• Articles,  தமிழ்

    கூகுள் தரும் கூடுதல் வசதிகள்

    நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில இலவசச் செயலிகளை நாம் அறிந்து கொண்டால் தினந்தோறும் நம் கணினி/செல்பேசிப் பயன்பாடு எளிதாகும். 1.கூகுள் காண்டாக்ட்ஸ் நம்மில் பலருக்கு இது நடந்திருக்கும். தெரிந்தவரை அழைப்போம், எதிர்முனையில் அவர் “யார் நீங்கள்?” என்பார். நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லி ஏன் நீங்கள் கொஞ்சம் நாட்களாக என்னை அழைக்கவில்லை என்று கேட்டால், “என் பழைய போன் கெட்டுப் போய்விட்டது. அதில் இருந்த முகவரிகள், எண்கள் எல்லாம் அதோடு அழிந்து போய்விட்டது. அதனால் தான் உங்கள் எண் எனக்குத் தெரியவில்லை, மன்னிக்கவும்” என்பார். செல்பேசியை மாற்றினால் அதில் வைத்திருக்கும் எண்கள் தொலைந்து போகவேண்டுமா? அப்படியாகாமல் இருக்க என்ன செய்ய? இருக்கிறது கூகிள் காண்டாக்ட்ஸ் (Google Contacts). கூகுள் காலண்டர் கூகுள் ஃபார்ம்ஸ் கூகுள் டிராவல் கூகுள் ஆர்ட்ஸ் மற்றும் கல்ச்சர் இன்று மெட்ராஸ் பேப்பரில் (1 பிப்ரவரி 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.…

  • தமிழ்

    Tamil to English machine translation has improved a lot

    தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இயந்திரவழி மொழி பெயர்ப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன் எனது தமிழ் போஸ்டை இன்ஸ்டாகிராமில் இருக்கும் “See Translation” முயன்று பார்த்தேன், பெருமளவு தமிழில் எழுதிய பொருள் ஆங்கிலத்தில் சரியாகத் தான் வந்தது, நீங்களும் பாருங்களேன். தெரியவில்லை என்பதற்கு IDK என்ற இளைஞர்கள் பயன்படுத்தும் வார்த்தை மேலும் சிறப்பாகத் தோன்றியது. அடுத்து, சென்ற வாரம் நான் தமிழில் எழுதிய முழுநீளத் தொழில்நுட்பக் கட்டுரையைக் கூகிள் மொழி பெயர்ப்பில் முயன்று பார்த்தேன், இன்னும் நன்றாகவே வந்தது, ஓரிரு ஆங்கில வார்த்தைகளை மட்டுமே நான் மாற்ற வேண்டியிருந்து. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காகப் பல ஆண்டுகள் உழைத்த அறிஞர்களுக்கு நன்றிகள். #tamiltoenglish #machinetranslation #instagram #googletranslate

  • Articles

    How to search better in Google?

    கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?” என்றார். அங்கே இருக்கிறது சூட்சுமம்! இது வேண்டாம்! வாரிசு என்றால் என்ன, வாரிசுச் சான்றிதழ், வாரிசுப் பிரச்சனை என்று வாரிசு சம்பந்தப்பட்ட பலவற்றைத் தேட வேண்டும். ஒவ்வொன்றாக (வாரிசுச் சான்றிதழ், வாரிசுப் பிரச்சனை) எனத் தனித்தனியாக உள்ளிட்டுத் தேடுவது சிரமம். “வாரிசு” என சுருக்கமாக தேடினால், முதல் பல பக்கங்களுக்கு வருவது நடிகர் விஜய்யின் திரைப்படச் செய்திகள் தான். கூகுளிடம் எதைத் தேட வேண்டும் என சொல்ல நமக்கு தெரியும். எதைத் தேட வேண்டாம் அல்லது வரும் விடையில் எவை இடம்பெற வேண்டாம் எனச் சொல்ல முடிந்தால், பல சமயங்களில் நமது வேலை சுலபமாகும். அதைச் செய்ய இருக்கிறது கழித்தல் (-) குறியீடு. கூகுளில் “வாரிசு -விஜய்” (படிக்க எளிதாக இருக்க மேற்கோள்…

  • Articles,  Gadgets

    How to select a laptop for your need?

    இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் எனதுக் கட்டுரை – புது லேப்டாப்பைத் தேர்வு செய்வது எப்படி?. உங்கள் கருத்துக்களைப் பகிரவும். எது உங்கள் செல்லப் பெட்டி? செல்பேசியின் மூலமாகவே இன்று வங்கிப் பரிமாற்றங்கள் தொடங்கி, ஷாப்பிங், சினிமா பார்ப்பது வரையில் அனைத்தையும் செய்து பழகிவிட்டது. அந்தச் சிறிய திரையைப் பலமணி நேரம் கண்ணும் கையும் வலிக்கப் பயன்படுத்துவது கடினம் என்பதும் நமக்குப் புரிந்துதானிருக்கிறது. இதற்கு நமக்குத் தேவையான மாற்று, ஒரு மடிக்கணினி. உங்களுக்கேற்ற மடிக்கணினியை(லேப்டாப்)த் தேர்வு செய்வதற்கான மூன்று யோசனைகள். தொடர்ந்துப் படிக்க. #madraspaper #windowslaptop #ipad #chromebook

  • Apps,  தமிழ்

    How to read a handwritten grocery bill in Tamil?

