• Social Media,  Woolgathering

  Social Media and the distraction for writing

  மெட்ராஸ் பேப்பருக்கு ஒரு கட்டுரை எழுத மூன்று மணி நேரம் ஆகிறது. நடுவில் தெரியாத்தனமாக பேஸ்புக், டிவிட்டர் பக்கம் வந்தால் அரை நாளுக்கு மேல், சில சமயம் ஒரு நாள் கூட ஆகிறது. இந்த பதிவும் அதே பாதிப்பைச் செய்கிறது. கட்டுரை எழுத்துக்கு நடுவில் தான் அதி புத்திசாலித்தனமான பதிவுகளுக்கான யோசனைகள் வருகிறது. இந்த சமயங்களில் நான் இன்னும் (நம்) அதி மனிதனின் முன்னோர்களைப் போலத் தான் இருக்கிறேன் என உணர்கிறேன்!

 • Social Media,  தமிழ்

  Indigenous aircraft carrier INS Vikrant commissioned by PM Modi

  இன்று இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பெருமையான நாள். இந்தியக் கப்பல்படையின் மிக பெரிய விமானந்தாங்கி ஐ. என். எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் இன்று நாட்டுக்குப் பிரதமர் திரு மோடியால் அர்ப்பணிக்கப்பட்டது. அரசியலை, காங்கிரஸ், பா.ஜ.க. என்பதை தாண்டி, இது இருபது வருட ஒட்டு மொத்த இந்தியாவின் உழைப்பு, கனவு. பிரதமர் சொன்னது போல் விக்ராந்த் சிறப்பானது, சக்திவாய்ந்தது. இதை செய்வதால் இந்தியா சண்டைக்கார நாடு என்று அர்த்தமில்லை, இந்தியா அமைதிக்கான நாடு என்பதை தான் இது காட்டுகிறது. பிரதமர் குறிப்பிட்ட டாக்டர் கலாமின் சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் – சக்தியும், அமைதியும் ஒன்றோடு ஒன்று தொடர்ப்பானது. இது இந்தியாவில் (சுய சார்பு பாரதம்) தயாரிக்கப்பட்டது, இத்தகைய தகுதி பெற்ற உலகில் இருக்கும் மிக மிக சிறிய எண்ணிக்கையான நாட்டின் பட்டியலில் நாமும் இணைந்துள்ளோம். 18 அடுக்கு கொண்டது இந்த கப்பல், 30 போர் விமானங்கள் ஒரே சமயம் இதன் மேல் இருக்கலாம், 1600 மாலுமிகள் வேலை செய்யலாம், 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் உள்ளது.…

 • Physical Meetings
  Social Media,  தமிழ்

  Is it only me who is facing attention deficit in physical meetings?

  இப்போதெல்லாம் நேரடி அமர்வுகளில் ஒரு பதினைந்து நிமிடத்துக்குப் பின் ஒரேடியாக உட்கார முடிவதில்லை. இது எனக்கு மட்டும் தானா? அந்த மீட்டிங் அலுவல் ரீதியாக இருக்கட்டும் அல்லது குடும்பத்து நிகழ்ச்சியாகட்டும் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் (இல்லை நாம் போயிருக்கும்) விருந்தினர் வருகையாகட்டும். அதற்கு மேல், மற்றவர் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க முடிவதில்லை. உடனே என் குரங்கு மனம், வேறு ஏதாவது ஒரு திசைதிருப்பலை எதிர்பார்க்கிறது. அதற்காகவே இருக்கிறது செல்பேசி. நம் பக்கத்தில் இருப்பவருக்குத் தெரியாமல் பேஸ்புக்கை திறந்து பார்த்தாலும், எப்போதும் ஏதாவது ஒரு பஞ்சாயத்தது இருக்கும் இடத்தில், அப்போது ஒன்றுமே இருக்காது. அந்தச் சமயத்தில் தான் மார்க் சுக்கர்பெர்க் நீங்கள் எல்லாம் படித்துவிட்டீர்கள் என்பார். என்ன செய்வது என்றே தெரியாது. இப்போதெல்லாம் அந்த மாதிரி சமயங்களில், நான் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் இணையப் பத்திரிகைகளில் ஒன்றைத் திறந்து ஒன்றிரண்டு வரிகள் படிக்கிறேன். சில நொடிகளில் ஒரு குற்ற உணர்ச்சி வரும் – அருகில் இருப்பவர் பார்த்துவிடுவாரோ, இல்லை பேசுபவருக்கு நாம் மரியாதைக் குறைவாக செய்கிறோமோ என்று…

 • Social Media,  தமிழ்

  Azhage song in Saivam makes me emotional

  இந்த காட்சியை பார்க்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கிவிடும். பல முறைப் பார்த்திருக்கிறேன், பல நாட்களுக்கு பின் இன்றுப் பார்த்தப் போதும் அப்படித் தான். சைவம் (2014) என்ற இந்தப் படத்தில், அழகே என்கிற அருமையானப் பாடலில் வரும் ஒரு எளிமையானக் காட்சி தான் அது. குழந்தையில்லை என்று ஏற்கனவே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளிடம், அவர்களைப் பார்க்கின்ற எல்லோரும் யதார்த்தமாகக் கேட்கும் கேள்வி தான், உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் என்று. இந்தக் கேள்வி அந்தத் தம்பதிகளை எந்தளவு காயப்படுத்தும் என்பதை இயக்குனர் விஜய் ஆழமாகக் காட்டியிருப்பார். அந்தத் தம்பதிகளைக் காப்பாற்றும் விதமாக, அவர்களின் உறவுக்கார குட்டிப் பெண்ணாக வரும் ‘தேவதை’ சாரா அர்ஜூன், ‘அம்மா’ என்றுக் கூப்பிடுவாள். அந்த ஒரு நொடி என்னை ஏனோ உலுக்கிவிடும். #saivam #azhage #couples #WithNochildren

 • Economy,  Social Media

  General Strike by Government employees in India

  Reduce price rise, provide income support to poor households, and increase investments in agri, edu and health. These are a few of the 12-point demand by labour unions in India. These wide and vague demands are a reason the general strike by government employees is not getting sympathy from the common (wo)men they are claiming to represent. The public, including me, see these strikes as unavoidable nuisance that happen occasionally. Today elections and even wars are won by public sentiment which you nurture towards your cause through social media engagement. For this general strike, I don’t see that in Twitter or Facebook. If I go to the handles of the…

 • Events,  Homepage,  Interviews,  Social Media,  தமிழ்

  My first talk on Clubhouse – Tamil & Technology for SICCI

  #கிளப்ஹவுஸ், நானும் வந்துவிட்டேன். பேசி பேசியே பொழுதைப் போக்குபவர்கள் நாம், அதனால் பேச (கேட்பவர்கள் எவ்வளவு பேர் என்று தெரியாது) இன்னுமொரு மேடையா? என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று என்னை(யும்) பேச அழைத்து, இழுத்து வந்துவிட்டனர் சில நலன்(!) விரும்பிகள். என் முதல் #கிளப்ஹவுஸ்ஸில் பேசிய அனுபவம். இன்று (17 ஜூலை) மாலை 7 மணிக்கு (இந்திய நேரம்) SICCI நடத்திய “தமிழுக்கான தொழில்நுட்பத் தேவைகள்” என்ற தலைப்பில் பங்கெடுத்து, கேட்டவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக இரண்டொரு விசயங்களைச் சுருக்கமாகச் சொல்லி, நிறையக் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். அமைப்பாளர்களுக்கு நன்றி. நான் சொல்லியவை: முப்பது வருடங்களாகக் கடின முயற்சியால் இன்று கணினியும், இணையமும் இயல்பாகத் தமிழ் பேசுகிறது. நிற்க. இந்த நெடியப் பயணத்திலிருந்து எது வேலை செய்தது, எந்த முயற்சிகள் தோல்வியடைந்தது என்பதை எடுத்துக் கொண்டு, எழுத்துரு, விசைப்பலகை, வருடி (Scan), பேச்சு, மொழிப் பெயர்ப்பு என்ற நிகழ்காலத்தில் வந்துவிட்ட தொழில்நுட்பங்களை விட்டுவிட்டு, அடுத்த இருபது வருடங்களில் (2040) வரப் போகும் தொழில்நுட்ப சாத்தியங்களுக்கான (AR/VR/Robotics/NanoTech)…

 • Lounge,  Microsoft,  Social Media,  Speeches

  Maintain your social media san(ct)ity

  Today it has become fashionable to hate social media and talk in length about its bad influence. I have been using social media [Facebook, Instagram, Twitter and so on] from 2007. I consider myself to be active, I have been posting almost every single day most of the weeks and I respond with comments on other(s) posts too. I have benefited from social media, seen and experienced its goodness. In the last few years, the way I see has changed. In this talk, I will share with you what I have learned, my own experience, which will be useful to you in charting your own course. Trust me, I am…