இன்று இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பெருமையான நாள். இந்தியக் கப்பல்படையின் மிக பெரிய விமானந்தாங்கி ஐ. என். எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் இன்று நாட்டுக்குப் பிரதமர் திரு மோடியால் அர்ப்பணிக்கப்பட்டது. அரசியலை, காங்கிரஸ், பா.ஜ.க. என்பதை தாண்டி, இது இருபது வருட ஒட்டு மொத்த இந்தியாவின் உழைப்பு, கனவு. பிரதமர் சொன்னது போல் விக்ராந்த் சிறப்பானது, சக்திவாய்ந்தது.

இதை செய்வதால் இந்தியா சண்டைக்கார நாடு என்று அர்த்தமில்லை, இந்தியா அமைதிக்கான நாடு என்பதை தான் இது காட்டுகிறது. பிரதமர் குறிப்பிட்ட டாக்டர் கலாமின் சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் – சக்தியும், அமைதியும் ஒன்றோடு ஒன்று தொடர்ப்பானது.

இது இந்தியாவில் (சுய சார்பு பாரதம்) தயாரிக்கப்பட்டது, இத்தகைய தகுதி பெற்ற உலகில் இருக்கும் மிக மிக சிறிய எண்ணிக்கையான நாட்டின் பட்டியலில் நாமும் இணைந்துள்ளோம். 18 அடுக்கு கொண்டது இந்த கப்பல், 30 போர் விமானங்கள் ஒரே சமயம் இதன் மேல் இருக்கலாம், 1600 மாலுமிகள் வேலை செய்யலாம், 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் உள்ளது. இதில் இருக்கும் எட்டு மின்னியற்றி, 20 இலட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கும் திறன் கொண்டது.

Categorized in:

Tagged in: