கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?” என்றார். அங்கே இருக்கிறது சூட்சுமம்!

இது வேண்டாம்!
வாரிசு என்றால் என்ன, வாரிசுச் சான்றிதழ், வாரிசுப் பிரச்சனை என்று வாரிசு சம்பந்தப்பட்ட பலவற்றைத் தேட வேண்டும். ஒவ்வொன்றாக (வாரிசுச் சான்றிதழ், வாரிசுப் பிரச்சனை) எனத் தனித்தனியாக உள்ளிட்டுத் தேடுவது சிரமம். “வாரிசு” என சுருக்கமாக தேடினால், முதல் பல பக்கங்களுக்கு வருவது நடிகர் விஜய்யின் திரைப்படச் செய்திகள் தான்.

கூகுளிடம் எதைத் தேட வேண்டும் என சொல்ல நமக்கு தெரியும். எதைத் தேட வேண்டாம் அல்லது வரும் விடையில் எவை இடம்பெற வேண்டாம் எனச் சொல்ல முடிந்தால், பல சமயங்களில் நமது வேலை சுலபமாகும். அதைச் செய்ய இருக்கிறது கழித்தல் (-) குறியீடு.

கூகுளில் “வாரிசு -விஜய்” (படிக்க எளிதாக இருக்க மேற்கோள் குறிகளை இங்கே கொடுக்கிறேன். நீங்கள் உள்ளிடும் போது மேற்கோள் குறிகளை விட்டுவிடவும்) என்று தேடவும். இப்போது வரும் விடைப் பட்டியலில் திரைப்பட செய்திகள் விடுபட்டிருக்கும்.

இந்தக் கட்டுரையை தொடர்ந்துப் படிக்க (2 நவம்பர் 2022), மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா எடுக்கவும்!

Categorized in:

Tagged in:

,