போன வாரம் ஒரு வேலை நாளில், மதியத்தில் மூன்று இளைஞர்கள் மோட்டார்பைக்கில் வீட்டு வாசலில் நின்றிருந்தார்கள். கூரியர் கொடுக்க வந்திருப்பார்கள் என எண்ணி, உள்ளே வந்துவிட்டோம், சில நிமிடங்கள் கழித்து சந்தேகம் கொண்டு வெளியில் பார்த்தால் சுற்றுச்சுவருக்குள் இருந்த வாகன நிறுத்தகத்தில் இருந்த தண்ணீர் மீட்டர் இருக்கும் குழியின் மேலே இருந்த இரும்பு மூடியைத் தூக்கிக் கொண்டு வேகமாக உந்துருளியில் போய்விட்டார்கள். இது நடந்தது சென்னையின் முக்கியப் பகுதியான இராயப்பேட்டையில்.

இணையத்தில் தேடிப் பார்த்தால் ஓர் இரும்பு மூடி, சுமார் எட்டாயிரம் ரூபாய், அதைத் திருடி விற்றால் நிச்சயம் ஆயிரம் ரூபாயாவது கிடைக்கும் – ஒரு நாளுக்கு ஆளுக்கு குவார்ட்டர் புட்டியும், சிற்றுண்டியும் வசதியாகக் கிடைக்கும்.

திறந்திருக்கும் குழியில் வருவோர் விழுந்துவிடுவார்கள் என்பதால், அவசரமாக அடுத்த நாளே ஆட்களை அழைத்து, ஃபைபர் பாலிமர் மூடி வாங்கிப் போட்டோம். எங்களுக்கு மொத்தச் செலவு ஐயாயிரம் ரூபாய்க்கு மேல்.

பல ஆண்டுகளாக இந்த மாதிரி சின்ன திருட்டையெல்லாம் சென்னையில் நேரடியாக நான் கேள்விப்படவில்லை, நடக்கவில்லை என்று சொல்லவில்லை, எனக்குத் தெரியவரவில்லை, கரோனா காலத்தில் மக்கள் பயங்கரக் கஷ்டத்தில் இருந்த போதும் இது நடக்கவில்லை. எங்கள் துரதிர்ஷ்டம் என்று தான் கொள்ளவேண்டும்!

Categorized in:

Tagged in: