-
Dubliners by James Joyce in Tamil
100 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜேம்ஸ் ஜாய்ஸ்’ (James Joyce) என்ற பிரபல அயர்லாந்து எழுத்தாளர் எழுதிய புத்தகம் Dubliners [Available for free at Project Gutenberg). இதை தமிழினி பதிப்பகம், “டப்ளின் நகரத்தார்” என்று வெளியிட்டிருக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தது திரு க.ரத்னம் அவர்கள். இந்தப் புத்தகத்தை தமிழிலோ ஆங்கிலத்திலோ நீங்கள் படித்திருக்கிறீர்களா? நேற்று நான் படிக்க ஆரம்பித்தேன், சில பக்கங்களை தாண்ட முடியவில்லை, ஏனோ மொழிநடை சரளமாக செல்லவில்லை, ஒவ்வொரு பத்தியையும் இரண்டு, மூன்று முறை படித்தால்தான் புரிகிறது. இது மொழிபெயர்ப்பு பிரச்சனையா?, அல்லது ஆங்கில மூலமே இப்படிதான் சிக்கலாக செல்லுமா?, தெரியவில்லை. ஒன்றிரண்டு பக்கங்களை இதோடு இணைத்து இருக்கிறேன், எனக்கு தான் புரியவில்லையா? உங்கள் கருத்து என்ன?
-
Ask an Astronaut by Tim Peake
Ask an Astronaut by Mr Tim Peake: This is a free-flowing book, mostly Q & A format, addressing numerous questions we may have about travelling to space, what it takes to be an astronaut, and how is life in space. I enjoyed this book a lot, gave me strong hope that humanity which has overcome odds to go to space and moon will certainly survive the current crisis and come out stronger than ever. Mr Tim from the U.K. was an astronaut representing European Space Agency (ESA) abroad the International Space Station (ISS) for a 186-day Principia mission in 2016. If you thought that was impressive, check his earlier experiences…
-
Kangaluku Appaal Idayathirku Arugil by Thiru Maalan
கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் தேர்வும், தொகுப்பும்: திரு மாலன் அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தமிழ்நாட்டிற்கு வெளியில் வாழும் தமிழ் வாசகர்களுக்கு, தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அறிமுகமானவர்கள், அவர்களின் படைப்புகள் பலவற்றையும் படித்து இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் வாசகர்களுக்கு வெளிநாட்டுத் தமிழ் எழுத்தாளர்களைத் தெரிந்திருப்பதில்லை அவர்களின் படைப்புகளை வெகுசிலரே இங்கே படித்துள்ளார்கள். இந்தக் குறையைச் சரி செய்யும் திசையில் “சாகித்திய அகாடமி” 2015ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் சிறப்பான படைப்புகளிலிருந்து தொகுத்து ஒரு புத்தகமாகத் தமிழ் வாசகர்களுக்காகக் கொடுத்துள்ளார்கள். கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் என்ற இந்தப் புத்தகத்தை எழுத்தாளர், பத்திரிகையாளர், என் நண்பர் திரு மாலன் அவர்கள் தொகுத்துள்ளார். புத்தகத்தின் பதினாங்கு வெளிநாட்டுத் தமிழர்களின் 14 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு விதம், ஒவ்வொன்றும் எழுதப்பட்டுள்ளது அவர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் சூழலைப் பொறுத்து, அவர்கள் இழந்துவிட்ட வாழ்வை நினைத்து, அது எழுத்தாளரின் மேல் செய்த தாக்கத்தை வெளிப்படும் விதமாக …
-
Chengis Khan by SLV Moorthy
“செங்கிஸ்கான்” – திரு எஸ். எல். வி. மூர்த்தி பள்ளிப் பாடங்களில் மேலோட்டமாகப் படித்ததற்குப் பிறகு செங்கிஸ்கானை நான் அறிந்துக் கொண்டது திரு கோபு அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் டை-சென்னை 2016 (TiECON Chennai 2016) மாநாட்டில் “Genghis Khan and the Making of the Modern World by Jack Weatherford” என்கிற புத்தகத்தைப் பற்றி விவரமாகப் பேசியப் போது. அதிலிருந்து இந்த மங்கோலிய மன்னனை தெரிந்துக் கொள்ள விரும்பினேன். அதற்காக இந்த வருட சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கியது, எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் – செங்கிஸ்கான், அதை இந்த வாரம் படித்தேன். நல்ல சரளமான நடையில் ஒரு நாவலை போல் விரிகிறது செங்கிஸ்கானின் கதை. நாடோடியாக இருந்த இனத்தவர்கள் (ஒரே நாட்டினர் என்றுக் கூட சொல்ல முடியாது) எப்படி ஒரு தலைவனின் கீழ் வந்தவுடன் உலகின் பெரும் பகுதியை வென்று ஆட்சிச் செய்யும் அளவிற்கு வந்தார்கள் என்றுப் படிக்கும் போது பிரமிப்பாக…
