• சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - நூல் வெளியீட்டு விழா - 14 மார்ச் 2020
  Book Review,  Chennai,  Events,  தமிழ்

  Sinthai Kavarntha Thiruvizhakkal

  நல்லவனுக்கு மட்டும்தான் வாழ்க்கை திருவிழாவாகிறது – ரால்ப் வால்டோ எமர்சன். ஊரெல்லாம், சமூக வலைத்தளங்களில், செய்திகளில் “கொரோனா, கொரோனா” என்ற அச்சப் படுத்திக் கொண்டிருக்கும் போது – உலகத்தின் மீதும், மக்களின் மீதும், நம்பிக்கையை, நமக்கு கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்தும் வகையில் நடந்தது இந்த நிகழ்ச்சி. என்ன நிகழ்ச்சி என்று கேட்கிறீர்களா? திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின் புதிய பயணக்கட்டுரைத் தொகுப்பான “சிந்தை கவரும் திருவிழாக்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா தான் அது. புத்தகங்களைப் படிப்பது குறைந்திருக்கும் இன்றைய காலத்தில், புத்தகங்களை வாங்குவது என்பதே அரிதாகவிட்டது, ஒரு புத்தகத்தை விற்பனைக்கு எடுத்துச் சென்று சாதிப்பது மிகப் கடினமான ஒன்று, அப்படிப்பட்ட சூழலில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் பார்வையாளர்கள் வருவதே மிகவும் அரிது – இதையெல்லாம் முறியடிக்கும் விதத்தில் இருந்தது நேற்றைய (14 மார்ச் 2020) மாலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா. ரம்மியமான மாலைப் பொழுதில், சென்னை கோட்டூர்புரத்தில், மாளிகை போன்ற ஒரு வீட்டின்…

 • Book Review,  Faith,  Rostrum,  தமிழ்

  Sri Ramanujarudan Oru Naal – A book on Gurus of Sri Vaishnavism

  24 செப்டம்பர் 2020: இன்று முதல் அமேசான் கிண்டிலில் மின்-புத்தகமாகக் கிடைக்கிறது: Amazon Kindle Ebook available from today. சில சமயம், நாம் எதேச்சையாக ஒரு விஷயத்தை ஆரம்பிக்க, அது பகவத் கிருபையால் சற்றே பெரிதாக வெளிவந்து விடுகிறது. அப்படித்தான் இந்த புத்தகமும். சென்ற ஆண்டு எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு வைபவத்திற்காக, வந்திருந்த விருந்தாளிகளுக்கு அன்பளிப்பாக எதைக் கொடுப்பது என்று யோசித்தபோது – வழக்கமான பரிசுகளான இனிப்புகள், பிளாஸ்டிக் பொருட்களுள், துணிகள் இவற்றைக் கொடுக்காமல், நம் சம்பிரதாய விஷயங்களை ஒரு புத்தகமாக கொடுக்கலாம் என்று யோசித்தோம். உடனடியாக எங்கள் நினைவுக்கு வந்தது திரு சுஜாதா தேசிகன் அவர்களின் எழுத்துக்கள்தான். அவர் சமீபகாலங்களில் முகநூலில் ஸ்ரீ ராமானுஜர் அவர்களின் ஆயிரமாம் ஆண்டு நினைவாக பல கட்டுரைகளை எழுதியிருந்தார், அதுபோலவே சுவாமி தேசிகர் மற்றும் பிற வைணவ ஆச்சாரியர்கள் பற்றி சுவாரஸ்யமாக, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதி இருந்தார். திரு தேசிகன் அவர்களை தொடர்புகொண்டு அவரின் கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தொகுத்து கொடுக்க…

 • Mudumalai Forest Elephant
  Book Review,  தமிழ்

  Elephant Doctor – a short story by Jeyamohan

  எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் “யானை டாக்டர்” என்ற ஒரு சிறுகதையை நேற்றுப் படித்தேன். 35 பக்கங்களுக்கு மேல் போகும் இந்தக் கதை, 2011இல் அவரது வலைப்பதிவில் எழுதப்பட்டது. முழுவதும் அங்கேயே கிடைக்கிறது. என் பையன் பல மாதங்களுக்கு முன் படித்துவிட்டு எனக்கு லிங்க் அனுப்பிருந்தான், நேற்று தான் படித்தேன், ரசித்தேன். டாப்ஸ்லிப்பில் இருக்கும் யானைகளைக் குணப்படுத்தும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பற்றி, அவரை அருகிலிருந்து பார்க்கும் வனத்துறைக்குப் புதிதாக வந்த ஒரு இளம் அதிகாரியின் பார்வையில் எழுதப்பட்டது. ஆவணப்படம் போன்ற ஒரு கதை. சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை. யானைகளைப் பற்றியும் காட்டைப் பற்றியும் சில விசயங்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது. படித்துப் பாருங்கள், பிடிக்கும் என நினைத்துப் பகிர்கிறேன். Chapter 1, Chapter 2 and Chapter 3. //காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல், மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும் சாரலும் குளிருமாக இருக்கும் இந்தக்காட்டில் பெரும்பாலானவர்கள் எட்டுமணிக்கே தூங்கிவிடுகிறார்கள்.…

 • The Adventures of Morty: The Famous Turtle Detective is Here!
  Book Review,  Kids

  The Adventures of Morty by Shraddha Anu Shekar

  With all the unpleasant news going around us, I felt like reading a book that was fun and light. What’s better for doing this than a kids genre book? I went to my son’s bookshelf to find this small book (64 pages) which was written a few years ago. The vibrant blue hues and the picture of a cute little girl drew me to it. The book titled “The Adventures of Morty”: The Famous Turtle Detective is Here! was written by Shraddha Anu Shekar, her parents Pravin Shekar and Anu Krishnamoorthy are good friends of mine. The book is a short story compilation of the adventures of a little girl…

 • LIFCO's Big Letter Writer (1952)
  Book Review,  Flashback,  Lounge

  LIFCO’s Big Letter Writer (1952)

  The other day I had visited my elder aunt’s house, there below the stairs, I found this old metal (tin) box. I was saddened to see the box being used for storing old keys, nails, and screws – nearly sixty years ago, in its glory days, the box held inside it a treasure trove of language wisdom – one of the two magnum-opus publication by my grandfather Sri Krishnaswamy Sarma (Sarmaji). It had inside it a hefty book of over 1500 pages celebrating, teaching, and sharing the joy of the art that is almost lost nowadays, the art of letter writing. The book was called “LIFCO’s Big Letter Writer”, first…