இன்றைய மெட்ராஸ் பேப்பர் இதழில் “யானை வாங்குவோர் கவனத்துக்கு” என்கிற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுத எனக்கு வாய்ப்பளித்து, எழுதியதை அவரது மோதிரக்கையால் செம்மைப்படுத்திய நண்பர், பிரபல எழுத்தாளர் திரு பா ராகவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்கள் கட்டுரையைப் படித்து விட்டு தங்களது கருத்துக்களைப் பகிரவும். நன்றி.

முழுக் கட்டுரையும், இதழில் உள்ள மற்ற பல நல்ல கட்டுரைகளையும் படிக்க சந்தா தேவை, தமிழ் பத்திரிகை உலகில் தரமான எழுத்தியல் வளர உங்கள் சந்தாவும், ஆதரவும் பயனாகவிருக்கும்.

முதல் சில பத்திகள் கீழே:

குசேலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ரொம்பக் கஷ்டப்பட்டு ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார். உயிரைப் பணயம் வைத்து எடுத்துக் கொண்ட அந்தப் படம் உள்ள செல்பேசி தொலைந்து போய் விட்டால் எப்படியிருக்கும்? 2008-இல் அந்தத் திரைப்படம் வந்த காலத்தில் இன்றுள்ள அளவுக்குப் பலரிடம் ஸ்மார்ட் போன் கிடையாது. இப்போது நூற்றுக்குத் தொண்ணுாற்றொன்பது சதவீதம் பேரை அதுதான் ஆள்கிறது.

வீட்டில் கணினி இருக்கும். கையில் போன் இருக்கும். அனைத்து ஆவணங்களுக்கும் கிளவுடில் ஒரு பிரதி இருக்கும். இருந்தாலும் பலர் பலவற்றைத் தொலைத்து விட்டுப் பைத்தியம் பிடிக்காத குறையாக அலைவதையும் காண்கிறோம். எதனால் இப்படி?

பெருந்தொற்றுக் காலத்தில் அநேகமாக எல்லா கிராமப்புற வீடுகளிலும்கூட கணினி அல்லது செல்போன் வந்துவிட்டது. பிள்ளைகளின் படிப்பு அதற்குக் காரணம். வீட்டில் இருந்தே வேலை பார்க்க வசதியாகப் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கின. இந்த இரு காரணங்களால் கணினி என்பது அரிசி, பருப்பு போன்றதொரு பொருளாகிப் போனது. ஆனால் எவ்வளவு பேர் அதைச் சரியாகப் பராமரிக்கிறார்கள்? அலுவலகக் கணினி என்றால் அதற்கெனவே இருக்கும் விண்டோஸ் வல்லுநர்களின் கண்காணிப்பு இருக்கும்.

சரியாக இருக்கிறது, பாதுகாப்பான செயலிகள் மட்டும் இயங்குகின்றன, கணினியில் இருக்கும் முக்கியப் படங்கள், தரவுகள் எல்லாம் நிகழ் நேரத்தில் பதிவு எடுத்துப் பாதுகாக்கப்படுகிறது என்பதை எல்லாம் அவர்களே உறுதிசெய்து கொள்வார்கள். நாம் அவர்களின் பரிந்துரையைத் தாண்டி கணினிக்கு எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும். அது பாதுகாக்கப்பட்டு விடும்.

அதுவே நம் சொந்தக் கணினி என்றால் நிலைமை வேறு. நிறைய பிரச்சனைகள் இருக்கும். எழுத்தாளர், புகைப்படக் கலைஞர், சமூக வலைத்தளப் பிரபலங்கள் பலருக்கும் கணினி மூலமாகத்தான் இன்றைக்கு வருமானமே. அவர்கள் தம் கணினி நல்ல முறையில் இயங்கப் பாதுகாப்புகளைத் தாமேதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதில் உள்ள முக்கியத் தரவுகள் தொலைந்துவிடாமல் தாமே கண்காணிப்பாளராகவும் செயல்பட்டாக வேண்டும். எப்படி?

முதலில் உங்கள் கணினியின் இயங்கு தளம் என்ன, அதன் பதிப்பு எண் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதை இங்கே நான்கு பிரிவாகப் பார்க்கலாம்.

தொடர்ந்துப் படிக்க..

#madraspaper #LaptopPC #WindowsPC

Categorized in: