அதிகாரிகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.

இஸ்ரேலில் நடைபெறும் யூதத் திருமணங்களுக்கான மத அதிகாரம் என்பது இஸ்ரேலின் தலைமை ரப்பினேட் மற்றும் ரபினிகல் நீதிமன்றங்கள் ஆகும். முக்கியமாக இஸ்ரேலில் உள்ள யூதர்கள் அரசின் மத அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட முறையில் திருமணம் செய்துகொள்வது குற்றவியல் குற்றமாக உள்ளது, மேலும் அவ்வாறு செய்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இஸ்ரேலில் 2010 இல் வந்த சட்டப்படி, தம்பதியினர் இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல என்று பதிவு செய்தால், சிவில் யூனியன் முறையில், மத அமைப்புக்கு வெளியில் திருமணம் செய்து கொள்ளலாம். அதே போல 2013 இல் வந்த த்சோஹர் சட்டப்படி யூதர்கள் தங்கள் சமூக ரப்பிக்கு பதிலாகத் தலைமை ரபினேட்டால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ரப்பியின் கீழும் திருமணம் செய்து கொள்ளலாம், அதற்கு முன்னர் அவரவர் குல/சமூக அல்லது வசிக்கும் இடத்தின் ரப்பியிடம் மட்டுமே திருமணங்களைப் பதிவு செய்யலாம் என்று இருந்தது.

Marriages in Israel & Shadchan, Image Courtesy: ChatGPT & Dall-E 3

Marriages in Israel & Shadchan, Image Courtesy: ChatGPT & Dall-E 3

References: Twitter & Wikipedia article titled “Marriage in Israel”.

Categorized in:

Tagged in: