
Social Media and the distraction for writing
மெட்ராஸ் பேப்பருக்கு ஒரு கட்டுரை எழுத மூன்று மணி நேரம் ஆகிறது. நடுவில் தெரியாத்தனமாக பேஸ்புக், டிவிட்டர் பக்கம் வந்தால் அரை நாளுக்கு மேல், சில சமயம் ஒரு நாள் கூட ஆகிறது. இந்த பதிவும் அதே பாதிப்பைச் செய்கிறது. கட்டுரை எழுத்துக்கு நடுவில் தான் அதி புத்திசாலித்தனமான பதிவுகளுக்கான யோசனைகள் வருகிறது. இந்த சமயங்களில் நான் இன்னும் (நம்) அதி மனிதனின் முன்னோர்களைப் போலத் தான் இருக்கிறேன் என உணர்கிறேன்!

