இந்த காட்சியை பார்க்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கிவிடும். பல முறைப் பார்த்திருக்கிறேன், பல நாட்களுக்கு பின் இன்றுப் பார்த்தப் போதும் அப்படித் தான்.

சைவம் (2014) என்ற இந்தப் படத்தில், அழகே என்கிற அருமையானப் பாடலில் வரும் ஒரு எளிமையானக் காட்சி தான் அது. குழந்தையில்லை என்று ஏற்கனவே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளிடம், அவர்களைப் பார்க்கின்ற எல்லோரும் யதார்த்தமாகக் கேட்கும் கேள்வி தான், உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் என்று. இந்தக் கேள்வி அந்தத் தம்பதிகளை எந்தளவு காயப்படுத்தும் என்பதை இயக்குனர் விஜய் ஆழமாகக் காட்டியிருப்பார். அந்தத் தம்பதிகளைக் காப்பாற்றும் விதமாக, அவர்களின் உறவுக்கார குட்டிப் பெண்ணாக வரும் ‘தேவதை’ சாரா அர்ஜூன், ‘அம்மா’ என்றுக் கூப்பிடுவாள். அந்த ஒரு நொடி என்னை ஏனோ உலுக்கிவிடும்.

#saivam #azhage #couples #WithNochildren

Categorized in:

Tagged in: