24 செப்டம்பர் 2020: இன்று முதல் அமேசான் கிண்டிலில் மின்-புத்தகமாகக் கிடைக்கிறது: Amazon Kindle Ebook available from today.

சில சமயம், நாம் எதேச்சையாக ஒரு விஷயத்தை ஆரம்பிக்க, அது பகவத் கிருபையால் சற்றே பெரிதாக வெளிவந்து விடுகிறது. அப்படித்தான் இந்த புத்தகமும்.

சென்ற ஆண்டு எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு வைபவத்திற்காக, வந்திருந்த விருந்தாளிகளுக்கு அன்பளிப்பாக எதைக் கொடுப்பது என்று யோசித்தபோது – வழக்கமான பரிசுகளான இனிப்புகள், பிளாஸ்டிக் பொருட்களுள், துணிகள் இவற்றைக் கொடுக்காமல், நம் சம்பிரதாய விஷயங்களை ஒரு புத்தகமாக கொடுக்கலாம் என்று யோசித்தோம். உடனடியாக எங்கள் நினைவுக்கு வந்தது திரு சுஜாதா தேசிகன் அவர்களின் எழுத்துக்கள்தான். அவர் சமீபகாலங்களில் முகநூலில் ஸ்ரீ ராமானுஜர் அவர்களின் ஆயிரமாம் ஆண்டு நினைவாக பல கட்டுரைகளை எழுதியிருந்தார், அதுபோலவே சுவாமி தேசிகர் மற்றும் பிற வைணவ ஆச்சாரியர்கள் பற்றி சுவாரஸ்யமாக, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுருக்கமாக எழுதி இருந்தார்.

திரு தேசிகன் அவர்களை தொடர்புகொண்டு அவரின் கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தொகுத்து கொடுக்க முடியுமா? அவற்றை புத்தகமாக போட்டு, பரிசாக கொடுக்க உத்தேசம் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் பெருந்தன்மையாக அதற்கு உடனடியாக சம்மதம் கூறி, முத்தான சில கட்டுரைகளை தொகுத்தளித்தார்.

விழாவிற்காக நாங்கள் 500 பிரதிகள் போட்டிருந்தோம், புத்தகத்தை வாங்கியவர்கள் பலரும் அவர்கள் நண்பர்களிடம் காண்பிக்க, அவர்கள் எங்களை அழைத்து பிரதிகள் கேட்க, மேலும் பல நூறு பிரதிகள் போட, அவையும் உடனடியாக கொடுத்துத் தீர்ந்து போய் விட்டது.

இதற்கு நடுவில், நாங்களே எதிர்பாரா வண்ணம், (பகவத் கிருபை என்பது இது தான் போல்) புத்தகத்தின் முதல் பிரதி வெளிவந்தவுடன், ஸ்ரீ அகோபில மடத்தின் 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள், மேலும் ஸ்ரீமத் பரமஹம்ஸ திருப்பதி சின்ன ஜீயர், மற்றும் ஸ்ரீநாத் பரமஹம்சர் திருப்பதி பெரிய ஜீயர், ஆகிய மூவரின் திருக்கரங்களில் இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கும் பெரிய பாக்கியம் கிடைத்தது. அவர்களின் ஆசீர்வாதத்தால், மேலும் பல நண்பர்கள் பிரதிகளை கேட்க- இந்த புத்தகத்தை இன்னும் பலருக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆகும் செலவை ஒரு விலை வைத்து வணிக முறையில் பிரசுரித்தால் தான் தொடர்ந்து செய்ய முடியும் என்பதால், இந்த புத்தகத்தை இப்போது விற்பனைக்கு இரண்டாவது பதிப்பாக வெளியிட்டு இருக்கிறோம்.

நல்ல விஷயங்களை பலருக்கும் போய்ச் சேரும்படி செய்வதே ஒரு பாக்கியம் தானே!

திரு சுஜாதா தேசிகன் எழுதியிருக்கும் இந்த “ஸ்ரீ இராமானுஜருடன் ஒரு நாள்” என்கிற இந்த புத்தகம் இப்போது உங்களது அபிமான இணைய-கடைகளில் (Links to Amazon, Flipkart & Dial for Books are at the bottom) கிடைக்கிறது. விலை ரூபாய் 130 | Pages: 96 + 12 colour pages.

Buy from Amazon | Buy from Flipkart | Buy from NHM Online | Buy Kindle ebook
புத்தகத்தின் முன்னுரை

புத்தகத்தின் முன்னுரை

புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ தேசிகர் மற்றும் பல வைணவ ஆச்சாரியர்களின் திருஉருவ வண்ணப்படங்கள் (Ethirajan Srinivasan & Sujathan Desikan) கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி வந்துள்ளது. சில புத்தகங்களை நாம் வாங்கி, சில பக்கங்களை படித்து பிறகு, படிக்கலாம் என்று வைத்து விடுவோம். ஆனால் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினால், ஆசிரியரின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு முழுவதையும் ஒரே அமர்வில் படித்து முடித்து விடுவீர்கள்.

இந்த இரண்டாவது பதிப்பை வெளியிட எனது சிறிய நிறுவனத்திற்கு (Little Feet Services Pvt Ltd) அனுமதி அளித்த ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றிகள். புத்தகத்தின் முதல் பதிப்பை அழகாக அச்சுக் கோர்த்து, தயாரித்துக் கொடுத்த PM Digital (பழனியப்பா பிரதர்ஸ்) நிறுவனத்திற்கு நன்றிகள். மேலும் இரண்டாவது பதிப்பு சந்தையில் விற்பனைக்கு கொண்டு போகும் கிழக்கு பதிப்பகத்திற்கு (Dial for Books ) என் நன்றிகள்.

உங்கள் பார்வைக்காகப் புத்தகத்திலிருந்து ஓரிரு பக்கங்கள்

உங்கள் பார்வைக்காகப் புத்தகத்திலிருந்து ஓரிரு பக்கங்கள்

Buy from Amazon | Buy from Flipkart | Buy from NHM Online | Buy Kindle ebook

Tagged in: