தொடர் ஓட்டம் - திரு டி. கே. ரங்கராஜன்

தொடர் ஓட்டம் – திரு டி. கே. ரங்கராஜன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மூத்த தலைவரும், இரண்டுமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திரு டி. கே. ரங்கராஜன் அவர்களின் சுயசரிதை நூல் “தொடர் ஓட்டம்”. நடந்து கொண்டிருக்கும் 47ஆவது சென்னை புத்தகக் காட்சியில் இன்று மாலை வெளியிடப்பட்டது.

கிடைத்த நேரத்தில் முதல் ஐம்பது பக்கத்தைப் படித்துவிட்டேன், வேகமாக, எளிதான நடையில் செல்கிறது நூல். அவரின் ஆரம்பக் காலத்தில் நடந்தவை, அவர் எப்படி இயக்கத்தின் உள்ளே வந்தார் என்று படிக்கும் போது, இப்படியெல்லாம் ஒரு காலம் இருந்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் 1960கள் முதல் நடந்த தொழிற்சங்க வரலாற்றில் இந்த நூல் முக்கியப் பங்காக இருக்கும் – இவற்றைப் பற்றித் தெரியாத என் போன்றவர்களுக்கு இந்தத் தலைப்பைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு நல்ல அறிமுகமாகவும், இவரின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ளவும் உதவும். நன்றி.

திரு டி. கே. ரங்கராஜன் நூல் வெளியீட்டு விழா

திரு டி. கே. ரங்கராஜன் நூல் வெளியீட்டு விழா

#CPIM #tkrangarajan #chennaibookfair2024

Tagged in:

,