இப்பொழுதெல்லாம் நவராத்திரி கொலுவுக்கு வீட்டுக்கு வரும் விருந்தினர்களில் பெரும்பாலனோர் எது சாப்பிடக் கொடுத்தாலும் வேண்டாம் என்று நழுவிக் கொள்கிறார்கள். அது ஆரோக்கியமான சுண்டலானாலும் சரி, பாயசமானாலும் சரி, காப்பி, டீ என்றாலும் வேண்டாம் என்கிறார்கள். யாரையும் நான் குறை சொல்லவில்லை, இன்று இருக்கும் போக்குவரத்து நெருக்கடியில், வேலைக்கு நடுவில் நம் வீட்டுக்கு அவர்கள் வருவதே பெரிய விஷயம், நாம் நன்றி சொல்ல வேண்டியது உண்மை.

ஒவ்வொருவருக்கும் ஓர் உடல் உபாதை இருக்கலாம். சிலர் நாகரீகம் கருதி வேண்டாம் என்று சொல்லலாம். நிறைய நண்பர்களின் வீடுகளுக்கு ஒரே நாளில் போக வேண்டியிருப்பதால், எல்லா இடத்திலும் சாப்பிட முடியாது, அதனாலும் வேண்டாம் என்று தவிர்த்து விடலாம். நம்முடைய சாப்பாடு முறையும் மாறி வருகிறது – சிலர் பாலியோ என்கிறார்கள் – அதற்காகப் பன்னீர் டிக்காவை கொலுவுக்குக் கொடுக்கலாம் என்றால் அம்மாவிடமிருந்தே எனக்கு அடிவிழும். தனிப்பட்ட காரணங்களை விடுத்து நான் இதைப் பொதுவான காலப்போக்காக (டிரெண்ட்டாக) பார்க்கிறேன்.  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிறுவர்கள் அதிகம் இன்று கொலுவுக்கு வருவதில்லை, நான் சிறுவனாக இருந்த சமயம் சுண்டலுக்காகவே அம்மாவோடு தொத்திக்கொண்டு செல்வேன். என்ன சொல்ல, காலங்கள் மாறுகிறது. இன்றும் கொலு போன்ற பண்டிகைகள் நம்மோடு இருப்பதே பெரிய விஷயம், அதற்கே நன்றி!

நவராத்திரி பட்டாணி சுண்டல்

நவராத்திரி பட்டாணி சுண்டல்

Tagged in:

,