இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் நகரத்தில் கணித் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் கோவையில் வரும் ஜூன் மாதத்தில் உத்தமம் அமைப்பும் தமிழக அரசும் சேர்ந்து நடத்தவுள்ள தமிழ் இணைய மாநாடு 2010 பற்றிய விவரங்கள் என்னால் சொல்லப்பட்டது.  தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சி தொடர்பான விளக்கங்களை திரு.வள்ளி ஆனந்தன் வழங்கினார். கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர்கள்  மற்றும் உத்தமம் உறுப்பினர்கள் பலரும் இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு மாநாடு சிறப்பாக நடக்க தங்களின் கருத்துக்கள் பலவற்றை கூறினார்கள். கூட்டத்தை ஏற்பாடு செய்த கணித் தமிழ்ச் சங்கத்திற்கும், தலைமையெற்ற டாக்டர் திரு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

கணித் தமிழ்ச்சங்கம் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி பற்றிய கூட்டம்
கணித் தமிழ்ச்சங்கம் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி பற்றிய கூட்டம்