
Tamil to English machine translation has improved a lot
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இயந்திரவழி மொழி பெயர்ப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன் எனது தமிழ் போஸ்டை இன்ஸ்டாகிராமில் இருக்கும் “See Translation” முயன்று பார்த்தேன், பெருமளவு தமிழில் எழுதிய பொருள் ஆங்கிலத்தில் சரியாகத் தான் வந்தது, நீங்களும் பாருங்களேன். தெரியவில்லை என்பதற்கு IDK என்ற இளைஞர்கள் பயன்படுத்தும் வார்த்தை மேலும் சிறப்பாகத் தோன்றியது. அடுத்து, சென்ற வாரம் நான் தமிழில் எழுதிய முழுநீளத் தொழில்நுட்பக் கட்டுரையைக் கூகிள் மொழி பெயர்ப்பில் முயன்று பார்த்தேன், இன்னும் நன்றாகவே வந்தது, ஓரிரு ஆங்கில வார்த்தைகளை மட்டுமே நான் மாற்ற வேண்டியிருந்து.


மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காகப் பல ஆண்டுகள் உழைத்த அறிஞர்களுக்கு நன்றிகள்.
#tamiltoenglish #machinetranslation #instagram #googletranslate

