
கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கம் – யுனிகோடும் தமிழும்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் இன்று (25.02.2010) காலை 10 மணிக்குத் தொடங்கிய அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் என்கின்ற முறையில் நான் தலைமை தாங்கிய ஒரு கலந்துரையாடல் “யுனிகோடும் தமிழும்” என்ற பொதுத்தலைப்பில் நடந்தது.
பேராசிரியர் திரு.இராமன் அவர்கள் யுனிகோடு என்றால் என்ன என்றும், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்றும் அவைக்கு எடுத்துரைத்தார். அதனை அடுத்து திரு.அ.இளங்கோவன் அவர்கள் யுனிகோடைப் பயன்படுத்தி அச்சிடுவதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார். என்.எச்.எம்.எழுதியை உருவாக்கிய திரு.நாகராசன் அவர்கள் விசைப்பலகைகள் பற்றியும் யுனிகோடு பற்றியும் மிகச்சிறப்பாகத் தன் கருத்துத்துகளை எடுத்துரைத்தார். திரு.ராம்கி அவர்கள் “ஒருங்குறியின் போதாமை – Inadequacy of Unicode” என்ற தலைப்பில் தனது கருத்துக்களைக் கூறினார். Natural Language Processingல் எப்படி Encodingகள் பயன்படுத்தப்படுகிறது என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு.கணேசன் அவர்களும், பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் இராமகிருட்டினன் அவர்களும் கூறினார்கள்.
(கலந்துரையாடல் பற்றி மேலும் விவரங்களை முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவில் இங்கே படிக்கலாம்)
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கத்தின் முடிவுகளை இங்கே படிக்கலாம். அதில் கூறியுள்ள இரண்டு முக்கியமானக் கருத்துக்களுக்கு என் முழு அதரவு – ஒன்று “தமிழகத்தில் இரண்டு கணினிமொழியியல் மையங்கள் ( Centre for Computational Linguistics and Language Technology) நிறுவப்படவேண்டும்”, இரண்டாவது “தமிழுக்கு ஒருங்கூறியை செயல்படுத்தவேண்டும் என்பது”.



(மேலேயுள்ள படங்களுக்கு நன்றி முனைவர்.மு.இளங்கோவன் மற்றும் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்)