    புத்தகப் பக்கங்களில் இருக்கும் தமிழ் எழுத்துக்களைக் கண்டுக் கொள்வது (Tamil OCR) கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கனவாகவே பல தமிழ் இணைய மாநாடுகளில் பேசப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளில் நல்வாய்ப்பாக இயந்திரக் கற்றல் பல பல மடங்கு வளர்ந்ததால் இந்தக் கனவு இன்று பெருமளவு சாத்தியமாகி விட்டது. இன்றைக்கு வீட்டில் இருந்த ஒரு மளிகைக்கடை ரசீதை ஐ.போனில், கூகுள் போட்டோ செயலியில் இருக்கும் கூகுள் லென்ஸ் வசதியைப் பயன்படுத்தி வருடிப் பார்த்தேன். எழுதிய மளிகைக் கடை அண்ணாச்சிக்குக் கூடக் கையெழுத்து புரியுமா என்று தெரியாத ரசீதிலிருந்து, ஆச்சரியமாக கூகுள் லென்ஸ் (பல) வார்த்தைகளைச் சரியாக கண்டறிந்து கொடுத்துள்ளது. இணைப்பில் இருக்கும் படங்களைக் காணவும். In the past, I have written about using Python and Google Cloud Vision to recognize Tamil text in your own applications and getting Tamil text from printed books using the open-source Tesseract app. #tamilocr #GoogleLens #GooglePhotos…

  • Articles,  Microsoft

    How to maintain your laptop?

    இன்றைய மெட்ராஸ் பேப்பர் இதழில் “யானை வாங்குவோர் கவனத்துக்கு” என்கிற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுத எனக்கு வாய்ப்பளித்து, எழுதியதை அவரது மோதிரக்கையால் செம்மைப்படுத்திய நண்பர், பிரபல எழுத்தாளர் திரு பா ராகவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நண்பர்கள் கட்டுரையைப் படித்து விட்டு தங்களது கருத்துக்களைப் பகிரவும். நன்றி. முழுக் கட்டுரையும், இதழில் உள்ள மற்ற பல நல்ல கட்டுரைகளையும் படிக்க சந்தா தேவை, தமிழ் பத்திரிகை உலகில் தரமான எழுத்தியல் வளர உங்கள் சந்தாவும், ஆதரவும் பயனாகவிருக்கும். முதல் சில பத்திகள் கீழே: குசேலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ரொம்பக் கஷ்டப்பட்டு ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார். உயிரைப் பணயம் வைத்து எடுத்துக் கொண்ட அந்தப் படம் உள்ள செல்பேசி தொலைந்து போய் விட்டால் எப்படியிருக்கும்? 2008-இல் அந்தத் திரைப்படம் வந்த காலத்தில் இன்றுள்ள அளவுக்குப் பலரிடம் ஸ்மார்ட் போன் கிடையாது. இப்போது நூற்றுக்குத் தொண்ணுாற்றொன்பது சதவீதம் பேரை அதுதான் ஆள்கிறது. வீட்டில் கணினி இருக்கும். கையில்…

  • Technology

    English-Tamil meanings in Google Search

    Recently if you search for the meaning of an English word in Google Search, you get the Tamil meaning along with the English meaning. It is kind of like having a LIFCO or OXFORD English-English-Tamil Dictionary available in the search. A nice New Year & Pongal gift from Google. I have been seeing it in India for the last few weeks, not sure when it got rolled out or for which geographies. Apart from English & Tamil, I am seeing English & Hindi and English & Marathi. ஆங்கில வார்த்தையை கூகிளில் தேடும் போது, ஆங்கில அர்த்தத்தோடு தமிழ் விளக்கமும் வருகிறது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக இதைக் கொள்ளலாம். நமக்குப் பழக்கப்பட்ட லிப்கோ அல்லது ஆக்ஸ்வேர்டு அகராதி மாதிரியான…

  • Google Daydream VR
    Gadgets

    Google Daydream VR

    It was on Christmas 2018, more than a year back, I bought a Google Daydream VR kit for $99. Using my Google Pixel 2, I played with Daydream for a few days before shelving it for good. Other than YouTube VR, which too had only a limited number of videos, there was nothing else of interest that you could do with the gadget. I was disappointed that it was nothing more than a Google Cardboard made out of good quality plastic. Disclosure: I write reviews about products that I have bought for my usage and paid in full. There were no sponsorship or advertisement or commission of any sort involved…