-
The Tech Whisperer by Jaspreet Bindra
I know Mr Jaspreet Bindra from his days with Microsoft India where he was heading the MSN India Portal; over the years I am happy to have him as a well-wisher and friend. Jaspreet is one of those business leaders who see technology as only a solution to a problem but on how it can help customers and increase business value. In his last role, he was the Vice-President at the Mahindra Group, India leading their digital transformation efforts – not an easy task considering Mahindra is a $20 billion conglomerate with interest across industries including Automotive, Agriculture, Defence, Finance, Retail, Hospitality and many more. In his informative talk at…
-
Chandamama magazine archives are available for free
Chandamama was a classic Indian monthly magazine for children, famous for its illustrations, publishing mythological/magical stories. It was started in 1947 by Sri B.Nagi Reddy and Sri Chakrapani, noted South Indian Filmmakers. A couple of generations of kids grew up reading, dreaming and enjoying “Chandamama” children’s magazine, and, its various local language editions like அம்புலிமாமா – of which I was an avid reader and enjoyed reading during my school days. The magazine house shut shop many years ago, but its past editions from 1948 till 2009 are now available in Internet Archives and from Chandamama dot in (a fan site) as PDFs. I randomly picked the September 1955 issue and…
-
Marangalum Manidhargalum by Smt Santhakumari Sivakadaksham
திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் எழுதியுள்ள “மரங்களும் மனிதர்களும்” ஒரு சிறுகதைத் தொகுப்பு. “கம்ப்யூட்டர் கிராமம்” கதையில் ஒரு மரத்தை வைத்து அறிவியல் சொல்லியிருப்பார் எழுத்தாளர் திரு சுஜாதா, அதுப் போல இங்கேயுள்ள பத்துக் கதைகள் செய்துள்ளார் நூலாசிரியர் – ஒவ்வொரு கதையும் ஒரு மரத்தை மையமாக வைத்துப் புனையப்பட்டுள்ளது. வெறும் மரத்தைப் பற்றி எழுதினால் அது ஒரு தாவரவியல் பாடமாக மாறி அலுப்புத் தட்டும், அதற்காகவே ஒவ்வொரு மரத்தைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் குடும்பத்தின் சுக, துக்கங்களை சுவாரஸ்யமாகக் கலந்துள்ளார். எல்லாக் கதைகளும் அபாரம். ஆனால், ஏனோ பெரும்பாலானக் கதைகளில் ஒரு சோகம் இழையோடுகிறது – அது கதைகளுக்குப் பொருத்தமாகத் தான் இருக்கிறது, ஆனாலும் நம் கண்களை ஈரமாக்குகிறது. முதல் கதை “முருங்கை மரம்” : குமணன்-கற்பகம் ஒரு எடுத்துக்காட்டான தம்பதியினர், குமணன் பல வருடங்களாகவே ஒரு முருங்கை மரத்தை ஆசையாக வளர்க்கிறான், அவன் அம்மாவைக் கூட நம்ப மாட்டான், அவனே தான் அந்த மரத்திற்குத் தண்ணீர் ஊற்றி, பாதுகாத்து வளர்க்கிறான். இப்படி…
-
Sinthai Kavarntha Thiruvizhakkal
நல்லவனுக்கு மட்டும்தான் வாழ்க்கை திருவிழாவாகிறது – ரால்ப் வால்டோ எமர்சன். ஊரெல்லாம், சமூக வலைத்தளங்களில், செய்திகளில் “கொரோனா, கொரோனா” என்ற அச்சப் படுத்திக் கொண்டிருக்கும் போது – உலகத்தின் மீதும், மக்களின் மீதும், நம்பிக்கையை, நமக்கு கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்தும் வகையில் நடந்தது இந்த நிகழ்ச்சி. என்ன நிகழ்ச்சி என்று கேட்கிறீர்களா? திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின் புதிய பயணக்கட்டுரைத் தொகுப்பான “சிந்தை கவரும் திருவிழாக்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா தான் அது. புத்தகங்களைப் படிப்பது குறைந்திருக்கும் இன்றைய காலத்தில், புத்தகங்களை வாங்குவது என்பதே அரிதாகவிட்டது, ஒரு புத்தகத்தை விற்பனைக்கு எடுத்துச் சென்று சாதிப்பது மிகப் கடினமான ஒன்று, அப்படிப்பட்ட சூழலில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் பார்வையாளர்கள் வருவதே மிகவும் அரிது – இதையெல்லாம் முறியடிக்கும் விதத்தில் இருந்தது நேற்றைய (14 மார்ச் 2020) மாலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா. ரம்மியமான மாலைப் பொழுதில், சென்னை கோட்டூர்புரத்தில், மாளிகை போன்ற ஒரு வீட்டின்…