Tag

Localization

Browsing

எனது நண்பர் திரு அண்ணா கண்ணன் அவர்கள் நடக்கவிருக்கும் 9ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் பற்றி என்னிடம் சமீபத்தில் பேட்டிக் கண்டார். பல விசாயங்களைப் பற்றிப் பேசினோம். அதைப் படிக்க “வல்லமை” தளத்திற்கு செல்லவும் (PDF copy is here). நாங்கள் பேசிய சில தலைப்புகள்: உத்தமம் இது வரை நடத்திய 8 மாநாடுகளின் பயன்கள் வீடியோ கான்பரன்சிங் எனப்படும் காணொலிக் கருத்தரங்கு மூலம் சந்திக்கலாமே? தமிழர் வாழும் பிற நாட்டு அரசுகளுடன் உத்தமம் தொடர்பில் உள்ளதா? குறியீட்டு முறையைப் பொறுத்தவரை யூனிகோடு என்ற ஒருங்குறி, TACE 16 என்ற இரு குறிமுறைகள் விவாதத்தில் உள்ளன. இவற்றில் உத்தமத்தின் பரிந்துரை எது? ஒருங்குறியினால் ஓர் எழுத்தைத் தட்ட, கூடுதல் விசைகளை அழுத்த வேண்டியுள்ளது. அந்தத் தரவினைச் சேமிக்கவும் அதிக இடம் தேவைப்படுகிறது; கணினி – இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உள்ள தடைகள் என்னென்ன? தமிழ் தொடர்பான திட்டங்களை மேற்கொள்பவர்களைப் பெரிய…

Today I made a brief presentation introducing what is Unicode and how Tamil is encoded in UNICODE (தமிழில் ஒருங்குறி). Salient points from the presentation: Computers at their most basic level just deal with numbers. They store letters, numerals and other characters by assigning a number for each one. In the pre-Unicode environment, we had single 8-bit characters sets, which limited us to 256 characters max. No single encoding could contain enough characters to cover all the languages. All 22 Languages including Tamil has represented and included in UNICODE by TDIL, Govt. of India Unicode provides a unique number for every character, for…

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் இன்று (25.02.2010) காலை 10 மணிக்குத் தொடங்கிய அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் என்கின்ற முறையில் நான் தலைமை தாங்கிய ஒரு கலந்துரையாடல் “யுனிகோடும் தமிழும்” என்ற பொதுத்தலைப்பில் நடந்தது. பேராசிரியர் திரு.இராமன் அவர்கள் யுனிகோடு என்றால் என்ன என்றும், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்றும் அவைக்கு எடுத்துரைத்தார். அதனை அடுத்து திரு.அ.இளங்கோவன் அவர்கள் யுனிகோடைப் பயன்படுத்தி அச்சிடுவதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார். என்.எச்.எம்.எழுதியை உருவாக்கிய திரு.நாகராசன் அவர்கள் விசைப்பலகைகள் பற்றியும் யுனிகோடு பற்றியும் மிகச்சிறப்பாகத் தன் கருத்துத்துகளை எடுத்துரைத்தார். திரு.ராம்கி அவர்கள் “ஒருங்குறியின் போதாமை – Inadequacy of Unicode” என்ற தலைப்பில் தனது கருத்துக்களைக் கூறினார். Natural Language Processingல் எப்படி Encodingகள் பயன்படுத்தப்படுகிறது என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு.கணேசன் அவர்களும், பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் இராமகிருட்டினன் அவர்களும் கூறினார்கள். (கலந்துரையாடல் பற்றி…

நான் படித்தது ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஸ்ரீ வேங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில், பொறியியல் (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு) பட்டம் பெற்றது சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து (அப்போது பொறியியல் கல்லூரிகள் அண்ணா  பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படவில்லை). எதற்கு இதையெல்லாம் சொல்கிறேனா?, விஷயம் இருக்கிறது!. நாம் படித்த கல்லூரியிலோ அல்லது நாம் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்திலேயே நமக்கு ஒரு வாழ்த்துக்கிடைத்தால் அது நமக்கு பெரிய ஒரு மகிழ்ச்சி தானே!. அப்படி ஒரு நிகழ்ச்சி எனக்கு இன்று நடந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் திரு.ந.தெய்வசுந்தரம் அவர்களின் அழைப்பில் இன்று நடைப்பெற்ற கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரத்தின் தொடக்கவிழாவில் தான் எனக்கு அந்த வாய்ப்புக்கிடைத்தது.  சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாண்பமை கர்னல் பேராசிரியர் க.திருவாசகம் அவர்கள் தலைமையுரையாற்றினார் – அப்போது அவர் எனக்கு பொன்னாடை போர்த்தியப் போது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நிகழ்ச்சியின் மையவுரையினை அண்ணா  பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருட்டினன் அவர்கள் வழங்கினார், தமிழ்நாட்டு அரசின்…

இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் நகரத்தில் கணித் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் கோவையில் வரும் ஜூன் மாதத்தில் உத்தமம் அமைப்பும் தமிழக அரசும் சேர்ந்து நடத்தவுள்ள தமிழ் இணைய மாநாடு 2010 பற்றிய விவரங்கள் என்னால் சொல்லப்பட்டது.  தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சி தொடர்பான விளக்கங்களை திரு.வள்ளி ஆனந்தன் வழங்கினார். கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர்கள்  மற்றும் உத்தமம் உறுப்பினர்கள் பலரும் இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு மாநாடு சிறப்பாக நடக்க தங்களின் கருத்துக்கள் பலவற்றை கூறினார்கள். கூட்டத்தை ஏற்பாடு செய்த கணித் தமிழ்ச் சங்கத்திற்கும், தலைமையெற்ற டாக்டர் திரு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.