எனது நண்பர் திரு அண்ணா கண்ணன் அவர்கள் நடக்கவிருக்கும் 9ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் பற்றி என்னிடம் சமீபத்தில் பேட்டிக் கண்டார். பல விசாயங்களைப் பற்றிப் பேசினோம். அதைப் படிக்க “வல்லமை” தளத்திற்கு செல்லவும் (PDF copy is here).

நாங்கள் பேசிய சில தலைப்புகள்:

  • உத்தமம் இது வரை நடத்திய 8 மாநாடுகளின் பயன்கள்
  • வீடியோ கான்பரன்சிங் எனப்படும் காணொலிக் கருத்தரங்கு மூலம் சந்திக்கலாமே?
  • தமிழர் வாழும் பிற நாட்டு அரசுகளுடன் உத்தமம் தொடர்பில் உள்ளதா?
  • குறியீட்டு முறையைப் பொறுத்தவரை யூனிகோடு என்ற ஒருங்குறி, TACE 16 என்ற இரு குறிமுறைகள் விவாதத்தில் உள்ளன. இவற்றில் உத்தமத்தின் பரிந்துரை எது?
  • ஒருங்குறியினால் ஓர் எழுத்தைத் தட்ட, கூடுதல் விசைகளை அழுத்த வேண்டியுள்ளது. அந்தத் தரவினைச் சேமிக்கவும் அதிக இடம் தேவைப்படுகிறது;
  • கணினி – இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உள்ள தடைகள் என்னென்ன?
  • தமிழ் தொடர்பான திட்டங்களை மேற்கொள்பவர்களைப் பெரிய நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை என்ற குற்றச்சாற்றும் இருக்கிறதே?
  • இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்துதான் அடுத்து, புதிய கண்டுபிடிப்புகள் தோன்ற உள்ளன என எப்படிச் சொல்கிறீர்கள்?
  • அரசுகளிடமிருந்து என்ன ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறீர்கள்?
  • தமிழில் கலைச் சொற்களின் உருவாக்கம், சீர்மை ஆகியவை பற்றி உங்கள் கருத்து என்ன?
  • சுருக்கச் சொற்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
  • செல்பேசிகளில் தமிழ் இடம்பெற உத்தமம் என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது?
  • இந்தியாவிலும் பிற நாடுகளிலும் மின் ஆளுகை எவ்வகையில் உள்ளது?
  • இரட்டையர்கள் போன்று, ஒரே மாதிரி முக அமைப்புடன் இருவர் இருந்தால், அப்போது ஆள் மாறாட்டம் நிகழ வாய்ப்புண்டு என்பதால் இப்படிச் செய்கிறார்களா?
  • மனநிலை மாறாததன் காரணம், மின்னணு வடிவில் உள்ள ஆவணங்களைப் போலியாக உருவாக்கிவிட முடியும் என்ற அச்சம்தானா?
  • நம்முடைய கடவுச் சொற்களை பிறர் திருடும் வாய்ப்புகள் இருக்கையில் இணையத்தளங்கள் வழியே பணப் பரிமாற்றம் செய்வது அவ்வளவு பாதுகாப்பாக இல்லையே?
  • தமிழில் மின் ஆளுகையை வலுவுடையதாக்க என்ன செய்ய வேண்டும்?
  • உலகம் மின்மயமாகி வருகையில் மின் கழிவுகளும் மிக அதிகமாகி வருகின்றன. 2020இல் இப்போதுள்ளதைவிட 17 மடங்குகள் மி்ன் கழிவுகள் பெருகும் என்கிறார்கள். இவற்றை எப்படிக் கையாளுவது?

 

Categorized in:

Tagged in:

,