இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில், 9 ஜனவரி 2024, அன்று நான் வாங்கிய ஐந்து புத்தகங்கள்.

  1. பாரி வேள், கி. வா. ஜா, நக்கீரன் பதிப்பகம்
  2. வந்தவர்கள், ஆமருவி தேவநாதன், சுவாசம்
  3. மித்ரன், சிரா, சுவாசம்
  4. மகாரதன், சிரா, சுவாசம்
  5. Ahobilam, Gomadi Gowda, Universal Publishing

மேலேயுள்ள காணொலிப் பதிவு இன்று (3.2.2024) வரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானவரால் பார்க்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி! இது என்னைப் போல, புத்தகப் பிரியர்கள் இன்னும் உலகில் உள்ளனர் என்பதை உணர்த்துகிறது!கடந்த பதினைந்து ஆண்டுகளாக என் புத்தக வேட்டைகளை அந்தந்த வருடங்களில் நான் வாங்கிய புத்தகங்களைப் பற்றி விரிவாக படங்களுடன் இங்கே வலைப்பதிவில் பகிர்ந்து வருகின்றேன், இந்தளவு அவை பார்க்கப்பட்டதே (படிக்க) இல்லை. இன்றைய உலகத்தில் மக்கள் படிப்பது போய், எல்லாருமே சுருக்கமான காணொலிகளைக்கு (ரீல்ஸ்) மாறிவிட்டார்கள். இருந்தாலும் எழுதுவது தான், நம் முயற்சியின் பலனால் ஒருவாக்கிய நிலைத்திருக்கும் என்ற (மாய?) உணர்வை, ஒரு மனநிறைவைத் தருகிறது. என் மகனைக் கேட்டால் நீயெல்லாம் ஜென்-எக்ஸ் உனக்கெல்லாம் தற்போதைய நிலைப் புரியாது என்று ஒரு பழமைவாதியாக என்னைக் குறிப்பிடுகிறான் – இத்தனைக்கும் நான் பேபி பூமர் இல்லை என்று தொண்டைக் கிழியக் கத்தினாலும், அவனுக்குப் போன நூற்றாண்டில் பிறந்த அனைவருமே வரலாற்று மாந்தர்கள் தான். நிற்க.

மீண்டும் காணொலிகளுக்கு வரலாம். நான், மேலும் ரீல்ஸ் போடலாமா இல்லை எழுதலாமா, நேயர் விருப்பம் என்ன? கருத்துப் பெட்டியில் பகிரவும், நன்றி

Description of the books: பாரி வேள், வந்தவர்கள், மித்ரன், மகாரதன், and Ahobilam

Description of the books: பாரி வேள், வந்தவர்கள், மித்ரன், மகாரதன், and Ahobilam

A page from Ahobilam

A page from Ahobilam

Stall of Department of Prisons who accept books donation

Stall of Department of Prisons who accept book donation

Photos of few stalls from Chennai Book Fair 2024

Photos of a few stalls from the Chennai Book Fair 2024

Photos of books from a few stalls from Chennai Book Fair 2024

Photos of books from a few stalls from Chennai Book Fair 2024

Link to my earlier posts on Chennai Book Fair 2023, 2022, 2019.

#ChennaiBookFair #chennaibookfair2024 #புத்தகங்கள் #சென்னைபுத்தகக்காட்சி

Categorized in:

Tagged in:

,